சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: சோமநாதன்மடம்
824 ஒருவழிபடாது
824
சோமநாதன்மடம் ஒருவழிபடாது தனதனன தான தான தனதனன தான தான
தனதனன தான தான ...... தனதான
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக ...... அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச ...... கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக ...... முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400