குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோநடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் பயிலா மனம் மகிழ் மோகித(ம்) சுக சாகர மட மாதர்கள்
பகையே என நினையாது உற நண்பு கூரும் பசு பாசமும் அகிலா அதிக பரிபூரண புரண ஆகர பதி நேரு(ம்) நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ
வெயில் வீசிய கதிர் ஆயிர(ம்) அருணோதய இருள் நாசனவிசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் விசிக ஆகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருக ஈசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே
பேச்சு குயிலின் குரல் தானோ, கண்கள் அம்போ, இடுப்பு கொடியோ, நடை பெண் யானை போன்றதோ, இந்த அழகைத் தெரிந்து கொள்ளுங்கள், இனிமேல் தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம் (விலைமாதர்களைப்) புகழ்ந்து பாடி, கொஞ்சிப் பேசி அவர்களுடைய காலைப் பிடித்தும், வாயிதழைக் கடித்தும், நகத்தால் கீறியும், ஆடையைக் கலைத்தும், பெண்குறியில் திளைத்தும், இரண்டு மார்பகங்கள் மீது நெருங்கிப் பழகியும் மனம் களிப்பதற்கு இடமாயுள்ளவர்களும், காம மயக்க சுகக் கடல் போல் உள்ளவர்களுமான அழகான விலைமாதர்கள் பகைத்து விலக்கத் தக்கவர்கள் என்று நான் நினைக்காமல் இருக்கிறேனே, பசு (ஆன்மா), பாசம் (ஆணவம், கர்மம், ஆகிய தளையாகிய மும்மலக்கட்டு) ஆக எல்லாவற்றுக்கும் மேம்பட்ட, ஆதரவை மிகக் காட்டும் நிறை பொருளே, ஒளிக்கு இருப்பிடமானவனே, இறைவனாகிய உன்னிடத்தில் உள்ள திருவருளால் உண்மையான மெய்ப் பொருளை நான் உணர மாட்டேனோ? ஒளி வீசும் ஆயிரக் கணக்கான கிரணங்களை வீசுபவனும், உதய காலத்தில் இருளைப் போக்குபவனும், வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளைக் கொண்டவனுமான சூரியனின் பிள்ளையாகிய அங்க நாட்டு அரசனான கர்ணன் அம்புகள் நிறைந்த போரில் தனக்குப் பகையாயிருந்த பேடி (அருச்சுனனுடைய) கை அம்பால் இறந்து படும் போது, (அந்தக் கர்ணனுக்குத்) தரிசனம் தந்தவனாகிய திருமாலும், பிரமனும் தனது முடியைத் தேடிய செல்வ நாயகனான சிவபெருமானுடைய குமாரனே, பக்கங்களில் உள்ள ஊர்கள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் மயில் வாகனனே, பல வகையான கலைமான்கள், பிற வகையான மான்கள், புலி, யானைகளையும், அகில், சந்தனம் இவைகளையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரி நதியின் நீர் மண்டிய பொடி மண் உள்ளதும், அதிகமாக மனதுக்கு இனிமை தருவதுமான வயலூரில் உலவும் வலியவனே, முருகனே, ஈசுவரனே, பொன்னுலகில் வாழும் தேவர்களின் தம்பிரானே.
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோநடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி ... பேச்சு குயிலின் குரல் தானோ, கண்கள் அம்போ, இடுப்பு கொடியோ, நடை பெண் யானை போன்றதோ, இந்த அழகைத் தெரிந்து கொள்ளுங்கள், இனிமேல் தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம் (விலைமாதர்களைப்) புகழ்ந்து பாடி, குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் பயிலா மனம் மகிழ் மோகித(ம்) சுக சாகர மட மாதர்கள் ... கொஞ்சிப் பேசி அவர்களுடைய காலைப் பிடித்தும், வாயிதழைக் கடித்தும், நகத்தால் கீறியும், ஆடையைக் கலைத்தும், பெண்குறியில் திளைத்தும், இரண்டு மார்பகங்கள் மீது நெருங்கிப் பழகியும் மனம் களிப்பதற்கு இடமாயுள்ளவர்களும், காம மயக்க சுகக் கடல் போல் உள்ளவர்களுமான அழகான விலைமாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் பசு பாசமும் அகிலா அதிக பரிபூரண புரண ஆகர பதி நேரு(ம்) நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ ... பகைத்து விலக்கத் தக்கவர்கள் என்று நான் நினைக்காமல் இருக்கிறேனே, பசு (ஆன்மா), பாசம் (ஆணவம், கர்மம், ஆகிய தளையாகிய மும்மலக்கட்டு) ஆக எல்லாவற்றுக்கும் மேம்பட்ட, ஆதரவை மிகக் காட்டும் நிறை பொருளே, ஒளிக்கு இருப்பிடமானவனே, இறைவனாகிய உன்னிடத்தில் உள்ள திருவருளால் உண்மையான மெய்ப் பொருளை நான் உணர மாட்டேனோ? வெயில் வீசிய கதிர் ஆயிர(ம்) அருணோதய இருள் நாசனவிசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் விசிக ஆகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா ... ஒளி வீசும் ஆயிரக் கணக்கான கிரணங்களை வீசுபவனும், உதய காலத்தில் இருளைப் போக்குபவனும், வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளைக் கொண்டவனுமான சூரியனின் பிள்ளையாகிய அங்க நாட்டு அரசனான கர்ணன் அம்புகள் நிறைந்த போரில் தனக்குப் பகையாயிருந்த பேடி (அருச்சுனனுடைய) கை அம்பால் இறந்து படும் போது, (அந்தக் கர்ணனுக்குத்) தரிசனம் தந்தவனாகிய திருமாலும், பிரமனும் தனது முடியைத் தேடிய செல்வ நாயகனான சிவபெருமானுடைய குமாரனே, அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருக ஈசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே ... பக்கங்களில் உள்ள ஊர்கள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் மயில் வாகனனே, பல வகையான கலைமான்கள், பிற வகையான மான்கள், புலி, யானைகளையும், அகில், சந்தனம் இவைகளையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரி நதியின் நீர் மண்டிய பொடி மண் உள்ளதும், அதிகமாக மனதுக்கு இனிமை தருவதுமான வயலூரில் உலவும் வலியவனே, முருகனே, ஈசுவரனே, பொன்னுலகில் வாழும் தேவர்களின் தம்பிரானே.