![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: வள்ளிமலை
530 அல்லி விழியாலும் 538 குடிவாழ்க்கை 537 அல் அசல் அடைந்த 536 ககனமும் அநிலமும் 535 வெல்லிக்கு வீக்கும் 534 கள்ளக் குவால் பை 533 முல்லைக்கும் மாரன் 532 கை ஒத்து வாழும் 540 வரைவில் பொய் 531 ஐயுமுறு நோயும் 539 சிரம் அங்கம் அம் கை
530
வள்ளிமலை அல்லி விழியாலும் தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ...... தனதான
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் ...... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் ...... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=FpEXkpTy0zQ
Add (additional) Audio/Video Link
531
வள்ளிமலை ஐயுமுறு நோயும் தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ...... தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் ...... பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக் ...... கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் ...... தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
நல்லஇரு தாளிற் ...... புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
செய்யபுய மீதுற் ...... றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் ...... பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமுத் ...... தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=cW4mY9jnIX0
Add (additional) Audio/Video Link
532
வள்ளிமலை கை ஒத்து வாழும் தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த ...... தனதான
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து
கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன்
உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று
முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத்தெய் வானை கொங்கை ...... புணர்வோனே
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
வெல்லப்ப தாகை கொண்ட ...... திறல்வேலா
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
533
வள்ளிமலை முல்லைக்கும் மாரன் தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த ...... தனதான
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி யின்ப ...... முயலாநீள்
முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம்
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை ...... யொழிவேனோ
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு ...... புயவீரா
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
534
வள்ளிமலை கள்ளக் குவால் பை தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த ...... தனதான
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க ...... யவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
535
வள்ளிமலை வெல்லிக்கு வீக்கும் தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த ...... தனதான
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால்
வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய்
யில்லத்து றாக்க ...... வலைமேவு
பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை
நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின்
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
கல்விக்க லாத்த ...... லையலாமோ
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
சொல்குக்கு டார்த்த ...... இளையோனே
அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
536
வள்ளிமலை ககனமும் அநிலமும் தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த ...... தனதான
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை ...... சுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=PKvm81IufFQ
Add (additional) Audio/Video Link
537
வள்ளிமலை அல் அசல் அடைந்த தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த ...... தனதான
அல்லசல டைந்த வில்லடல நங்கன்
அல்லிமல ரம்பு ...... தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமது கிண்ட ...... அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று ...... முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு ...... தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
கல்விகரை கண்ட ...... புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை ...... யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியைம ணந்த ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
538
வள்ளிமலை குடிவாழ்க்கை தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய ...... தனதான
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை ...... யுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல ...... மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=LduoZqUJ4xA
Add (additional) Audio/Video Link
539
வள்ளிமலை சிரம் அங்கம் அம் கை தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
தனதந்த தந்தனம் ...... தனதான
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் ...... தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன்
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
திசையொன்ற மந்திசந் ...... துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=y-wUNNBDPtg
Add (additional) Audio/Video Link
540
வள்ளிமலை வரைவில் பொய் தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி
வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும
உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே
அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை
யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000