சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: பெருங்குடி
700   தலங்களில் வரும்    
700   பெருங்குடி   தலங்களில் வரும்  
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
     தனந்தன தனந்தன ...... தனதான

தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
     தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
     தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந்
துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர்
     தொடுந்தொழி லுடன்தம ...... க்ரகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
     சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
     ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
     எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
     ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலூரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
     பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.


தலங்களில் வரும் கன இ(ல்)லம் கொ(ண்)டு மடந்தையர்
     தழைந்த உதரம் திகழ்.....தச மாதம்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர்
     தவழ்ந்தனர் நடந்தனர்.....சில காலம்
துலங்கு ந(ல்)ல பெண்களை முயங்கினர் மயங்கினர்
     தொடும் தொழிலுடன் தம(து).....க்ரக பாரம்
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர்
     சுடும் பினை எ(ன்)னும் பவம்.....ஒழியேனோ
இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு
     அருள் இல் எங்கணும் இலங்கு என.....முறை ஓதி
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட
     எழுந்தருள் முகுந்தன் நன்.....மருகோனே
பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி
     ப்ரசண்டகர தண் தமிழ்.....வயலூரா
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய
     பெருங்குடி மருங்கு உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000