|
616
கொங்கணகிரி ஐங்கரனை |
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தத்ததன ...... தனதான |
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.
|
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு.....அருள்வாயே அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தியுனை அன்பொடு துதிக்க மனம்.....அருள்வாயே தங்கிய தவத் துணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி.....அருள்வாயே தண்டிகை ககனப்பவுசு எண்டிசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே.....அருள்வாயே மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்றமனம் உன்றனை நினைத் தமைய.....அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை.....அருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள்.....அருள்வாயே குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு கொங்கண கிரிக்குள் வளர்.....பெருமாளே. |
| Audio/Video Link(s) |
|
https://www.youtube.com/watch?v=7X7VGme9_n4
|
|
https://www.youtube.com/watch?v=3bNBHSMDPC4
|
Add (additional) Audio/Video Link
|