கொலை விழி சுழலச் சுழலச் சிலை நுதல் குவியக் குவியக் கொடி இடை துவளத் துவள
தன பாரக் குறி அணி சிதறச் சிதறக் கரம் வளை கதறக் கதறக் குயில் மொழி பதறப் பதறப் ப்ரிய மோகக் கலவியில் ஒருமித்து ஒருமித்து
இலவு இதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் சில நாளில் கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சீச் சீ எனக் கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ
சல நிதி சுவறச் சுவறத் திசை நிலை பெயரப் பெயரத் தட வரை பிதிரப் பிதிரத் திட மேருத் தமனிய நெடு வெற்பு அதிர
பணி மணி சிரம் விட்டு அகலச் சமன் உடல் கிழியக் கிழியப் பொரு சூரன் பெலம் அது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறைய
பிற நரி தொடரத் தொடரத் திரள் கூகை பெடையொடு குழறக் குழறச் சுர பதி பரவப் பரவ
ப்ரபை அயில் தொடு நல் குமரப் பெருமாளே.
கொலை செய்வது போன்ற கொடுமையைக் காட்டும் கண் மேலும் மேலும் சுழல, வில்லைப் போல் வளைந்த புருவம் மேலும் மேலும் குவிந்து நெருங்க, கொடி போன்ற இடுப்பு மேலும் மேலும் துவண்டு போக, மார்பக பாரங்களாகக் குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆபரணங்கள் மேலும் மேலும் சிதற, கைகளில் அணிந்துள்ள வளையல்கள் மேலும் மேலும் ஒலிக்க, குயில் போன்ற பேச்சு மேலும் மேலும் கலக்கம் உற, ஆசை மோகத்தால் ஏற்பட்ட புணர்ச்சியில் மேலும் மேலும் ஒன்று பட்டு, இலவம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறல்களை மேலும் மேலும் பருகி, கைகளால் மேலும் மேலும் தழுவி அணைத்து, சில நாட்களில் கையில் உள்ள பொருள்கள் அழிந்து போய், நல்ல அருள் குணமும் கெட்டுப் போய், யாவரும் சீ சீ விலகு என்று அதட்டுகின்ற நிலைமையை அடைந்து இந்த உலகத்தில் திரிவேனோ? கடலடி மேலும் மேலும் வற்றிட, திக்குகளின் நிலையும் மேலும் மேலும் அலைய, பெரிய கிரெளஞ்ச மலை மேலும் மேலும் சிதறுண்டு விழ, வலிமை பொருந்திய மேரு என்னும் பொன் மலையாகிய நீண்ட மலை அதிர்ச்சி அடைய, பாம்பு (ஆதிசேஷனின்) சிரத்தில் உள்ள மணி அதனுடைய தலையை விட்டுச் சிதறி விழ, யமனுடைய உடல் (பல உயிர்களைக் கவர்வதால்) அலுப்புண்டு குலைய, சண்டை செய்யும் சூரனுடய உடல் வலிமை மேலும் மேலும் குறைய, (பகைவர்களின்) ஆயுதங்கள் மேலும் மேலும் அழிபட்டு ஒழிய, நரிகளும் கழுகுகள் முதலிய பிறவும் மேலும் மேலும் (பிணங்களைத் தின்னத்) தொடர்ந்து நெருங்க, கூட்டமான கோட்டான்கள் பெண் கோட்டான்களோடு மேலும் மேலும் கூவ, தேவேந்திரன் தொழுது கொண்டே இருக்க, ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல குமரப் பெருமாளே.
கொலை விழி சுழலச் சுழலச் சிலை நுதல் குவியக் குவியக் கொடி இடை துவளத் துவள ... கொலை செய்வது போன்ற கொடுமையைக் காட்டும் கண் மேலும் மேலும் சுழல, வில்லைப் போல் வளைந்த புருவம் மேலும் மேலும் குவிந்து நெருங்க, கொடி போன்ற இடுப்பு மேலும் மேலும் துவண்டு போக, தன பாரக் குறி அணி சிதறச் சிதறக் கரம் வளை கதறக் கதறக் குயில் மொழி பதறப் பதறப் ப்ரிய மோகக் கலவியில் ஒருமித்து ஒருமித்து ... மார்பக பாரங்களாகக் குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆபரணங்கள் மேலும் மேலும் சிதற, கைகளில் அணிந்துள்ள வளையல்கள் மேலும் மேலும் ஒலிக்க, குயில் போன்ற பேச்சு மேலும் மேலும் கலக்கம் உற, ஆசை மோகத்தால் ஏற்பட்ட புணர்ச்சியில் மேலும் மேலும் ஒன்று பட்டு, இலவு இதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் சில நாளில் கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சீச் சீ எனக் கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ ... இலவம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறல்களை மேலும் மேலும் பருகி, கைகளால் மேலும் மேலும் தழுவி அணைத்து, சில நாட்களில் கையில் உள்ள பொருள்கள் அழிந்து போய், நல்ல அருள் குணமும் கெட்டுப் போய், யாவரும் சீ சீ விலகு என்று அதட்டுகின்ற நிலைமையை அடைந்து இந்த உலகத்தில் திரிவேனோ? சல நிதி சுவறச் சுவறத் திசை நிலை பெயரப் பெயரத் தட வரை பிதிரப் பிதிரத் திட மேருத் தமனிய நெடு வெற்பு அதிர ... கடலடி மேலும் மேலும் வற்றிட, திக்குகளின் நிலையும் மேலும் மேலும் அலைய, பெரிய கிரெளஞ்ச மலை மேலும் மேலும் சிதறுண்டு விழ, வலிமை பொருந்திய மேரு என்னும் பொன் மலையாகிய நீண்ட மலை அதிர்ச்சி அடைய, பணி மணி சிரம் விட்டு அகலச் சமன் உடல் கிழியக் கிழியப் பொரு சூரன் பெலம் அது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறைய ... பாம்பு (ஆதிசேஷனின்) சிரத்தில் உள்ள மணி அதனுடைய தலையை விட்டுச் சிதறி விழ, யமனுடைய உடல் (பல உயிர்களைக் கவர்வதால்) அலுப்புண்டு குலைய, சண்டை செய்யும் சூரனுடய உடல் வலிமை மேலும் மேலும் குறைய, (பகைவர்களின்) ஆயுதங்கள் மேலும் மேலும் அழிபட்டு ஒழிய, பிற நரி தொடரத் தொடரத் திரள் கூகை பெடையொடு குழறக் குழறச் சுர பதி பரவப் பரவ ... நரிகளும் கழுகுகள் முதலிய பிறவும் மேலும் மேலும் (பிணங்களைத் தின்னத்) தொடர்ந்து நெருங்க, கூட்டமான கோட்டான்கள் பெண் கோட்டான்களோடு மேலும் மேலும் கூவ, தேவேந்திரன் தொழுது கொண்டே இருக்க, ப்ரபை அயில் தொடு நல் குமரப் பெருமாளே. ... ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல குமரப் பெருமாளே.