சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: மதுராந்தகம்
718 குதிபாய்ந்தி ரத்தம் 720 மனைமாண்சுத ரான 719 சயில அங்கனைக்கு
718
மதுராந்தகம் குதிபாய்ந்தி ரத்தம் தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று ...... தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த ...... குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
719
மதுராந்தகம் சயில அங்கனைக்கு தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
720
மதுராந்தகம் மனைமாண்சுத ரான தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான
மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி
மயமாம்பல வான கணங்குல
மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார்
தமதாஞ்சுத தாப ரசங்கம
மெனவோம்புறு தாவ னவம்படர்
தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே
முனவாம்பத மூடி கவந்தன
முயல்வான்பிடி மாடி மையைங்கரர்
முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு
முககாம்பிர மோட மர்சம்பன
மதுராந்தக மாந கரந்திகழ்
முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400