சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருச்செங்காட்டங்குடி
813   வங்கார மார்பிலணி    
813   திருச்செங்காட்டங்குடி   வங்கார மார்பிலணி  
தந்தான தானதன தானதன தானதன
     தந்தான தானதன தானதன தானதன
          தந்தான தானதன தானதன தானதன ...... தனதான

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
     கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
          வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
     கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
          வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
     சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
          சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
     வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
          தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
     கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
          சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
     கங்காள வேணிகுரு வானவந மோநமென
          திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
     பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
          யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
     செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
          டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே.


வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
     கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள
        வண்காதில் ஓலைகதிர் போலவொளி வீச இதழ்.....மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
     கொஞ்சார மோககிளி யாகநகை பேசி உற
        வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவென ஆசைமயல்.....இடுமாதர்
சங்காளர் சூதுகொலைகாரர்குடி கேடர் சுழல்
     சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர்
        சண்டாளர் சீசியவர் மாயவலையோடு அடியென்.....உழலாமல்
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயையிருள்
     வெந்தோட மூலஅழல் வீச உபதேசமது
        தண்காதிலோதி இரு பாதமலர் சேரஅருள்.....புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகன நமோநமென
     கந்தாகுமாரசிவ தேசிக நமோநமென
        சிந்தூர பார்வதி சுதாகர நமோநமென.....விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவ நமோநமென
     கங்காள வேணிகுருவானவ நமோநமென
        திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலைவிடு.....முருகோனே
இங்கீத வேதபிரமாவை விழ மோதி ஒரு
     பெண் காதலோடு வன மேவி வளிநாயகியை
        இன்பான தேனிரச மார்முலை விடாதகர.....மணிமார்பா
எண் தோளர் காதல்கொடு காதல் கறியேபருகு
     செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு
        என்காதல் மாலைமுடி ஆறுமுகவா அமரர்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=WbyczXiUL88
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000