மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார்
இறைஞ்ச மொழிந்ததை
வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன
வான் பூதமும் கரணங்களும்
நான் போய் ஒடுங்க அடங்கலும் மாய்ந்தால்
விளங்கும் அது ஒன்றினை அருளாயேல்
வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம்
மீண்டு ஆறி நின் சரணங்களில் வீழ்ந்து
ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய்
வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண் சரண் என்பது
வீண் போம் அது ஒன்று அ(ல்)ல என்பதை உணராதோ
ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர்
தடம் தனில் ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாய் உற்று
ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட
ஞான்று ஊது துங்க சலஞ்சலம் ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில்
நேசம் பூண்டு ஆழி கொண்டு வனங்களில் ஏய்ந்து
(தக்ஷயாகத்துக்குப் பின்) இறந்து பட்ட திருமால், பிரமன் முதலோருடைய எலும்பை அணிந்தவரும், ஜடாமுடிகொண்ட தலைவரும் ஆகிய சிவபெருமான் உன்னை வணங்க, நீ உபதேசித்த பிரணவப் பொருளை, விண், பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய பெரிய ஐம்பூதங்களும், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) எனப்படும் நான்கு கரணங்களும், நான், எனது - என்னும் அகங்கார மமகாரமும் நீங்கி ஒடுங்க, இங்ஙனம் எல்லாம் இறந்துபட்டால் விளங்குவதான அந்த ஒப்பற்ற ஒரு பொருளை நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக) வேண்டாமை என்னும் ஆசை நீக்கமான மன நிலை ஒன்றை நான் அடைந்து, என் மனம் மீண்டும் பல திசைகளில் ஓடாது அமைதிபெற்று உனது திருவடிகளில் விழுந்து ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான் உடையவனாகி, அரசே, கடப்ப மாலை அணிந்த காரணனே, உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழிபாடு வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை உணரமாட்டேனோ? உலகத்தை எல்லாம் ஆள்பவர், மூவுலகையும் தமது திருவடி இரண்டினால் அளக்கவேண்டி நீண்ட உருவம் (விஸ்வரூபம்) எடுத்தவர், முகுந்தர், மடுவில் அன்றொரு நாள் உயிரே போய்விட்டது என்று முதலையின் வாயில் அகப்பட்டு, அங்கே ஒரு மலைபோன்ற (கஜேந்திரன் என்னும்) யானை (ஆதிமூலமே என்று) கூச்சலிட, அப்பொழுது ஊதின பரிசுத்தமான பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கை, மலரை ஒத்த வாயில் முழக்கம் செய்து சங்கின் ஓசை அடங்குவதற்குள் அளவில்லாத அன்பு பூண்டு சுதர்
மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் ... (தக்ஷயாகத்துக்குப் பின்) இறந்து பட்ட திருமால், பிரமன் முதலோருடைய எலும்பை அணிந்தவரும், ஜடாமுடிகொண்ட தலைவரும் ஆகிய சிவபெருமான் இறைஞ்ச மொழிந்ததை ... உன்னை வணங்க, நீ உபதேசித்த பிரணவப் பொருளை, வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன ... விண், பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய வான் பூதமும் கரணங்களும் ... பெரிய ஐம்பூதங்களும், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) எனப்படும் நான்கு கரணங்களும், நான் போய் ஒடுங்க அடங்கலும் மாய்ந்தால் ... நான், எனது - என்னும் அகங்கார மமகாரமும் நீங்கி ஒடுங்க, இங்ஙனம் எல்லாம் இறந்துபட்டால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல் ... விளங்குவதான அந்த ஒப்பற்ற ஒரு பொருளை நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக) வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம் ... வேண்டாமை என்னும் ஆசை நீக்கமான மன நிலை ஒன்றை நான் அடைந்து, மீண்டு ஆறி நின் சரணங்களில் வீழ்ந்து ... என் மனம் மீண்டும் பல திசைகளில் ஓடாது அமைதிபெற்று உனது திருவடிகளில் விழுந்து ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய் ... ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான் உடையவனாகி, வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண் சரண் என்பது ... அரசே, கடப்ப மாலை அணிந்த காரணனே, உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழிபாடு வீண் போம் அது ஒன்று அ(ல்)ல என்பதை உணராதோ ... வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை உணரமாட்டேனோ? ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் ... உலகத்தை எல்லாம் ஆள்பவர், மூவுலகையும் தமது திருவடி இரண்டினால் அளக்கவேண்டி நீண்ட உருவம் (விஸ்வரூபம்) எடுத்தவர், முகுந்தர், தடம் தனில் ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாய் உற்று ... மடுவில் அன்றொரு நாள் உயிரே போய்விட்டது என்று முதலையின் வாயில் அகப்பட்டு, ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ... அங்கே ஒரு மலைபோன்ற (கஜேந்திரன் என்னும்) யானை (ஆதிமூலமே என்று) கூச்சலிட, ஞான்று ஊது துங்க சலஞ்சலம் ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில் ... அப்பொழுது ஊதின பரிசுத்தமான பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கை, மலரை ஒத்த வாயில் முழக்கம் செய்து சங்கின் ஓசை அடங்குவதற்குள் நேசம் பூண்டு ஆழி கொண்டு வனங்களில் ஏய்ந்து ... அளவில்லாத அன்பு பூண்டு சுதர்