![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: வயலூர்
900 அரி மருகோனே 901 ஆரம் முலை காட்டி 902 இகல்கடின முகபடவி 903 இலகு முலைவிலை 904 என்னால் பிறக்கவும் 905 கடல்போற் கணைவிழி 906 கமலத்தே குலாவும் 907 கமை அற்ற சீர் 908 குருதி கிருமிகள் 909 குயிலோ மொழி 910 கோவை வாயிதழ் 911 தாமரையின் மட்டு 912 திரு உரூப நேராக 913 நெய்த்த சுரி 914 முலை மறைக்கவும் 915 மேகலை நெகிழ்த்து 916 வாளின் முனை 917 விகட பரிமளம்
900
வயலூர் அரி மருகோனே தனதன தானான தானந் தனதன தானான தானந்
தனதன தானான தானந் ...... தனதான
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம்
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.
அரிமருகோனே நமோவென்று அறுதியிலானே நமோவென்று
அறுமுக வேளே நமோவென்று.....உனபாதம்
அரகர சேயே நமோவென்று இமையவர் வாழ்வே நமோவென்று
அருண சொரூபா நமோவென்று.....உளதாசை
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின்
பகைமயில் வேலாயுத ஆடம்.....பர நாளும்
பகர்தலிலா தாளை ஏதுஞ் சிலதறியா ஏழை நானுன்
பதிபசு பாச உபதேசம்.....பெறவேணும்
கரதல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம்
கடினசுராபான சாமுண்டியும்.....ஆட
கரிபரி மேலேறு வானும் செயசெய சேனா பதீயென்
களமிசை தானேறியே அஞ்சிய.....சூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகம்
குடல்கொளவே பூசலாடும்.....பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழும்
குளிர்வயலூர் ஆர மேவும்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=pQ6JQ-Rrtcw
Add (additional) Audio/Video Link
901
வயலூர் ஆரம் முலை காட்டி தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த ...... தனதான
ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
யாடையணி காட்டி ...... அநுராக
ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
ஆதரவு காட்டி ...... எவரோடும்
ஈரநகை காட்டி நேரமிகை காட்டி
யேவினைகள் காட்டி ...... யுறவாடி
ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி
யீடழிதல் காட்ட ...... லமையாதோ
வீரவப ராட்டு சூரர்படை காட்டில்
வீழனலை யூட்டி ...... மயிலூர்தி
வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு
வேலைவிளை யாட்டு ...... வயலூரா
சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
சீலிகுற வாட்டி ...... மணவாளா
தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி
தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
ஆரம் முலை காட்டி மார நிலை காட்டி
ஆடை அணி காட்டி.....அநுராக
ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி
ஆதரவு காட்டி.....எவரோடும்
ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே
வினைகள் காட்டி.....உறவாடி
ஏதம் மயல் காட்டும் மாதர் வலை காட்டி
ஈடு அழிதல் காட்டல்.....அமையாதோ
வீர அபர ஆட்டு சூரர் படை காட்டில்
வீழ அனலை ஊட்டி.....மயில் ஊர்தி
வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு
வேலை விளையாட்டு.....வயலூரா
சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட
சீலி குற வாட்டி.....மணவாளா
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி
தேவர் சிறை மீட்ட.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
902
வயலூர் இகல்கடின முகபடவி தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தத்தத்த தத்ததன ...... தந்ததான
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத
மத்தக்க ளிற்றையெதிர்
புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை
கட்டிப்பி ணித்திறுகி
யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி
முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான
இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில்
எற்றிக்க லக்கமுற
இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது
தொட்டுத்தி ரித்துமிக
இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி
செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர
அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல
கொத்துக்கு ழற்குலைய
மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர
நெக்குக்க ருத்தழிய
அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண
வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை
அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர
கட்டுப்பொ றிச்சியர்கள்
மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை
யுற்றுத்து திக்கும்வகை
அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்
ரக்ஷித்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட
தத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்கச் செகச்செகண
சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி
தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி
தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி
டட்டட்ட குட்டகுட
தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை
பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி
வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை
பக்கத்தி னிற்சரிய
எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி
விட்டத்த மித்ததென
வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது
தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா
வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி
சித்ரப்ர சித்தமுறு
அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி
தத்வத்தி றச்சிகர
வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி
தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே.
இகல் கடின முகபட விசித்ரத் துதிக்கை மத
மத்தக் களிற்றை எதிர்
புளக தனம் இளக இனிது எட்டிக் கழுத்தொடு கை
கட்டிப் பிணித்து இறுகி
இதழ் பொதியின் அமுது முறை மெத்தப் புசித்து உருகி
முத்தத்தை இட்டு நக.....தந்தமான
இடு குறியும் வரையை உற நெற்றித் தலத்து இடையில்
எற்றிக் கலக்கம் உற
இடை துவள உடை கழல இட்டத்து அரைப் பை அது
தொட்டுத் திரித்து மிக
இரணம் இடு(ம்) முரணர் விழி ஒக்கக் கறுத்த விழி
செக்கச் சிவக்க வளை.....செம் கை சோர
அகரு விடு(ம்) ம்ருகமத மணத்துக் கனத்த பல
கொத்துக் குழல் குலைய
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர
நெக்குக் கருத்து அழிய
அமளி பெரிது அமளி பட வக்கிட்டு மெய்க் கரண
வர்க்கத்தினில் புணரும்.....இன்ப வேலை
அலையின் விழி
மணியின் வலை இட்டுப் பொருள் கவர
கட்டுப் பொறிச்சியர்கள்
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை
உற்றுத் துதிக்கும் வகை
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில்
ரக்ஷித்து அளித்து அருள்வது.....எந்த நாளோ
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட
தத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்கச் செகச்செகண
சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி
தக்குத்த குத்தகுர்த.....திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி
தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி
டட்டட்ட குட்டகுடகு
என திமிர்த தவில் மிருக (இ)டக்கைத் திரள் சலிகை
பக்கக் கணப் பறை.....தவண்டை பேரி
வகை வகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை
பக்கத்தினில் சரிய
எழுது துகில் முழுது உலவி பட்டப் பகல் பருதி
விட்டு அத்தமித்தது என
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது
தொக்குக் குனிப்பு விட.....வென்ற வேலா
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ர கவி
சித்ர ப்ரசித்தம் உறு
அரி மருக அறு முகவ முக்கண் கணத்தர் துதி
தத்வத் திற சிகர
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி
தப்பு அற்று உரைக்க வல.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
903
வயலூர் இலகு முலைவிலை தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்
எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் ...... எவரோடும்
இனிய நயமொழி பழகிக ளழகிகள்
மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்
யமனு மிகையென வழிதரு முழிதரும் ...... விழிவாளால்
உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்
சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்
உறவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே
உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
பகடி யிடவல கபடிகள் முகடிகள்
உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக ...... ளுறவாமோ
அலகை புடைபட வருவன பொருவன
கலக கணநிரை நகுவன தகுவன
அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி
அலரி குடதிசை யடைவன குடைவன
தரும வநிதையு மகிழ்வன புகழ்வன
அகில புவனமு மரகர கரவென ...... அமர்வேள்வி
திலக நுதலுமை பணிவரு செயமகள்
கலையி னடமிட வெரிவிரி முடியினர்
திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட ...... மயிலேறிச்
சிறிது பொழுதினி லயில்விடு குருபர
அறிவு நெறியுள அறுமுக இறையவ
த்ரிசிர கிரியயல் வயலியி லினிதுறை ...... பெருமாளே.
இலகு முலை விலை அசடிகள் கசடிகள்
கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள்
எயிறு கடி படும் உதடிகள் பதடிகள்.....எவரோடும்
இனிய நய மொழி பழகிகள் அழகிகள்
மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள்
யமனும் மிகை என அழி தரும் முழி தரும்.....விழி வாளால்
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள்
சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்
உறவு சொல வல துரகிகள் விரகிகள்.....பிறை போலே
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
பகடி இட வல கபடிகள் முகடிகள்
உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள்.....உறவாமோ
அலகை புடைபட வருவன பொருவன
கலக கண(ம்) நிரை நகுவன தகுவன
அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன.....பொடியாடி
அலரி குட திசை அடைவன குடைவன
தரும வநிதையு(ம்) மகிழ்வன புகழ்வன
அகில புவனமும் அரகர கர என.....அமர் வேள்வி
திலக நுதல் உமை பணி வரு செய மகள்
கலையின் நடமிட எரி விரி முடியினர்
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட.....மயிலேறி
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர
அறிவு நெறி உள அறுமுக இறையவ
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
904
வயலூர் என்னால் பிறக்கவும் தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
என்னால் துதிக்கவும்.....கண்களாலே
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னால் இருக்கவும்.....பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும்.....தொந்தநோயை
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்.....இங்கு நான் ஆர்
கன்னார் உரித்த என் மன்னா எனக்குநல்
கர்ணாமிர்தப்பதம்.....தந்தகோவே
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
கண்ணாடியில் தடம்.....கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
வன்வாளியிற் கொளும்.....தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு.....தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=_58C_NYthds
https://www.youtube.com/watch?v=FeC2Z1OJemg
Add (additional) Audio/Video Link
905
வயலூர் கடல்போற் கணைவிழி தனனாத் தனதன தனனாத் தனதன
தனனாத் தனதன ...... தனதான
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும்
கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
கடிபோற் பணியரை ...... யெனவாகும்
உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
ளுடையாற் கெறுவித ...... நடையாலும்
ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்
ஒழியாத் துயரது ...... தவிரேனோ
குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள்
கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
குடியேற் றியகுக ...... வுயர்தாழை
மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி
வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே
மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல்
கனி போல் துகிர் இதழ்.....எழிலாகும்
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை
கடி போல் பணி அரை.....எனவாகும்
உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம்
இவள் உடையால் கெறுவித.....நடையாலும்
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல் படும்
ஒழியாத் துயர் அது.....தவிரேனோ
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி
கொளிவாய்ப் பல அல.....கைகள் பேய்கள்
கொலை போரக் களம் மிசை தினம் ஏற்று அமரர்கள்
குடி ஏற்றிய குக.....உயர் தாழை
மடல் கீற்றினில் எழு விரைபூப்பொழில் செறி
வயலூர்ப் பதி தனில்.....உறைவோனே
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை
மகள் மேல் ப்ரியம் உ(ள்)ள.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
906
வயலூர் கமலத்தே குலாவும் தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன ...... தனதான
கமலத் தேகு லாவு மரிவையை
நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள்
கலவிக் காசை கூர வளர்பரி
மளகற் பூர தூம கனதன
கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
வதனத் தாலு நாத முதலிய
விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும்
வெயிலெப் போதும் வீசு மணிவளை
அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்
விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணி
கனகத் தேர்கள் யானை யவுணர்கள்
தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்
புகழக் கானி லாடு பரிபுர
சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதி
மகள்மெய்த் தோயு நாத குறமகள்
அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா
அருளிற் சீர்பொ யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.
கமலத்தே குலாவும் அரிவையை
நிகர் பொன் கோல மாதர் மருள் தரு
கலகக் காம நூலை முழுது உணர்.....இளைஞோர்கள்
கலவிக்கு ஆசை கூர வளர் பரி
மள கற்பூர தூமம் கனதன
கலகத்தாலும் வானின் அசையும் மின்.....இடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
வதனத்தாலும் நாத முதலிய
விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள்.....குழலாலும்
வெயில் எப்போதும் வீசு மணி வளை
அணி பொன் தோள்களாலும் வடு வகிர்
விழியில் பார்வையாலும் இனி இடர்.....படுவேனோ
சமரில் பூதம் யாளி பரி பிணி
கனகத் தேர்கள் யானை அவுணர்கள்
தகரக் கூர் கொள் வேலை விடு திறல்.....உருவோனே
சமுகப் பேய்கள் வாழி என எதிர்
புகழக் கானில் ஆடு பரிபுர
சரணத்து ஏக வீர அ(ம்) மை மன.....மகிழ் வீரா
அமர்க்கு ஈசனான சசி பதி
மகள் மெய்த் தோயு நாத குற மகள்
அணையச் சூழ நீத கர(ம்) மிசை.....உறு வேலா
அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி
திரு அக்கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில் மருவிய.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
907
வயலூர் கமை அற்ற சீர் தனத்தத தானான தனதத்த தானான
தனதத்த தானனா ...... தந்ததான
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக்
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய்
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய்
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல்
அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்
அருணச்சி காநீல ...... கண்டபார
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி
மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம்
வரசத்தி மேலான பரவத்து வேமேலை
வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர்
களை உற்று மாயாது.....மந்த்ர வாத
கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது.....கொண்டு பூணும்
சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது
சகளத்து உளே நாளு(ம்).....நண்பு உளோர் செய்
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது
சலனப் படா ஞானம் வந்து.....தாராய்
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம்
அது துக்கமே ஆக.....மிஞ்சிடாமல்
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர்
அருண சிகா நீல.....கண்ட பாரம்
மம பட்ச மா தேவர் அருமைச் சுவாமீ
நிமல நிட்களா மாயை.....விந்து நாதம்
வர சத்தி மேலான பர வத்து வேமேலை
வயலிக்குள் வாழ் தேவர்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
908
வயலூர் குருதி கிருமிகள் தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலவு பலபணி பரிமள மறசுவை ...... மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகிய
தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
முறவு மலமல மருளலை கடல்கழி
துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணென
விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
வுருளு முரலொடு தவழரி மருகசெ
வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே.
குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை
மருவும் உருவமும் அலம் அலம் அழகொடு
குலவு பல பணி பரிமளம் அறு சுவை.....மடை பாயல்
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம்
மனைவி மகவு அ(ன்)னை அநுசர்கள் முறை முறை
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம்.....ஒரு நாலு
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி
உலக கலைகளும் அலம் அலம் இலகிய
தொலைவு இல் உனை நினைபவர் உறவும் அலது இனி.....அயலார் பால்
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும்
உறவு அலம் அலம் அருள் அலை கடல் கழி
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற.....அருள்வாயே
விருது முரசுகள் மொகு மொகு மொகு என
முகுற ககபதி முகில் திகழ் முகடு அதில்
விகட இறகுகள் பறை இட அலகைகள்.....நடமாட
விபுதர் அரகர சிவ சிவ சரண் என
விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
வினைகொள் நிசிசரர் பொடிபட அடல் செயும்.....வடிவேலா
மருது நெறு நெறு நெறு என முறிபட
உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்
வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய.....விராலி
மலையில் உறைகிற அறு முக குருபர
கயலும் மயிலையும் மகரமும் உகள் செ(ந்)நெல்
வயலி நகரியில் இறையவ அருள் தரு.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=OAUJ4IPknPk
Add (additional) Audio/Video Link
909
வயலூர் குயிலோ மொழி தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன ...... தந்ததான
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக்
குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற்
பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
பகையேயென நினையாதுற ...... நண்புகூரும்
பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
பதிநேருநி னருளால்மெயு ...... ணர்ந்திடேனோ
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன்
விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா
அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும்
அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே.
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோநடை
குறியீர் தனி செறியீர் இனி.....என்று பாடி
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை
குலையா அல்குல் அளையா இரு.....கொங்கை மீதில்
பயிலா மனம் மகிழ் மோகித(ம்) சுக சாகர மட மாதர்கள்
பகையே என நினையாது உற.....நண்பு கூரும்
பசு பாசமும் அகிலா அதிக பரிபூரண புரண ஆகர
பதி நேரு(ம்) நின் அருளால் மெய்.....உணர்ந்திடேனோ
வெயில் வீசிய கதிர் ஆயிர(ம்) அருணோதய இருள் நாசன
விசை ஏழ் பரி ரவி சேய் எனும்.....அங்க ராசன்
விசிக ஆகவம் அயல் பேடி கை படு போது சன்னிதி யானவன்
விதி தேடிய திருவாளி.....அரன் குமாரா
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை
அகில் ஆரம் அது எறி காவிரி.....வண்டல் மேவும்
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருக ஈசுர
அமராபதி அதில் வாழ்பவர்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
910
வயலூர் கோவை வாயிதழ் தான தான தனத்தந் தான தான தனத்தந்
தான தான தனத்தந் ...... தனதான
கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்
கோதை மாதர் முலைக்குங் ...... குறியாலும்
கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்
கோதி வாரி முடிக்குங் ...... குழலாலும்
ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்
டாசை யாயி னுநித்தந் ...... தளராதே
ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொ ருவர்க்கொன்
றாடல் தாள்க ளெனக்கின் ...... றருள்வாயே
சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்
த்யாக சீல குணத்தன் ...... திருமாலும்
தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்
தேயு வான நிறத்தன் ...... புதல்வோனே
காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்
காவி சூழ்வ யலிக்கும் ...... ப்ரியமானாய்
காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்
கால னாடல் தவிர்க்கும் ...... பெருமாளே.
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும்
கோதை மாதர் முலைக்கும்.....குறியாலும்
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்தங்(கு)
கோதி வாரி முடிக்கும்.....குழலாலும்
ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு
ஆசையாய் இ(ன்)னும் நித்தம்.....தளராதே
ஆசு இலாத மறைக்கும் தேட ஒணாத ஒருவர்க்கு ஒன்று
ஆடல் தாள்கள் எனக்கு இன்று.....அருள்வாயே
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும்
த்யாக சீல குணத்தன்.....திருமாலும்
தேட ஒணாத பதத்தன் தீது இலாத மனத்தன்
தேயுவான நிறத்தன்.....புதல்வோனே
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும்
காவி சூழ் வயலிக்கும்.....ப்ரியமானாய்
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும்
காலன் ஆடல் தவிர்க்கும்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
911
வயலூர் தாமரையின் மட்டு தானன தனத்த தானன தனத்த
தானன தனத்த ...... தனதான
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி ...... லடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ...... யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ...... மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ...... மறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க ...... நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் ...... குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று ...... வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ...... பெருமாளே.
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பில்.....அடியேனை
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்திய.....விராலி
மாமலையில் நிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்து என்.....மனதாசை
மாசினை அறுத்து ஞானமுது அளித்த
வாரம் இனி நித்த.....மறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க.....நதி வேணி
கானிலுறை புற்றில் ஆடுபணி யிட்ட
காது உடைய அப்பர்.....குருநாதா
சோமனொடு அருக்கன் மீனுலவு மிக்க
சோலை புடை சுற்று.....வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=8IbC6HboERg
Add (additional) Audio/Video Link
912
வயலூர் திரு உரூப நேராக தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார ...... வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு ...... மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி ...... புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகச மான சாரீசெ ...... யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.
திரு உரூப நேராக அழகதான மா மாய
திமிர மோக மானார்கள்.....கலை மூடும்
சிகரி ஊடு தே மாலை அடவி ஊடு போய் ஆவி
செருகும் மால் அனாசார.....வினையேனை
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலா மாறு
கனவில் ஆள் சுவாமீ நின்.....மயில் வாழ்வும்
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்) மாறாத
கழலு(ம்) நீப வேல் வாகு(ம்).....மறவேனே
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி
சயில நாரி பாக ஆதி.....புதல்வோனே
சத மகீ வல் போர் மேவு குலிச பாணி மால் யானை
சகசமான சாரீ செய்.....இளையோனே
மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒ(ண்)ணாவான
வரையில் வீசு தாள் மாயன்.....மருகோனே
மநு நியாய சோ (ழ) நாடு தலைமை யாகவே மேலை
வயலி மீது வாழ் தேவர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
913
வயலூர் நெய்த்த சுரி தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா ...... தனதான
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும்
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
சுத்த மிடறது வளையோ கமுகோ
நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோ
மிக்க திருவரை அரவோ ரதமோ
இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய்
இச்சை விரகுடன் மடவா ருடனே
செப்ப மருளுட னவமே திரிவேன்
ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன்
புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே
சத்த முடையஷண் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ்
சக்ர தரஅரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே.
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ
பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ
நெட்டை இணை விழி கணையோ பிணையோ.....இனிது ஊறும்
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ
சுத்த மிடறு அது வளையோ கமுகோ
நிற்கும் இள முலை குடமோ மலையோ.....அறவே தேய்ந்து
எய்த்த இடை அது கொடியோ துடியோ
மிக்க திரு அரை அரவோ ரதமோ
இப் பொன் அடி இணை மலரோ தளிரோ.....என மாலாய்
இச்சை விரகுடன் மடவாருடனே
செப்ப மருள் உடன் அவமே திரிவேன்
ரத்ந பரிபுர(ம்) இரு கால் ஒரு கால்.....மறவேனே
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திரு நீறு இடவே
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே.....உமையாள் தன்
புத்ரன் என இசை பகர் மறை நூல்
கற்ற தவ முனி பிரமா புரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய்.....வருவோனே
சத்தம் உடைய ஷண்முகனே குகனே
வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா
சத்தி கணபதி இளையாய் உளையாய்.....ஒளி கூரும்
சக்ரதர அரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்பம் உள தட வயலூர் இயலூர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
914
வயலூர் முலை மறைக்கவும் தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன
தனன தத்தன தானன தானன ...... தனதான
முலைம றைக்கவும் வாசலி லேதலை
மறைய நிற்கவும் ஆசையு ளோரென
முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே
முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு
நகம ழுத்தவும் லீலையி லேயுற
முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி
கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே
கடிய சத்திய மாமென வேசொலி
யவர்கொ டப்பண மாறிட வீறொடு
கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ
மலையை மத்தென வாசுகி யேகடை
கயிறெ னத்திரு மாலொரு பாதியு
மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி
வலய முட்டவொ ரோசைய தாயொலி
திமிதி மித்திமெ னாவெழ வேயலை
மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
வயலை யற்புத னேவினை யானவை
தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா
துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு
துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே.
முலை மறைக்கவும் வாசலிலே தலை
மறைய நிற்கவும் ஆசை உ(ள்)ளோர் என
முகிழ் நகைச் சிறு தூதினை ஏவவும்.....முகம் ஓடே
முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவு(ம்)
நகம் அழுத்தவும் லீலையிலே உற
முறை மசக்கவும் வாசம் உலா மலர்.....அணை மீதே
கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர்
உடல் சளப்பட நாள் வழி நாள் வழி
கறை அழிக்கவும் நான் எனவே அ(ண்)ணி.....விலை ஈதே
கடிய சத்தியமாம் எனவே சொ(ல்)லி
அவர் கொடு அப்பணம் மாறிட வீறொடு
கடு கடுத்திடு வாரொடு கூடியது.....அமையாதோ
மலையை மத்து என வாசுகியே கடை
கயிறு எனத் திருமால் ஒரு பாதியும்
மருவும் மற்றது வாலியும் மேல் இட.....அலை ஆழி
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி
திமிதி மித்திம் எனா எழவே அலை
மறுகிடக் கடையா எழ மேல் எழும்.....அமுதோடே
துலை வருத் திரு மா மயில் வாழ்வுள
வயலை அற்புதனே வினையானவை
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி.....மணவாளா
துவள் கடிச் சிலை வேள் பகைவா திரு
மறு ஒர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
915
வயலூர் மேகலை நெகிழ்த்து தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த ...... தனதான
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
வேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக
மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
வீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன்
ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
யாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா
மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார் குழல் விரித்துக் காட்டி
வேல் விழி புரட்டிக் காட்டி.....அழகாக
மேனியை மினுக்கிக் காட்டி நாடகம் நடித்துக் காட்டி
வீடுகள் அழைத்துக் காட்டி.....மத ராசன்
ஆகமம் உரைத்துக் காட்டி வார் அணி தனத்தைக் காட்டி
யாரொடு(ம்) நகைத்துக் காட்டி.....விரகாலே
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை அவர்க்குக் காட்டி.....அழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமும் எடுத்துக் காட்டி
மூ தமிழ் முனிக்குக் கூட்டு.....குருநாதா
மூ உலகு அளித்துக் காட்டி சேவலை உயர்த்திக் காட்டு
மூரி வில் மதற்குக் காட்டு.....வயலூரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ் மயில் நடத்திக் காட்டும்.....இளையோனே
மா மலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
916
வயலூர் வாளின் முனை தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன
தான தனதன தந்தன தந்தன ...... தனதான
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
ராஜ நடையினு மம்பதி னும்பெரு
வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ
வாயு நகைமுக வெண்பலு நண்புடன்
வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந்
தூளி படுநவ குங்கும முங்குளி
ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந்
தோயு மளறெனி தம்பமு முந்தியு
மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்
சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
நீலி கவுரிப யங்கரி சங்கரி
காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்
தீர வருள்தரு கந்தநி ரந்தர
மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம
ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு
வாதை வகை செய் கரும் க(ண்)ணும் எங்கணும்.....அரிதான
வாரி அமுது பொசிந்து கசிந்த செ(வ்)
வாயு(ம்)நகை முக வெண் ப(ல்)லு(ம்) நண்புடன்
வாரும் இரும் எனும் இன் சொ(ல்)லும் மிஞ்சிய.....பனி நீரும்
தூளி படு நவ குங்குமமும் குளிர்
ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும்.....எவரேனும்
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும்
மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில்
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல்.....ஒழிவேனோ
காளி திரிபுரை அந்தரி சுந்தரி
நீலி கவுரி பயங்கரி சங்கரி
காருணிய சிவை குண்டலி சண்டிகை.....த்ரிபுராரி
காதல் மனைவி பரம்பரை அம்பிகை
ஆதி மலை மகள் மங்கலி பிங்கலை
கான நடனம் உகந்தவள் செம் திரு.....அயன் மாது
வேளின் இரதி அருந்ததி இந்திர
தேவி முதல்வர் வணங்கும் த்ரி அம்பகி
மேக வடிவர் பின் வந்தவள் தந்து.....அருள் இளையோனே
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர்
தீர அருள் தரு கந்த நிரந்தர
மேலை வயலை உகந்து உ(ள்)ள(ம்) நின்று அருள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
917
வயலூர் விகட பரிமளம் தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான
விகட பரிமள ம்ருகமத இமசல
வகிர படிரமு மளவிய களபமு
மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்
உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்
கலவி விதவிய னரிவையர் மருள்வலை
யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
புரண புளகித இளமுலை யுரமிசை
தைக்கக்க ழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ...... யன்புகூர
விபுத ரமுதென மதுவென அறுசுவை
அபரி மிதமென இலவிதழ் முறைமுறை
துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்
வரையு முறைசெய்து முனிவரு மனவலி
கரையு மரிசன பரிசன ப்ரியவுடை
தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்
விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ
மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி
கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ...... வுந்திமூழ்கிப்
புகடு வெகுவித கரணமு மருவிய
வகையின் முகிலென இருளென வனமென
ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய
அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை
குமுத பதிகலை குறைகலை நிறைகலை
சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு
பொழுதும் விடலரி தெனுமநு பவமவை
முழுது மொழிவற மருவிய கலவியி
தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப்
புணரு மிதுசிறு சுகமென இகபரம்
உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்
அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்
உணர்வு முணர்வுற வழுவற வொருஜக
வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநுபவ வடிவினை யளவறு
அகில வெளியையு மொளியையு மறிசிவ
தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ...... யென்றுசேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி
திமிலை கரடிகை பதலைச லரிதவில்
தமர முரசுகள் குடமுழ வொடுதுடி
சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
குசல பசுபதி குருவென விருதுகள்
ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
மகர சலநிதி மொகுமொகு மொகுவென
எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற ...... நின்றசேடன்
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
அகில புவனமும் ஹரஹர ஹரவென
நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி
குருதி யருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை
எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி ...... யும்பர்வாழ
மடிய அவுணர்கள் குரகத கஜரத
கடக முடைபட வெடிபட எழுகிரி
அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை
அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக
இயலு மிசைகளு நடனமும் வகைவகை
சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் ...... தம்பிரானே.
விகட பரிமள ம்ருகமத இமசல(ம்)
வகிர படிரமும் அளவிய களபமும்
மட்டித்து இதழ்த் தொடை முடித்துத் தெருத் தலையில்
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர்
கலவி வித(ம்) வியன் அரிவையர் மருள் வலை
இட்டுத் துவக்கி இடர் பட்டுத் தியக்கி அவர்
விரவு நவ மணி முக பட(ம்) எதிர் பொரு
புரண(ம்) புளகித இள முலை உர(ம்) மிசை
தைக்கக் கழுத்தொடு கை ஒக்கப் பிணித்து இறுகி.....அன்பு கூர
விபுதர் அமுது என மது என அறு சுவை
அபரிமிதம் என இலவ இதழ் முறை முறை
துய்த்துக் களித்து நகம் வைத்துப் ப(ல்)லில் குறியின்
வரையும் முறை செய்து முனிவரு(ம்) மன வலி
கரையும் அரிசன(ம்) பரிசன(ம்) ப்ரிய உடை
தொட்டுக் குலைத்து நுதல் பொட்டுப் படுத்தி மதர்
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ
மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி
கற்றிட்ட புட் குரல் மிடற்றில் பயிற்றி மடு.....உந்தி மூழ்கிப்
புகடு வெகு வித கரணமு(ம்) மருவிய
வகையின் முகில் என இருள் என வனம் என
ஒப்பித்த நெய்த்த பல புட்பக் குழல் சரிய
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை
குமுத பதி கலை குறை கலை நிறை கலை
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை
முழுதும் ஒழி அற மருவிய கலவி
இதத்து ப்ரியப்பட நடித்துத் துவட்சியினில்.....நைந்து சோர
புணரும் இது சிறு சுகம் என இகபரம்
உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம்
அற்றுக் கருத்து ஒருமை உற்றுப் புலத் தலையில்
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய்
உணர்வும் உணர்வு உற வழு அற ஒரு ஜக
வித்தைக் குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு
அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ
தத்வ ப்ரசித்தி தனை முத்திச் சிவக் கடலை.....என்று சேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி.....என்றுபேரி
திமிலை கரடிகை பதலை ச(ல்)லரி தவில்
தமர முரசுகள் குடமுழவொடு துடி
சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
குசல பசுபதி குரு என விருதுகள்
ஒத்தத் திரள் பலவும் முற்றிக் கலிக்க எழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
மகர சலநிதி மொகுமொகு மொகுவென
எட்டுத் திசைக் களிறு மட்டற்று அறப் பிளிற......நின்ற சேடன்
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
அகில புவனமும் ஹரஹர ஹரவென
நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி
குருதி யருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரி குடல் நரி தி(ன்)ன நிணம் அவை
எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலைப் பரவி.....உம்பர் வாழ
மடிய அவுணர்கள் குரகத கஜரத
கடகம் உடைபட வெடிபட எழுகிரி
அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
அமர் செய்து அயில் கையி வெயில் எழ மயில் மிசை
அக் குக்குடக் கொடி செருக்கப் பெருக்கமுடன்
வயலி நகர் உறை சரவண பவகுக
இயலும் இசைகளு(ம்) நடனமும் வகை வகை
சத்யப் படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள்.....தம்பிரானே
Add (additional) Audio/Video Link