This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh Short Verse Songs
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
98
திருச்செந்தூர் திருப்புகழ்
வரியார் கருங்கண்
தனனா தனந்த ...... தனதான வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா
வரியார் கருங்கண் ...... மடமாதர் மகவா சைதொந்த ...... மதுவாகி இருபோ துநைந்து ...... மெலியாதே இருதா ளினன்பு ...... தருவாயே பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே பரமே சுரன்ற ...... னருள்பாலா அரிகே சவன்றன் ...... மருகோனே அலைவா யமர்ந்த ...... பெருமாளே.
Back to Top
107
பழநி திருப்புகழ்
அபகார நிந்தை
தனதான தந்தனத் ...... தனதான தனதான தந்தனத் ...... தனதான முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல் முருகா
அபகார நிந்தைபட் ...... டுழலாதே அறியாத வஞ்சரைக் ...... குறியாதே உபதேச மந்திரப் ...... பொருளாலே உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ இபமாமு கன்தனக் ...... கிளையோனே இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
Back to Top
192
பழநி திருப்புகழ்
வசனமிக ஏற்றி
தனதனன தாத்த ...... தனதான தனதனன தாத்த ...... தனதான
வசனமிக வேற்றி ...... மறவாதே மனதுதுய ராற்றி ...... லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
Back to Top
194
பழநி திருப்புகழ்
வரதா மணி நீ
தனனா தனனா ...... தனதான தனனா தனனா ...... தனதான
வரதா மணிநீ ...... யெனவோரில் வருகா தெதுதா ...... னதில்வாரா திரதா திகளால் ...... நவலோக மிடவே கரியா ...... மிதிலேது சரதா மறையோ ...... தயன்மாலும் சகலா கமநூ ...... லறியாத பரதே வதையாள் ...... தருசேயே பழனா புரிவாழ் ...... பெருமாளே.
Back to Top
212
சுவாமிமலை திருப்புகழ்
காமியத் தழுந்தி
தானனத் தனந்த ...... தனதான தானனத் தனந்த ...... தனதான
காமியத் தழுந்தி ...... யிளையாதே காலர்கைப் படிந்து ...... மடியாதே ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி ஓவியத் திலந்த ...... மருள்வாயே தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
Back to Top
225
சுவாமிமலை திருப்புகழ்
நிறைமதி முகமெனும்
தனதன தனதன ...... தனதான தனதன தனதன ...... தனதான
நிறைமதி முகமெனு ...... மொளியாலே நெறிவிழி கணையெனு ...... நிகராலே உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ உனதிரு வடிவியினி ...... யருள்வாயே மறைபயி லரிதிரு ...... மருகோனே மருவல ரசுரர்கள் ...... குலகாலா குறமகள் தனைமண ...... மருள்வோனே குருமலை மருவிய ...... பெருமாளே.
Back to Top
329
காஞ்சீபுரம் திருப்புகழ்
அற்றைக்கு இரைதேடி
தத்தத் தனதான தத்தத் ...... தனதான தத்தத் தனதான தத்தத் ...... தனதானா
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.
Back to Top
330
காஞ்சீபுரம் திருப்புகழ்
முட்டுப் பட்டு
தத்தத் தத்தத் ...... தனதான தத்தத் தத்தத் ...... தனதான முருகா முருகா வேல் முருகா; முருகா முருகா வேல் முருகா
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் முற்றச் சுற்றிப் ...... பலநாளும் தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச் சற்றுப் பற்றக் ...... கருதாதோ வட்டப் புட்பத் ...... தலமீதே வைக்கத் தக்கத் ...... திருபாதா கட்டத் தற்றத் ...... தருள்வோனே கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
Back to Top
363
திருவானைக்கா திருப்புகழ்
நாடித் தேடி
தானத் தானத் ...... தனதான தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால் நானத் தாகத் ...... திரிவேனோ மாடக் கூடற் ...... பதிஞான வாழ்வைச் சேரத் ...... தருவாயே பாடற் காதற் ...... புரிவோனே பாலைத் தேனொத் ...... தருள்வோனே ஆடற் றோகைக் ...... கினியோனே ஆனைக் காவிற் ...... பெருமாளே.
Back to Top
399
திருவருணை திருப்புகழ்
இரவுபகற் பலகாலும்
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.
Back to Top
414
திருவருணை திருப்புகழ்
கீத விநோத மெச்சு
தான தனான தத்த ...... தனதான தான தனான தத்த ...... தனதான
கீத விநோத மெச்சு ...... குரலாலே கீறு மையார் முடித்த ...... குழலாலே நீதி யிலாத ழித்து ...... முழலாதே நீமயி லேறி யுற்று ...... வரவேணும் சூதமர் சூர ருட்க ...... பொருசூரா சோண கிரீயி லுற்ற ...... குமரேசா ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
Back to Top
418
திருவருணை திருப்புகழ்
கோடு ஆன மடவார்கள்
தானான தனதான ...... தனதான
கோடான மடவார்கள் ...... முலைமீதே கூர்வேலை யிணையான ...... விழியூடே ஊடாடி யவரோடு ...... முழலாதே ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே நீடாழி சுழல்தேசம் ...... வலமாக நீடோடி மயில்மீது ...... வருவோனே சூடான தொருசோதி ...... மலைமேவு சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.
Back to Top
473
சிதம்பரம் திருப்புகழ்
செம் கலச
தந்ததன ...... தனதான தந்ததன ...... தனதான
செங்கலச ...... முலையார்பால் சிந்தைபல ...... தடுமாறி அங்கமிக ...... மெலியாதே அன்புருக ...... அருள்வாயே செங்கைபிடி ...... கொடியோனே செஞ்சொல்தெரி ...... புலவோனே மங்கையுமை ...... தருசேயே மன்றுள்வளர் ...... பெருமாளே.
Back to Top
521
கயிலைமலை திருப்புகழ்
புமி அதனில்
தனதனனத் ...... தனதான தனதனனத் ...... தனதான
புமியதனிற் ......ப்ரபுவான புகலியில்வித் ...... தகர்போல அமிர்தகவித் ...... தொடைபாட அடிமைதனக் ...... கருள்வாயே சமரிலெதிர்த் ...... தசுர்மாளத் தனியயில்விட் ...... டருள்வோனே நமசிவயப் ...... பொருளானே ரசதகிரிப் ...... பெருமாளே.
Back to Top
557
சென்னிமலை திருப்புகழ்
பகலிரவினில்
தனதனதனத் ...... தனதான தனதனதனத் ...... தனதான
பகலிரவினிற் ...... றடுமாறா பதிகுருவெனத் ...... தெளிபோத ரகசியமுரைத் ...... தநுபூதி ரதநிலைதனைத் ...... தருவாயே இகபரமதற் ...... கிறையோனே இயலிசையின்முத் ...... தமிழோனே சகசிரகிரிப் ...... பதிவேளே சரவணபவப் ...... பெருமாளே.
Back to Top
598
திருச்செங்கோடு திருப்புகழ்
காலனிடத்து
தான தனத் ...... தனதான
காலனிடத் ...... தணுகாதே காசினியிற் ...... பிறவாதே சீலஅகத் ...... தியஞான தேனமுதைத் ...... தருவாயே மாலயனுக் ...... கரியானே மாதவரைப் ...... பிரியானே நாலுமறைப் ...... பொருளானே நாககிரிப் ...... பெருமாளே.
Back to Top
635
வள்ளியூர் திருப்புகழ்
அல்லில் நேரும்
தய்ய தானன ...... தனதான
அல்லில் நேருமி ...... னதுதானும் அல்ல தாகிய ...... உடல்மாயை கல்லி னேரஅ ...... வழிதோறுங் கையு நானுமு ...... லையலாமோ சொல்லி நேர்படு ...... முதுசூரர் தொய்ய வூர்கெட ...... விடும்வேலா வல்லி மாரிரு ...... புறமாக வள்ளி யூருறை ...... பெருமாளே.
Back to Top
639
கதிர்காமம் திருப்புகழ்
எதிரிலாத பத்தி
தனன தான தத்த ...... தனதான தனன தான தத்த ...... தனதான
எதிரி லாத பத்தி ...... தனைமேவி இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும் இதய வாரி திக்கு ...... ளுறவாகி எனது ளேசி றக்க ...... அருள்வாயே கதிர காம வெற்பி ...... லுறைவோனே கனக மேரு வொத்த ...... புயவீரா மதுர வாணி யுற்ற ...... கழலோனே வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.
Back to Top
646
கதிர்காமம் திருப்புகழ்
மாதர் வசமாய்
தானதன தானத் ...... தனதான
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் தீதகல வோதிப் ...... பணியாரும் தீநரக மீதிற் ...... றிகழ்வாரே நாதவொளி யேநற் ...... குணசீலா நாரியிரு வோரைப் ...... புணர்வேலா சோதிசிவ ஞானக் ...... குமரேசா தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.
Back to Top
685
திருவலிதாயம் திருப்புகழ்
மருமல்லி யார்
தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர் மருளுள்ளி நாயடிய ...... னலையாமல் இருநல்ல வாகுமுன ...... தடிபேண இனவல்ல மானமன ...... தருளாயோ கருநெல்லி மேனியரி ...... மருகோனே கனவள்ளி யார்கணவ ...... முருகேசா திருவல்லி தாயமதி ...... லுறைவோனே திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.
Back to Top
689
திருமயிலை திருப்புகழ்
அயில் ஒத்து எழும்
தனனத் தனதன ...... தனதான
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே அமுதொத் திடுமரு ...... மொழியாலே சயிலத் தெழுதுணை ...... முலையாலே தடையுற் றடியனு ...... மடிவேனோ கயிலைப் பதியரன் ...... முருகோனே கடலக் கரைதிரை ...... யருகேசூழ் மயிலைப் பதிதனி ...... லுறைவோனே மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
Back to Top
779
வைத்தீசுரன் கோயில் திருப்புகழ்
உரத்துறை போத
தனத்தன தானத் ...... தனதான
உரத்துறை போதத் ...... தனியான உனைச்சிறி தோதத் ...... தெரியாது மரத்துறை போலுற் ...... றடியேனும் மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே வரத்துறை நீதர்க் ...... கொருசேயே வயித்திய நாதப் ...... பெருமாளே.
Back to Top
802
திலதைப்பதி திருப்புகழ்
இறையத்தனையோ
தனனத் தனனா ...... தனதான
இறையத் தனையோ ...... அதுதானும் இலையிட் டுணலேய் ...... தருகாலம் அறையிற் பெரிதா ...... மலமாயை அலையப் படுமா ...... றினியாமோ மறையத் தனைமா ...... சிறைசாலை வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர் சிறையைத் தவிரா ...... விடும்வேலா திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.
Back to Top
819
திருவாரூர் திருப்புகழ்
நீதானெத்தனை
தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.
Back to Top
866
கும்பகோணம் திருப்புகழ்
பஞ்சுசேர் நிர்த்த
தந்தனா தத்தத் ...... தனதான
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர் பங்கமார் தொக்கிற் ...... படியாமற் செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன் செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர் பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.
Back to Top
883
தஞ்சை திருப்புகழ்
அஞ்சன வேல்விழி மடமாதர்
தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர் அங்கவர் மாயையி ...... லலைவேனோ விஞ்சுறு மாவுன ...... தடிசேர விம்பம தாயரு ...... ளருளாதோ நஞ்சமு தாவுணு ...... மரனார்தம் நல்கும ராவுமை ...... யருள்பாலா தஞ்சென வாமடி ...... யவர்வாழத் தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
Back to Top
923
கருவூர் திருப்புகழ்
மதியால் வித்தகன்
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய் கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
Back to Top
931
திருவெஞ்சமாக்கூடல் திருப்புகழ்
வண்டுபோற் சார
தந்தனாத் தானத் ...... தனதான
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி மந்திபோற் காலப் ...... பிணிசாடிச் செண்டுபோற் பாசத் ...... துடனாடிச் சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே தொண்டராற் காணப் ...... பெறுவோனே துங்கவேற் கானத் ...... துறைவோனே மிண்டராற் காணக் ...... கிடையானே வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.
Back to Top
943
அவிநாசி திருப்புகழ்
இறவாமற் பிறவாமல்
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
Back to Top
949
பேரூர் திருப்புகழ்
தீராப் பிணிதீர
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
Back to Top
964
பவானி திருப்புகழ்
கலைமேவு ஞான
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப் பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.
Back to Top
965
மதுரை திருப்புகழ்
நீதத்துவமாகி
தானத் தனதான தானத் ...... தனதான
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப் பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே.
Back to Top
1281
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
இத்தரணி மீதில்
தத்ததன தானத் ...... தனதான
இத்தரணி மீதிற் ...... பிறவாதே எத்தரொடு கூடிக் ...... கலவாதே முத்தமிழை யோதித் ...... தளராதே முத்தியடி யேனுக் ...... கருள்வாயே தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா சத்தசொரு பாபுத் ...... தமுதோனே நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.
Back to Top
1283
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
கருப்பற்று ஊறி
தனத்தத் தானத் ...... தனதான
கருப்பற் றூறிப் ...... பிறவாதே கனக்கப் பாடுற் ...... றுழலாதே திருப்பொற் பாதத் ...... தநுபூதி சிறக்கப் பாலித் ...... தருள்வாயே பரப்பற் றாருக் ...... குரியோனே பரத்தப் பாலுக் ...... கணியோனே திருக்கைச் சேவற் ...... கொடியோனே செகத்திற் சோதிப் ...... பெருமாளே.
Back to Top
1285
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
கொடிய மதவேள்
தனதனன தானத் ...... தனதான
கொடியமத வேள்கைக் ...... கணையாலே குரைகணெடு நீலக் ...... கடலாலே நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே கடியரவு பூணர்க் ...... கினியோனே கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே அடியவர்கள் நேசத் ...... துறைவேலா அறுமுகவி நோதப் ...... பெருமாளே.
Back to Top
1286
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
கோடான மேருமலை
தானான தானதனத் ...... தனதான
கோடான மேருமலைத் ...... தனமானார் கோமாள மானவலைக் ...... குழலாதே நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான் நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே மாடேறு மீசர்தமக் ...... கினியோனே மாதானை யாறுமுகப் ...... பெருமாளே.
Back to Top
1288
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
சருவிய சாத்திர
தனதன தாத்தனத் ...... தனதான
சருவிய சாத்திரத் ...... திரளான சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத அருமறை யாற்பெறற் ...... கரிதாய அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ நிருதரை மூக்கறுத் ...... தெழுபார நெடுதிரை யார்ப்பெழப் ...... பொருதோனே பொருளடி யாற்பெறக் ...... கவிபாடும் புலவரு சாத்துணைப் ...... பெருமாளே.
Back to Top
1290
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
தீது உற்றே எழு
தானத் தானன ...... தந்ததான
தீதுற் றேயெழு ...... திங்களாலே தீயைத் தூவிய ...... தென்றலாலே போதுற் றாடும ...... நங்கனாலே போதப் பேதைந ...... லங்கலாமோ வேதத் தோனைமு ...... னிந்தகோவே வேடப் பாவைவி ...... ரும்புமார்பா ஓதச் சூதமெ ...... றிந்தவேலா ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
Back to Top
1291
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
துள்ளு மதவேள்
தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே தொல்லைநெடு நீலக் ...... கடலாலே மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே மெய்யுருகு மானைத் ...... தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே செய்யகும ரேசத் ...... திறலோனே வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
Back to Top
1292
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
தேன் இயல் சொற்
தானதனத் ...... தனதான
தேனியல்சொற் ...... கணிமாதர் சேவைதனைக் ...... கருதாதே யானெனதற் ...... றிடுபோதம் யானறிதற் ...... கருள்வாயே வானவருக் ...... கரசான வாசவனுக் ...... கினியோனே ஆனைமுகற் ...... கிளையோனே ஆறுமுகப் ...... பெருமாளே.
Back to Top
1293
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
நாரியர்கள் ஆசை
தானதன தானனத் ...... தனதான
நாரியர்க ளாசையைக் ...... கருதாதே நானுனிரு பாதபத் ...... மமுநாட ஆரமுத மானசர்க் ...... கரைதேனே ஆனஅநு பூதியைத் ...... தருவாயே காரணம தானவுத் ...... தமசீலா கானகுற மாதினைப் ...... புணர்வோனே சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா தோகைமயில் வாகனப் ...... பெருமாளே.
Back to Top
1294
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
நாளு மிகுத்த
தான தனத்த ...... தனதான
நாளு மிகுத்த ...... கசிவாகி ஞான நிருத்த ...... மதைநாடும் ஏழை தனக்கு ...... மநுபூதி ராசி தழைக்க ...... அருள்வாயே பூளை யெருக்கு ...... மதிநாக பூண ரளித்த ...... சிறியோனே வேளை தனக்கு ...... சிதமாக வேழ மழைத்த ...... பெருமாளே.
Back to Top
1297
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
பட்டுப் படாத
தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும் பக்கத்து மாதர் ...... வசையாலும் சுட்டுச் சுடாத ...... நிலவாலும் துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் தட்டுப் படாத ...... திறல்வீரா தர்க்கித்த சூரர் ...... குலகாலா மட்டுப் படாத ...... மயிலோனே மற்றொப்பி லாத ...... பெருமாளே.
Back to Top
1298
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
பரவைக்கு எத்தனை
தனனத் தத்தன ...... தனதான
பரவைக் கெத்தனை ...... விசைதூது பகரற் குற்றவ ...... ரெனமாணுன் மரபுக் குச்சித ...... ப்ரபுவாக வரமெத் தத்தர ...... வருவாயே கரடக் கற்பக ...... னிளையோனே கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா அரனுக் குற்றது ...... புகல்வோனே அயனைக் குட்டிய ...... பெருமாளே.
Back to Top
1301
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
பொன்னை விரும்பிய
தன்ன தனந்தன ...... தனதான
பொன்னை விரும்பிய ......பொதுமாதர் புன்மை விரும்பியெ ...... தடுமாறும் என்னை விரும்பிநி ...... யொருகால்நின் எண்ணி விரும்பவு ...... மருள்வாயே மின்னை விரும்பிய ...... சடையாளர் மெய்யின் விரும்பிய ...... குருநாதா அன்னை விரும்பிய ...... குறமானை அண்மி விரும்பிய ...... பெருமாளே.
Back to Top
1302
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
மனைமக்கள் சுற்றம்
தனனத்த தத்த ...... தனதான
மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா வலையைக்க டக்க ...... அறியாதே வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன் விழலுக்கி றைத்து ...... விடலாமோ சுனையைக்க லக்கி ...... விளையாடு சொருபக்கு றத்தி ...... மணவாளா தினநற்ச ரித்ர ...... முளதேவர் சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே.
Back to Top
1303
பொதுப்பாடல்கள் திருப்புகழ்
வாரி மீதே
தானனா தானன ...... தந்ததான
வாரிமீ தேயெழு ...... திங்களாலே மாரவே ளேவிய ...... அம்பினாலே பாரெலா மேசிய ...... பண்பினாலே பாவியே னாவிம ...... யங்கலாமோ சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா சோதியே தோகைய ...... மர்ந்தகோவே மூரிமால் யானைம ...... ணந்தமார்பா மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே.
Back to Top
1327
மதுரை திருப்புகழ்
சைவ முதல்
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.
Back to Top
1333
திருக்கானப்பேர் திருப்புகழ்
கோலக்காதிற்
தானத்தானத் ...... தனதானா தானத்தானத் ...... தனதானா
கோலக்காதிற் ...... குழையாலே கோதிச்சேர்மைக் ...... குழலாலே ஞாலத்தாரைத் ...... துயரேசெய் நாரிக்காசைப் ...... படலாமோ மேலைத்தேவர்க் ...... கரியோனே வீரச்சேவற் ...... கொடியோனே காலப்பாசத் ...... துயர்தீராய் கானப்பேரிற் ...... பெருமாளே.
Back to Top
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000