![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: எட்டிகுடி
831 உரமுற் றிரு 834 மைக்குழல் ஒத்த 833 கடல் ஒத்த விடம் 832 ஓங்கும் ஐம்புல
831
எட்டிகுடி உரமுற் றிரு தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் ...... திடமாயே
உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
தமிதக் கெறுவத் ...... துடன்வீறு
தரமொத் துபயக் களபத் தளமிக்
கவனத் தருணத் ...... தனமீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித்
தவமற் கவிடுத் ...... துழல்வேனோ
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
கருமைத் திருமைத் ...... துனவேளே
அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
தசுரப் படையைப் ...... பொருவோனே
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
தகமுத் தமிழைப் ...... பகர்வோனே
பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
பதியிற் குமரப் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
832
எட்டிகுடி ஓங்கும் ஐம்புல தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Oa5BmTLlFCM
Add (additional) Audio/Video Link
833
எட்டிகுடி கடல் ஒத்த விடம் தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த ...... தனதானா
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த ...... விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு ...... மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
834
எட்டிகுடி மைக்குழல் ஒத்த தத்தன தத்தன தானா தானா
தத்தன தத்தன தானா தானா
தத்தன தத்தன தானா தானா ...... தனதான
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ
மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ
வத்திர மெய்ச்சசி தானோ நாணா
குத்துமு லைக்கிள நீரோ மேரோ
வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர்
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
லச்சைய றப்புணர் வாதே காதே
சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
தற்சமை யத்தக லாவே னாதா
தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா
சித்தசன் மைத்துன வேளே தோளார்
மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே
முத்தமிழ் வித்வவி நோதா கீதா
மற்றவ ரொப்பில ரூபா தீபா
முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே
இக்குநி ரைத்தவி ராலுார் சேலூர்
செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா
எச்சுரு திக்குளு நீயே தாயே
சுத்தவி றற்றிறல் வீரா தீரா
எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000