சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
751   விருத்தாசலம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 310 - வாரியார் # 761 )  

திருமொழி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
     செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
     தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
     னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
     கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
     முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
Easy Version:
திருமொழி யுரைபெற
அரன் உனதுழி பணிசெய
முனம் அருளிய குளவோனே
திறலுயர் மதுரையில் அமணரை
உயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே
ஒருவு அரும் உனதருள்
பரிவிலர் அவர்களின்உறு
படர் உறுமெனை யருள்வாயோ
உலகினில் அனைவர்கள் புகழ்வுற
அருணையில் ஒருநொடி தனில்வரு மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறை
தமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே.
Add (additional) Audio/Video Link

திருமொழி யுரைபெற ... வேத மொழியாம் ப்ரணவத்தின்
விளக்கத்தைப் பெறுவதற்காக
அரன் உனதுழி பணிசெய ... சிவபிரான் உன்னிடத்தில் வணங்க
முனம் அருளிய குளவோனே ... முன்பு அவருக்கு உபதேசித்து
அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே,
திறலுயர் மதுரையில் அமணரை ... ஒளிமிக்க மதுரையில்
சமணர்களின்
உயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே ... உயிர்கள் கழுமரத்தில்
கலங்கிச் சிதறுபட வைத்தவனே,
ஒருவு அரும் உனதருள் ... நீக்குவதற்கு அரிதான உன்னுடைய
திருவருளில்
பரிவிலர் அவர்களின்உறு ... அன்பில்லாதவர்களைப் போல
படர் உறுமெனை யருள்வாயோ ... துன்பத்தை அனுபவிக்கின்ற
என்னைக் கண்பார்த்தருள்வாயோ?
உலகினில் அனைவர்கள் புகழ்வுற ... உலகத்தில் உள்ள யாவரும்
புகழும்படியாக
அருணையில் ஒருநொடி தனில்வரு மயில்வீரா ...
திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே,
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் ... கரிய ரேகைகள்
பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய
குற மகள் வள்ளியின்
கணினெதிர் தருவென முனமானாய் ... கண்களுக்கு எதிரிலேயே
வேங்கை மரமாக முன்பு ஆனவனே,
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக ... கார்மேகத்தை ஒத்த
நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே,
கருணையில் மொழிதரு முதல்வோனே ... கருணையோடு
உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே,
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட ... நறுமணம் வீசும் மலர்
கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு
முரணுறு மசுரனை முனிவோனே ... மாறுபட்டு நின்ற அசுரனாம்
சூரனைக் கோபித்தவனே,
முடிபவர் வடிவறு சுசிகர முறை ... இங்கு இறப்பவர்கள் மீண்டும்
பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய
தமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே. ... தமிழில் முதுகிரி
எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே.

Similar songs:

240 - அரகர சிவன் அரி (திருத்தணிகை)

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

523 - ஒருபதும் இருபதும் (ஸ்ரீ சைலம் திருமலை)

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

751 - திருமொழி (விருத்தாசலம்)

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

Songs from this thalam விருத்தாசலம்

750 - குடத் தாமரையாம்

751 - திருமொழி

752 - பசை அற்ற உடல்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song