சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
1301 - பொன்னை விரும்பிய (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1301 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1102 )
பொன்னை விரும்பிய
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தன்ன தனந்தன ...... தனதான
பொன்னை விரும்பிய ......பொதுமாதர்
புன்மை விரும்பியெ ...... தடுமாறும்
என்னை விரும்பிநி ...... யொருகால்நின்
எண்ணி விரும்பவு ...... மருள்வாயே
மின்னை விரும்பிய ...... சடையாளர்
மெய்யின் விரும்பிய ...... குருநாதா
அன்னை விரும்பிய ...... குறமானை
அண்மி விரும்பிய ...... பெருமாளே.
Easy Version:
பொன்னை விரும்பிய பொதுமாதர்
புன்மை விரும்பியெ தடுமாறும்
என்னை விரும்பி நி யொருகால்
நின்(னை) எண்ணி விரும்பவும் அருள்வாயே
மின்னை விரும்பிய சடையாளர்
மெய்யின் விரும்பிய குருநாதா
அன்னை விரும்பிய குறமானை
அண்மி விரும்பிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
விரும்புகின்ற விலைமாதர்களின்
புன்மை விரும்பியெ தடுமாறும் ... இழிவான குணத்தையே
விரும்பித் தடுமாறுகின்ற (போதிலும்)
என்னை விரும்பி நி யொருகால் ... என்னை விரும்பி நீ ஒரு
முறையேனும்
நின்(னை) எண்ணி விரும்பவும் அருள்வாயே ... உன்னை
தியானித்து நான் விரும்புமாறு அருள் புரிவாயாக.
மின்னை விரும்பிய சடையாளர் ... மின்னலைப்போல் ஒளி
வீசும் செஞ்சடைப் பெருமானாகிய சிவபிரான்
மெய்யின் விரும்பிய குருநாதா ... உண்மைப் பொருளை
விரும்பி நிற்க, அவருக்கு உபதேசம் செய்த குருநாதனே,
அன்னை விரும்பிய குறமானை ... உமையன்னை விரும்பிய
குறமான் வள்ளியை
அண்மி விரும்பிய பெருமாளே. ... நெருங்கி விருப்பம் கொண்ட
பெருமாளே.
1
Similar songs:
தன்ன தனந்தன ...... தனதான
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song