சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: திருத்துருத்தி
846 மலைக் கனத்தென
846
திருத்துருத்தி மலைக் கனத்தென தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன
தனத் தனத்தன தானன தானன ...... தனதான
மலைக் கனத்தென மார்பினி லேயிரு
முலைக் கனத்துற வேயிடை நூலென
வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத
மயிற் குலத்தவ ராமென நீள்கலை
நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு
மயக் கிநத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி
விலைக் கெனத்தன மாயிர மாயிர
முலைக் களப்பினு மாசைபொ தாதென
வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய்
வெடுக் கெடுத்தும காபிணி மேலிட
முடக் கிவெட்கும தாமத வீணனை
மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே
அலைக் கடுத்தசு ரார்பதி கோவென
விடப் பணச்சிர மாயிர சேடனும்
அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா
அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
அழைத் துமுத்திய தாமநு பூதியெ
னருட் டிருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே
சிலைக் கைமுப்புர நீறெழ வேதிரு
வுளத் திலற்பமெ னாநினை தேசிகர்
சிறக் கமுத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா
திருக் கடப்பலர் சூடிய வார்குழல்
குறத் திகற்புட னேவிளை யாடியொர்
திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400