சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Order by:
Thiruppugazh from Thalam: திருக்கானப்பேர்
1332   அனத்தோடொப்பா     1333   கோலக்காதிற்    
1332   திருக்கானப்பேர்   அனத்தோடொப்பா  
தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான
     தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான

அனத்தோடொப்பா மெனுநடை மடவியர் ...... அநுராகம்
     அதற்கேசிச்சீ இனமென துயிர்கெடல் ...... அழகாமோ
உனைப்பாடிப்பே றுறுமொரு வரமினி ...... உதவாயோ
     உவப்பாகத்தே வர்கள்சிறை விடவிடும் ...... அயிலோனே
முனைப்பாடிக்கே திரிதரும் அரிதிரு ...... மருகோனே
     முகிற்கே நத்தா விரிதரு கலபநன் ...... மயிலோனே
தினைக்காவற்கே உரியவள் மனமகிழ் ...... மணவாளா
     திருக்கானப்பேர் நகர்தனி லினிதுறை ...... பெருமாளே.
குறிப்பு:
முனைப்பாடிக்கே=முன் ஆயர் பாடியில்
நத்தா=விரும்பி.
Add (additional) Audio/Video Link

Back to Top

1333   திருக்கானப்பேர்   கோலக்காதிற்  
தானத்தானத் ...... தனதானா
     தானத்தானத் ...... தனதானா

கோலக்காதிற் ...... குழையாலே
     கோதிச்சேர்மைக் ...... குழலாலே
ஞாலத்தாரைத் ...... துயரேசெய்
     நாரிக்காசைப் ...... படலாமோ
மேலைத்தேவர்க் ...... கரியோனே
     வீரச்சேவற் ...... கொடியோனே
காலப்பாசத் ...... துயர்தீராய்
     கானப்பேரிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh list