சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: திருவக்கரை
722 கலகலெனச் சில 723 பச்சிலை இட்டு
722
திருவக்கரை கலகலெனச் சில தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன ...... தனதானா
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ...... யிடைவீழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ...... மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
723
திருவக்கரை பச்சிலை இட்டு தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள்
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யிதழூறல்
எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர்
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர்
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
நட்டர வப்பணி சுற்றிம தித்துள
நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா
கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400