|
847
திருவீழிமிழலை எருவாய் கருவாய் |
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான |
எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் ...... விளைவாகி இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா ...... யழியாதே ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோ ...... தருள்தாராய் முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே லிணைதா ...... ளருள்வோனே முநிவோ ரமரோர் முறையோ வெனவே முதுசூ ருரமேல் ...... விடும்வேலா திருமால் பிரமா வறியா தவர்சீர் சிறுவா திருமால் ...... மருகோனே செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ் திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
|
எருவாய் கருவாய் தனிலே யுருவாய்
இதுவே பயிராய் விளைவாகி
இவர்போ யவராய் அவர்போ யிவராய்
இதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதாய்
உடனே அவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோத அருள்தாராய்
முருகா வென ஓர் தரம் ஓதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா அறியா தவர் சீர்ச்
சிறுவா திருமால் மருகோனே
செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் பெருமாளே.
|
| Audio/Video Link(s) |
|
https://www.youtube.com/watch?v=vZYvU5SJ8x4
|
|
https://www.youtube.com/watch?v=ih1D9l5_IOQ
|
Add (additional) Audio/Video Link
|