சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருக்குற்றாலம்
975   ஏடுக்கொத் தாரலர்     976   வேதத்திற் கேள்வி     977   முத்தோலை தனை    
975   திருக்குற்றாலம்   ஏடுக்கொத் தாரலர்  
தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான

ஏடுக்கொத் தாரலர் வார்குழ
     லாடப்பட் டாடைநி லாவிய
          ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர்
ஏதத்தைப் பேசுப ணாளிகள்
     வீசத்துக் காசைகொ டாடிகள்
          ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர்
மாடொக்கக் கூடிய காமுகர்
     மூழ்குற்றுக் காயமொ டேவரு
          வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய்
மாசுற்றுப் பாசம்வி டாசம
     னூர்புக்குப் பாழ்நர கேவிழு
          மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே
தாடுட்டுட் டூடுடு டீடிமி
     டூடுட்டுட் டூடுடு டாடமி
          தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி
தானொத்தப் பூதப சாசுகள்
     வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
          சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே
கூடற்கச் சாலைசி ராமலை
     காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்
          கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான
கோதிற்பத் தாரொடு மாதவ
     சீலச்சித் தாதியர் சூழ்தரு
          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.


ஏடுக் கொத்து ஆர் அலர் வார் குழல்
     ஆடப் பட்டு ஆடை நிலாவிய
        ஏதம் பொன் தோள் மிசை மூடிய.....கர மாதர்
ஏதத்தைப் பேசு பண ஆளிகள்
     வீசத்துக்கு ஆசை கொ(ண்)டு ஆடிகள்
        ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு.....முழு மாயர்
மாடு ஒக்கக் கூடிய காமுகர்
     மூழ்கு உற்றுக் காயமொடே வரு
        வாயுப் புல் சூலை வியாதிகள்.....இவை மேலாய்
மாசுற்றுப் பாசம் விடா
     சமனூர் புக்குப் பாழ் நரகே விழு
        மாயத்தைச் சீவி உன் ஆதரவு.....அருள்வாயே
தாடுட்டுட் டூடுடு டீடிமி
           டூடுட்டுட் டூடுடு டாடமி
                   தானத்தத் தானத னா என.....வெகு பேரி
தானொத்தப் பூத பசாசுகள்
     வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
        சாகப் பொன் தோகையில் ஏறிய.....சதிரோனே
கூடல் கச்சாலை சிராமலை
     காவைப் பொன் காழி வெளூர் திகழ்
        கோடைக் கச்சூர் கருவூரிலும்.....உயர்வான
கோது இல் பத்தாரொடு மா தவ
     சீலச் சித்தாதியர் சூழ் தரு
        கோலக் குற்றாலம் உலாவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

976   திருக்குற்றாலம்   வேதத்திற் கேள்வி  
தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான

வேதத்திற் கேள்வி யிலாதது
     போதத்திற் காண வொணாதது
          வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
     ஆதித்தற் காய வொணாதது
          வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
     காதத்திற் பூவிய லானது
          வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு
மாயத்திற் காய மதாசல
     தீதர்க்குத் தூரம தாகிய
          வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே
காதத்திற் காயம தாகும
     தீதித்தித் தீதிது தீதென
          காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
     வாதைப்பட் டேமதி தீதக
          லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
     ரூபைப்பெற் றேவன வேடுவர்
          கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
     சீலச்சித் தாதியர் சூழ்தரு
          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.


வேதத்திற் கேள்வி யிலாதது
     போதத்திற் காண வொணாதது
        வீசத்தில் தூர மிலாதது.....கதியாளர்
வீதித்துத் தேட அரிதானது
     ஆதித்தற் காய வொணாதது
        வேகத்துத் தீயில் வெகாதது.....சுடர்கானம்
வாதத்துக்கே அவியாதது
     காதத்திற் பூ இயலானது
        வாசத்தில் பேரொளி யானது.....மதமூறு
மாயத்திற் காய மதாசல
     தீதர்க்குத் தூரமது ஆகிய
        வாழ்வை சற்காரமதா இனி.....யருள்வாயே
காதத்திற் காயமதாகும்
     மதீ தித்தித் தீதிது தீதென
        காதற்பட் டோதியு மேவிடு.....கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
     வாதைப்பட்டே மதி தீதகலாமற்
        கெட்டே தடுமாறிட.....அடுவோனே
கோதைப்பித்தாய் ஒரு வேடுவ
     ரூபைப்பெற்றே வன வேடுவர்
        கூடத்துக்கே குடி யாய்வரு.....முருகோனே
கோதிற்பத்தாரொடு மாதவ
     சீலச்சித்தாதியர் சூழ்தரு
        கோலக்குற் றாலம் உலாவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=pUt6wT5lypg
Add (additional) Audio/Video Link

Back to Top

977   திருக்குற்றாலம்   முத்தோலை தனை  
தத்தான தனத்த தத்தன
     தத்தான தனத்த தத்தன
          தத்தான தனத்த தத்தன ...... தனதான

முத்தோலை தனைக்கி ழித்தயி
     லைப்போரி கலிச்சி வத்துமு
          கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார்
முற்றாதி ளகிப்ப ணைத்தணி
     கச்சார மறுத்த நித்தில
          முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே
வித்தார கவித்தி றத்தினர்
     பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு
          வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ
மெய்த்தேவர் துதித்தி டத்தரு
     பொற்பார்க மலப்ப தத்தினை
          மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே
பத்தான முடித்த லைக்குவ
     டிற்றாட வரக்க ருக்கிறை
          பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே
பற்பாசன் மிகைச்சி ரத்தைய
     றுத்தாத வனைச்சி னத்துறு
          பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே
கொத்தார்க தலிப்ப ழக்குலை
     வித்தார வருக்கை யிற்சுளை
          கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங்
கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி
     சிற்றாறு தனிற்க ளித்திடு
          குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே.


முத்து ஓலை தனைக் கிழித்து
     அயிலைப் போர் இகலிச் சிவத்து
        முகத் தாமரையில் செருக்கிடும்.....விழி மானார்
முற்றாது இளகிப் பணைத்து அணி
     கச்சு ஆரம் அறுத்த நித்தில
        முத்து ஆரம் அழுத்து உகிர்க் குறி.....அதனாலே
வித்தார கவித் திறத்தினர்
     பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு
        வெற்பான தனத்தினில் நித்தலும்.....உழல்வேனோ
மெய்த் தேவர் துதித்திடத் தரு
     பொற்பு ஆர் கமலப் பதத்தினை
        மெய்ப்பாக வழுத்திட க்ருபை.....புரிவாயே
பத்தான முடித் தலைக் குவடு
     உற்று ஆட அரக்கருக்கு இறை
        பட்டு ஆவி விடச் செயித்தவன்.....மருகோனே
பற்பாசன் மிகைச் சிரத்தை
     அறுத்து ஆதவனைச் சினத்து
        உறு பல் போகவும் உடைத்த தற்பரன்.....மகிழ்வோனே
கொத்து ஆர் கதலிப் பழக் குலை
     வித்தார வருக்கையின் சுளை
        கொத்தோடு உதிரக் கதித்து எழு.....கயல் ஆரம்
கொட்டா சுழியில் கொழித்து எறி
     சிற்றாறு தனில் களித்திடு
        குற்றாலர் இடத்தில் உற்று அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000