![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: கோடைநகர்
703 ஆதிமுதன் நாளில் 709 வாசித்த நூல் 708 தோள் தப்பாமல் 707 தோழமை கொண்டு 706 ஞால மெங்கும் 705 ஏறு ஆனாலே 704 சாலநெடு நாள்
703
கோடைநகர் ஆதிமுதன் நாளில் தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் ...... முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த ...... குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=kbAE5HyBmrQ
https://www.youtube.com/watch?v=ynoLti8jCw8
Add (additional) Audio/Video Link
704
கோடைநகர் சாலநெடு நாள் தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து ...... புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு ...... தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட ...... குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
705
கோடைநகர் ஏறு ஆனாலே தானா தானா தானா தானா
தானா தானா ...... தனதானா
ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக் ...... கணையாலே
ஏயா வேயா மாயா வேயா
லாமே ழோசைத் ...... தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக் ...... கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத் ...... தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக் ...... குமரேசா
தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் ...... பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப் ...... பொருதோனே
வேதா போதா வேலா பாலா
வீரா வீரப் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
706
கோடைநகர் ஞால மெங்கும் தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ZE9YiGpflcc
Add (additional) Audio/Video Link
707
கோடைநகர் தோழமை கொண்டு தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=sALiGdwEljw
Add (additional) Audio/Video Link
708
கோடைநகர் தோள் தப்பாமல் தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதான
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற் ...... றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச் ...... சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் ...... டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் ...... தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
தாரச் சீறிப் ...... பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் ...... தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் ...... திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
709
கோடைநகர் வாசித்த நூல் தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த ...... தனதான
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000