கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து
வாயுவை கரும வசனங்களால் மறித்து
அனல் ஊதி
கவலைப் படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய் விட
கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள
குறைவு அற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற
குரு மலை விளங்கும் ஞான சற் குரு நாதா
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து
கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ
சிறைத் தளை விளங்கும் பேர்
முடிப்புயல் உடன் அடங்கவே பிழைத்து
இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி
திமிர மிகு சிந்து வாய் விட
சிகரிகளும் வெந்து நீர் எழ
திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும்
குற்றங்களுக்கு இடமான உடல் நிலைத்து நிற்காது என்று எண்ணுதலை விட்டு, (அவ்வுடல் நிலைத்து நிற்கச் செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை தொழில் மந்திரங்களால் தடுத்து நிறுத்தி, மூலாக்கினியை எழுப்பி, கவலைக்கு இடம் தருகின்ற யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணும் சிந்தனைகள் தொலையவும், கலக்கத்தைத் தரும் ஐம்புலன்களும் ஒடுங்கி வேரற்றுப் போகவும், என் செயல்கள் எல்லாம் அழியவும், குறைவின்றி நிறைந்ததான மவுன நிலையை, குணங்கள் அற்ற நிலையை, நான் அடைந்து வீட்டின்பத்தைப் பெறவும், (அதற்காக) சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதனே, குமரனே, சரணம் என்று கூதளச் செடியின் புது மலரைச் சொரிந்து, (உனது) அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சிந்தித்து உன்னை உணர்வேனோ? சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கியவர்களான தேவர்கள் இந்திரன் முதலான யாவரும் ஒருங்கே பிழைக்கவும், தேவர்கள் தங்கள் ஊராகிய (அமராவதி என்ற) பொன்னுலகில் குடி போகவும், போரைப் புரிந்து, இருள் மிகுந்த கடல் ஓலமிட, மலைகள் வெந்து பொடியாக, (சுதர்
கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து ... குற்றங்களுக்கு இடமான உடல் நிலைத்து நிற்காது என்று எண்ணுதலை விட்டு, வாயுவை கரும வசனங்களால் மறித்து ... (அவ்வுடல் நிலைத்து நிற்கச் செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை தொழில் மந்திரங்களால் தடுத்து நிறுத்தி, அனல் ஊதி ... மூலாக்கினியை எழுப்பி, கவலைப் படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய் விட ... கவலைக்கு இடம் தருகின்ற யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணும் சிந்தனைகள் தொலையவும், கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள ... கலக்கத்தைத் தரும் ஐம்புலன்களும் ஒடுங்கி வேரற்றுப் போகவும், என் செயல்கள் எல்லாம் அழியவும், குறைவு அற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற ... குறைவின்றி நிறைந்ததான மவுன நிலையை, குணங்கள் அற்ற நிலையை, நான் அடைந்து வீட்டின்பத்தைப் பெறவும், குரு மலை விளங்கும் ஞான சற் குரு நாதா ... (அதற்காக) சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதனே, குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து ... குமரனே, சரணம் என்று கூதளச் செடியின் புது மலரைச் சொரிந்து, கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ ... (உனது) அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சிந்தித்து உன்னை உணர்வேனோ? சிறைத் தளை விளங்கும் பேர் ... சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கியவர்களான தேவர்கள் முடிப்புயல் உடன் அடங்கவே பிழைத்து ... இந்திரன் முதலான யாவரும் ஒருங்கே பிழைக்கவும், இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி ... தேவர்கள் தங்கள் ஊராகிய (அமராவதி என்ற) பொன்னுலகில் குடி போகவும், போரைப் புரிந்து, திமிர மிகு சிந்து வாய் விட ... இருள் மிகுந்த கடல் ஓலமிட, சிகரிகளும் வெந்து நீர் எழ ... மலைகள் வெந்து பொடியாக, திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் ... (சுதர்