சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: ஞானமலை
609 சூது கொலைகாரர் 610 மனையவள் நகைக்க
609
ஞானமலை சூது கொலைகாரர் தானதன தான தானதன தான
தானதன தான ...... தனதான
சூதுகொலை கார ராசைபண மாதர்
தூவையர்கள் சோகை ...... முகநீலர்
சூலைவலி வாத மோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர் ...... தெருவூடே
சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறி ...... தெனவோதி
சாயவெகு மாய தூளியுற வாக
தாடியிடு வோர்க ...... ளுறவாமோ
வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூச ...... லெனஏகி
வீறசுரர் பாறி வீழஅலை யேழு
வேலையள றாக ...... விடும்வேலா
நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரியபி ராமி ...... யருள்பாலா
நாரணசு வாமி யீனுமக ளோடு
ஞானமலை மேவு ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
610
ஞானமலை மனையவள் நகைக்க தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான ...... தனதான
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400