குருபரனே, சரவணபவனே, ஷண்முகனே, குகப் பெருமானே, ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான திருப்புயங்களை உடையவனே, புலிகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக. ??? .. அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம் எழுப்பும் ஓசை, மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக, ??? .. இங்கு முற்றுப் பெறவில்லை கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர, ??? .. தாமரைமலர் போன்றதும் சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே.