|
788
மாயூரம் அமுதினை மெத்த |
தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான |
அமுதினை மெத்தச் சொரிந்து மாவின தினியப ழத்தைப் பிழிந்து பானற வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய் அழகிய பொற்றட் டினொண்டு வேடையின் வருபசி யர்க்குற் றவன்பி னாலுண வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக் குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக் குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு மவர்மய லிற்புக் கழிந்த பாவியை குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன் மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே மறுவறு கற்பிற் சிறந்த சீதையை விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன் வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே எமதும லத்தைக் களைந்து பாடென அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.
|
அமுதினை மெத்தச் சொரிந்து மாவினது இனிய பழத்தைப் பிழிந்து பால் நறவு அதனொடு தித்தித்த கண்டு அளாவிய.....இதழாராய் அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையின் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு அருள்பவர் ஒத்துத் தளர்ந்த காமுகர்.....மயல் தீர குமுதம் விளர்க்கத் தடம் குலாவிய நிலவு எழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண.....தன பாரக் குவடு இளகக் கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை குரை கழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வு உற.....அருள்வாயே வமிசம் மிகுத்துப் ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ரக் கொடும்பையான புன் மதி கொடு அழித்திட்டு இடும்பை ராவணன்.....மதியாமே மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்கக் குரங்கினால் அவன் வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன்.....மருகோனே எமது மலத்தைக் களைந்து பாடு என அருள அதற்குப் புகழ்ந்து பாடிய இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள்.....முருகோனே எழில் வளை மிக்கத் தவழ்ந்து உலாவிய பொ(ன்)னி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய இணை இலி ரத்னச் சிகண்டி ஊர் உறை.....பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|