சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: தென்சேரிகிரி
614   எங்கேனும் ஒருவர்     615   கொண்டாடிக் கொஞ்சும்    
614   தென்சேரிகிரி   எங்கேனும் ஒருவர்  
தந்தான தனதனன தந்தான தனதனன
     தந்தான தனதனன ...... தனதான

எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு
     இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென்
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
     என்றாசை குழையவிழி ...... யிணையாடித்
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
     சந்தேக மறவெபறி ...... கொளுமானார்
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
     தண்பாரு முனதருளை ...... யருள்வாயே
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
     சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித்
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
     தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ்
சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
     சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச்
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
     தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே.


எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு
     இங்கு ஏவர் உனது மயல்.....தரியார் என்று
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ
     என்று ஆசை குழைய விழி.....இணை ஆடித்
தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள்
     சந்தேகம் அறவெ பறி.....கொளும் மானார்
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட
     தண்பு ஆரும் உனது அருளை.....அருள்வாயே
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு(ம்) நிரை பிறகு
     சந்து ஆரும் வெதிர் உரு குழல்.....அது ஊதி
தன் காதல் தனை உகள என்று ஏழு மடவியர்கள்
     தம் கூறை கொடு மரமில்.....அது ஏறும்
சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள
     சென்று ஏயும் அமரருடை.....சிறை மீள
செண்டு ஆடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும்
     தென் சேரி கிரியில் வரும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=e8b--p1os70
Add (additional) Audio/Video Link

Back to Top

615   தென்சேரிகிரி   கொண்டாடிக் கொஞ்சும்  
தந்தானத் தந்த தனதன
     தந்தானத் தந்த தனதன
          தந்தானத் தந்த தனதன ...... தனதான

கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
     கண்டாரைச் சிந்து விழிகொடு
          கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக்
குன்றோடொப் பென்ற முலைகொடு
     நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
          கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும்
பண்டாடச் சிங்கி யிடுமவர்
     விண்டாலிக் கின்ற மயிலன
          பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு
பண்டேசொற் றந்த பழமறை
     கொண்டேதர்க் கங்க ளறவுமை
          பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே
வண்டாடத் தென்றல் தடமிசை
     தண்டாதப் புண்ட ரிகமலர்
          மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா
வன்காளக் கொண்டல் வடிவொரு
     சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
          மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே
திண்டாடச் சிந்து நிசிசரர்
     தொண்டாடக் கண்ட வமர்பொரு
          செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே
சிங்காரச் செம்பொன் மதிளத
     லங்காரச் சந்த்ர கலைதவழ்
          தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே.


கொண்டாடிக் கொஞ்சு மொழி கொடு
     கண்டாரைச் சிந்து விழி கொடு
        கொந்து ஆரச் சென்ற குழல் கொடு.....வட மேருக்
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு
     நின்று ஓலக்கம் செய் நிலை கொடு
        கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு.....பலரோடும்
பண்டு ஆடச் சிங்கி இடும் அவர்
     விண்டு ஆலிக்கின்ற மயில் அன
        பண்பால் இட்டம் செல் மருள் அது.....விடுமாறு
பண்டே சொல் தந்த பழ மறை
     கொண்டே தர்க்கங்கள் அற உமை
        பங்காளர்க்கு அன்று பகர் பொருள்.....அருள்வாயே
வண்டு ஆடத் தென்றல் தடம் மிசை
     தண்டாது அப் புண்டரிக மலர்
        மங்காமல் சென்று மதுவை செய்.....வயலூரா
வன் காளக் கொண்டல் வடிவு ஒரு
     சங்க்ராமக் கஞ்சன் விழ உதை
        மன்றாடிக்கு அன்பு தரு திரு.....மருகோனே
திண்டாடச் சிந்து நிசிசரர்
     தொண்டு ஆடக்கண்ட அமர் பொரு
        செம் சேவல் செம் கை உடைய சண்முக.....தேவே
சிங்காரச் செம் பொன் மதிள் அது
     அலங்காரச் சந்த்ர கலை தவழ்
        தென் சேரிக் குன்றில் இனிது உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Thu, 13 Aug 2026 23:55:08 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group