|
815
விஜயபுரம் குடல்நிண மென்பு |
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன தனதன தந்தன தானன ...... தனதான |
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி லவுடத மும்பல யோகமு ...... முயலாநின் றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர மிடிபட இன்பம கோததி ...... வறிதாக இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர எழில்பட மொன்று மொராயிர ...... முகமான விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர் விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.
|
குடல்நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய
மலமாசு குதிகொளும் ஒன்பது வாசலை யுடைய
குரம்பையை நீரெழு குமிழியி னுங்கடிதாகியெ
அழிமாய அடலை யுடம்பை யவாவியெ
அநவரதஞ்சில சாரமில் அவுடதமும்பல யோகமு(ம்)
முயலாநின்று அலமரு சிந்தையி னாகுலம் அலம் அலம்
என்றினி யானுநின் அழகிய தண்டைவிடாமலர் அடைவேனோ
இடமற மண்டு நிசாசரர் அடைய மடிந்து
எழு பூதரம் இடிபட
இன்ப மகோததி வறிதாக
இமையவருஞ்சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர
எழில்படம் ஒன்றும் ஒராயிர முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்
புர நீறெழ வெயில்நகை தந்த புராரி
மதனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசைவளருஞ்சிறுவா
வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே. |
| Audio/Video Link(s) |
|
https://www.youtube.com/watch?v=CSizvWyy2eM
|
Add (additional) Audio/Video Link
|