சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: திருப்புத்தூர்
979 கருப்புச் சாப 980 வேலை தோற்க விழி
979
திருப்புத்தூர் கருப்புச் சாப தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன ...... தனதான
கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங்
களிற்றுக் கோடு கலச மலிநவ
மணிச்செப் போடை வனச நறுமலர்
கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற்
பொருப்பைச் சாடும் வலியை யுடையன
அறச்சற் றான இடையை நலிவன
புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும்
புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ...... துயிர்வாழ்வேன்
இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை
எலுப்புக் கோவை யணியு மவர்மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத
திருட்டுப் பாணி யிடப முதுகிடை
சமுக்கிட் டேறி யதிர வருபவர்
செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
ளெருக்குச் சூடி குமர வயலியல்
திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
980
திருப்புத்தூர் வேலை தோற்க விழி தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன ...... தனதான
வேலை தோற்க விழித்துக் காதினில்
ஓலை காட்டி நகைத்துப் போதொரு
வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்துப் போர்முலை
யானை காட்டி மறைத்தத் தோதக
வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல்
கால மேற்க வுழப்பிக் கூறிய
காசு கேட்ட துகைப்பற் றாஇடை
காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல்
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்
மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்
காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ
ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட
மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
னோடை பூத்த தளக்கட் சானவி
யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி
சீல மாப்ப திமத்தப் பாரிட
சேனை போற்றி டுமப்பர்க் கோதிய
சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே
சேல றாக்க யல்தத்தச் சூழ்வய
லூர வேற்க ரவிப்ரர்க் காதர
தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400