சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: அவிநாசி
943 இறவாமற் பிறவாமல் 945 மனத்திரைந்தெழு 944 பந்தப்பொற் பார
943
அவிநாசி இறவாமற் பிறவாமல் தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=92N9-tlfaEg
Add (additional) Audio/Video Link
944
அவிநாசி பந்தப்பொற் பார தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன ...... தனதான
பந்தப்பொற் பாரப யோதர
முந்திச்சிற் றாடகை மேகலை
பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே
பண்டெச்சிற் சேரியில் வீதியில்
கண்டிச்சிச் சாரொடு மேவியெ
பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி கோதையர்
சந்தச்செந் தாமரை வாயினர்
கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
மண்டிச்செச் சேயென வானவர்
கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே
அந்தத்தொக் காதியு மாதியும்
வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி
அங்கத்தைப் பாவைசெய் தாமென
சங்கத்துற் றார்தமி ழோதவு
வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச்
சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்
தங்கச்செக் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில்
தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
945
அவிநாசி மனத்திரைந்தெழு தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ...... தனதான
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட
எனைக்க டந்திடு பாசமு மேகொடு
சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான்
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும்
கனத்த செந்தமி ழால்நினை யேதின
நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக்
கடற்ச லந்தனி லேயொளி சூரனை
யுடற்ப குந்திரு கூறென வேயது
கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா
அனத்த னுங்கம லாலய மீதுறை
திருக்க லந்திடு மாலடி நேடிய
அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400