சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: இராமேசுரம்
983 வாலவயதாகி 984 வானோர் வழுத்துனது
983
இராமேசுரம் வாலவயதாகி தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன ...... தனதான
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
984
இராமேசுரம் வானோர் வழுத்துனது தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்
மீதே பணிக்கும்வகை ...... யறியாதே
மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி
லூடே யணைத்துதவு ...... மதனாலே
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
ளேதோ வெனக்கலவி ...... பலகோடி
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ
மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி
னூடே கிநிற்குமிரு ...... கழலோனே
மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை
வீரா குறச்சிறுமி ...... மணவாளா
ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை
நாணா துரைக்குமொரு ...... பெரியோனே
நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு
ராமே சுரத்திலுறை ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400