சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: தேவனூர்
734   ஆறும் ஆறும்     735   தாரகாசுரன் சரிந்து     736   காணொணாதது    
734   தேவனூர்   ஆறும் ஆறும்  
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
     தான தான தந்த தந்த ...... தனதான

ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
     ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
     ஆரணாக மங்க டந்த ...... கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
     யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
     யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
     வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
     வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
     தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.


ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்
     ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்.....அறுநாலும்
ஆறுமாய சஞ்சலஞ்கள் வேறதா விளங்குகின்ற
     ஆரணாகமங் கடந்த.....கலையான
ஈறு கூறரும் பெருஞ்சுவாமியாய் இருந்த நன்றி
     ஏது வேறு இயம்பலின்றி.....ஒருதானாய்
யாவுமாய் மனங்கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி
     யான் அவா அடங்க என்று.....பெறுவேனோ
மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க
     வங்க வாரி மேல்வெகுண்ட சண்ட.....விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளங்கொழுந்து
     வால சோமன் நஞ்சு பொங்கு.....பகுவாய
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
     தேசிகா கடம்பு அலங்கல்.....புனைவோனே
தேவர் யாவரும் தி ரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
     தேவ னூர்விளங்க வந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ssOJibOhG_s
Add (additional) Audio/Video Link

Back to Top

735   தேவனூர்   தாரகாசுரன் சரிந்து  
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
     தான தான தந்த தந்த ...... தனதான

தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
     தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
     மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
     ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
     பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
     பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
     சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.


தாரகாசுரன்சரிந்து வீழ வேருடன்பறிந்து
     சாதி பூதரம் குலுங்க.....முதுமீனச்
சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த அன்று
     தாரை வேல்தொ டுங்கடம்ப.....மததாரை
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து
     மானை யாளு நின்ற குன்ற.....மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
     ஆவல் தீர என்று நின்று.....புகழ்வேனோ
பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண்க
     பால மாலை கொன்றை தும்பை.....சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு
     பானல் கூவிளம் கரந்தை.....அறுகோடே
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த
     சீதளாரவிந்த வஞ்சி.....பெருவாழ்வே
தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு
     தேவனூர்விளங்க வந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=NFWTopNUtqw
Add (additional) Audio/Video Link

Back to Top

736   தேவனூர்   காணொணாதது  
தான தானன தனனா தனதன
     தான தானன தனனா தனதன
          தான தானன தனனா தனதன ...... தந்ததான

காணொ ணாதது உருவோ டருவது
     பேசொ ணாதது உரையே தருவது
          காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக்
காய பாசம தனிலே யுறைவது
     மாய மாயுட லறியா வகையது
          காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
     மாய னாரய னறியா வகையது
          பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப்
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
     தீத மானது வினையேன் முடிதவ
          பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
     நூறி யேயுயிர் நமனீ கொளுவென
          வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே
வேத நான்முக மறையோ னொடும்விளை
     யாடி யேகுடு மியிலே கரமொடு
          வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
     மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
          சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
     ஞான யோகிக ளுளமே யுறைதரு
          தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.


காணொணாதது உருவோ டருவது
     பேசொ ணாதது உரையே தருவது
        காணு நான்மறை முடிவாய் நிறைவது.....பஞ்சபூதக்
காய பாசம தனிலே உறைவது
     மாய மாயுட லறியா வகையது
        காய மானவ ரெதிரே யவரென.....வந்துபேசிப்
பேணொணாதது வெளியே யொளியது
     மாயனார் அயன் அறியா வகையது
        பேத அபேதமொடு உலகாய் வளர்வது.....விந்துநாதப்
பேருமாய் கலை யறிவாய் துரிய
     அதீதமானது வினையேன் முடிதவ
        பேறு மாய் அருள் நிறைவாய் விளைவது.....ஒன்றுநீயே
வீணொணாதென அமையாத அசுரரை
     நூறியே உயிர் நமனீ கொளுவென
        வேல்க டாவிய கரனே உமைமுலையுண்ட.....கோவே
வேத நான்முக மறையோனொடும்
     விளையாடியே குடு மியிலே கரமொடு
        வீற மோதின மறவா குறவர்.....குறிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மேல் அரிவையை
     மேவியே மயல்கொள லீலைகள்செய்து
        சேர நாடிய திருடா அருள் தரு.....கந்தவேளே
சேரொணாவகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான
     யோகிகளுளமே உறைதரு
        தேவ னூர்வரு குமரா அமரர்கள்.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=j-eJWZuddMU
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org