சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
685 - மருமல்லி யார் (திருவலிதாயம்) Songs from this thalam திருவலிதாயம் 685 - மருமல்லி யார்
685 திருவலிதாயம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 263 - வாரியார் # 695 )
மருமல்லி யார்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்
இருநல்ல வாகுமுன ...... தடிபேண
இனவல்ல மானமன ...... தருளாயோ
கருநெல்லி மேனியரி ...... மருகோனே
கனவள்ளி யார்கணவ ...... முருகேசா
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.
Easy Version:
மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடியன்அலையாமல்
இரு நல்லவாகும் உனதடிபேண
இனவல்ல மான மனது அருளாயோ
கருநெல்லி மேனி அரி மருகோனே
கனவள்ளியார்கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. Add (additional) Audio/Video Link
நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை
மருளுள்ளி நாயடியன்அலையாமல் ... காம மயக்கத்தால் நினைந்து
நினைந்து அடிநாயேன் அலைவுறாமல்,
இரு நல்லவாகும் உனதடிபேண ... நன்மை நல்கும் உன் இரண்டு
திருவடிகளை விரும்பிப் போற்ற
இனவல்ல மான மனது அருளாயோ ... தக்கதான பெருமையும்
மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ?
கருநெல்லி மேனி அரி மருகோனே ... கருநெல்லிக்காய் போல
பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே,
கனவள்ளியார்கணவ முருகேசா ... பெருமை வாய்ந்த வள்ளி
தேவியின் கணவனே, முருகேசா,
திருவல்லிதாயம் அதில் உறைவோனே ... திருவலிதாயம் என்ற
தலத்தில் வீற்றிருப்பவனே,
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. ... விளங்குகின்ற
பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.
1
Similar songs:
தனதய்ய தானதன ...... தனதான
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song