![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், 114 - ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி) Songs from this thalam பழநி
114 பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 60 - வாரியார் # 153 )
ஆறுமுகம் ஆறுமுகம்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய தென்று நாளும்
ஏறுமயில் வாகன குகா சரவணா எனது
ஈச எனமானம் உனதென்றும் ஓதும்
ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவில்உனை
யேவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேல, அணி
நீலமயில் வாக உமை தந்தவேளே
நீசர்கள் த(ம்)மோடு (எ)னது தீவினையெலா மடிய
நீடு தனி வேல் விடு மடங்கல்வேலா
சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர் துணைவா சிகரி அண்டகூடஞ்
சேரும் அழகார் பழனி வாழ் குமரனே பிரம
தேவர் வரதா முருக தம்பிரானே.
ஆறுமுகம் .. ஆறுமுகம் என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், தினந்தோறும், ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே , குகனே , சரவணனே , என்னுடைய ஈசனே , என் பெருமை உனது பெருமை என்று கூறியும் ஏழையடியார்களின் மனத்துயர் ஏன் எப்படி வந்தது என்று முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை யார்தாம் புகழ்வார்கள்? வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய் வேலனே அழகிய நீலமயில் வாகனனே உமையாள் பெற்ற முருகவேளே அசுரர்கள் அனைவருடனும் என்னுடைய தீவினையாவும் மடிந்தொழிய நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே கோபித்து வந்த பெரும் அசுரன் (கஜமுகாசுரன்) உயிரை உண்ட ஆனைமுகத் தேவரின் தம்பியே மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும் அழகு நிறைந்த பழநிவாழும் குமரனே பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே முருகனே, தம்பிரானே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம்
ஆறுமுகம் என்றுபூதி ... 'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை
சொல்லி திருநீற்றை
ஆகம் அணி மாதவர்கள் ... உடலிலே பூசி அணியும் பெரும்
தவசிகள்தம்
பாதமலர் சூடும் அடியார்கள் ... பாதமலர்களைச் சூடும்
அடியவர்களின்
பதமே துணைய தென்று ... திருவடியே துணையென்று
கடைப்பிடித்தும்,
நாளும் ஏறுமயில் வாகன ... தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த
மயில் வாகனனே',
குகா சரவணா எனது ஈச ... 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய
ஈசனே',
எனமானம் உனதென்றும் ஓதும் ... 'என் பெருமை உனது பெருமை'
என்று கூறியும்
ஏழைகள் வியாகுலம் ... ஏழையடியார்களின் மனத்துயர்
இதேதென வினாவில்உனை ... ஏன் எப்படி வந்தது என்று
முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை
யேவர் புகழ்வார் ... யார்தாம் புகழ்வார்கள்?
மறையும் என்சொலாதோ ... வேதம்தான் பின்பு உன்னை என்ன
சொல்லாதோ?
நீறுபடு மாழைபொரு மேனியவ ... திருநீறு துலங்கும் பொன்னார்
மேனியுடையாய்
வேல, அணி நீலமயில் வாக ... வேலனே அழகிய நீலமயில்
வாகனனே
உமை தந்தவேளே ... உமையாள் பெற்ற முருகவேளே
நீசர்கள் த(ம்)மோடு ... அசுரர்கள் அனைவருடனும்
(எ)னது தீவினையெலா மடிய ... என்னுடைய தீவினையாவும்
மடிந்தொழிய
நீடு தனி வேல் விடு ... நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச்
செலுத்திய
மடங்கல்வேலா ... வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே
சீறிவரு மாறவுணன் ... கோபித்து வந்த பெரும் அசுரன்
(கஜமுகாசுரன்)
ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா ... உயிரை உண்ட
ஆனைமுகத் தேவரின் தம்பியே
சிகரி அண்டகூடஞ்சேரும் ... மலைச்சிகரம் வான்முகட்டைத்
தொடும்
அழகார் பழனி வாழ் குமரனே ... அழகு நிறைந்த பழநிவாழும்
குமரனே
பிரம தேவர் வரதா ... பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே
முருக தம்பிரானே. ... முருகனே, தம்பிரானே.
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000