![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருத்தவத்துறை
918 கார் அணியும் குழல் 919 நிரைத்த நித்தில
918
திருத்தவத்துறை கார் அணியும் குழல் தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன
தானன தந்தன தத்த தத்தன ...... தனதான
காரணி யுங்குழ லைக்கு வித்திடு
கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே
காதள வுங்கய லைப்பு ரட்டிம
னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப்
பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
சீதள குங்கும மொத்த சித்திர
பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான
போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே
வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட
வீசிய பம்பர மொப்பெ னக்களி
வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா
சீரணி யுந்திரை தத்து முத்தெறி
காவிரி யின்கரை மொத்து மெத்திய
சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே
சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.
கார் அணியும் குழலைக் குவித்து இடு
கோகனகம் கொடு மெத்தெனப் பிறர்
காண வருந்தி முடித்திட கடு.....விரகாலே
காது அளவும் கயலைப் புரட்டி
மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள்.....உறவாகி
பூரண கும்பம் எனப் புடைத்து எழு
சீதள குங்குமம் ஒத்த சித்திர
பூஷித கொங்கையில் உற்று முத்து அணி.....பிறையான
போருவை ஒன்று நெகிழ்த்து உருக்கி மெய்
யாரையும் நெஞ்சை விலைப் படுத்திடு
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட.....அருள்வாயே
வீர புயம் கிரி உக்ர விக்ரம
பூத கணம் பல நிர்த்தம் இட்டிட
வேகமுடன் பறை கொட்டிடக் கழுகு.....இனம் ஆட
வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி
வீச நடம் செய் விடை தனித் துசர்
வேத பரம்பரை உள் களித்திட.....வரும் வீரா
சீர் அணியும் திரை தத்து(ம்) முத்து எறி
காவிரியின் கரை மொத்து மெத்திய
சீர் புனைகின்ற திருத்தவத் துறை.....வரும் வாழ்வே
சீறி எதிர்த்த அரக்கரைக் கெட
மோதி அடர்ந்து அருள் பட்ச(ம்) முற்றிய
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
919
திருத்தவத்துறை நிரைத்த நித்தில தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன ...... தனதான
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி
நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார்
நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை
யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக்
கதித்த பத்தமை சாலடி யார்சபை
மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ
வரைத்த நுக்கரர் மாதவ மேவின
ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
ருரைத்து ளத்திரு வாசக மானது
மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி
பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்
வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.
நிரைத்த நித்தில(ம்) நீள் மணி மாலைகள்
பொறுத்த வெற்பு இணை மார் முலை மேல் அணி
நெறித்த நெய்க் குழல் வாள் விழி மா மதி.....முக மானார்
நெளித்த சிற்றிடை மேல் கலை ஆடையை
உடுத்தி அத்தம் உளோர் தமையே மயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேர் உறு.....நெறியாலே
கரைத்து இதக் குயில் போல் மொழி மாதர்கள்
வலைக்கு உ(ள்)ளில் சுழலா வகையே உன
கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது.....உற மேவி
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை
மிகுத்து இழிக் குண பாதகனேன் உயர்
கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள்.....உரையாதோ
வரைத் தநுக் கரர் மா தவம் மேவினர்
அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு
மணிச் செவிக்குள் மெய்ஞ் ஞானம் அது ஓதிய.....வடிவேலா
மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர்
உரைத்துள திருவாசகம் ஆனது
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய.....மணி மாட
திரைக் கடல் பொரு காவிரி மா நதி
பெருக்கு எடுத்துமெ பாய் வள நீர் பொலி
செழித்த நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை.....குவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம்
வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி
திருத்தவத்துறை மா நகர் தான் உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link