💾 Save Offline
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்ததன ...... தனதான
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென ...... வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது ...... புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு ...... விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரம் இரு செவிமீதி லும்பகர்செய் குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்த நின செயலேவி ரும்பி உளம் நினையாமல் அவமாயை கொண்டு உலகில் விருதாவ லைந்துழலும் அடியேனை அஞ்சலென வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீரமிஞ்சுகதிர் வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள் சவுந்தரிக செகமேல்மெய் கண்ட விறல் பெருமாளே.
சிவபிரானது மனம் குளிரும்படியாக ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை அவரது இரு செவிகளிலும் சொன்ன குருநாதனே, சிவகாம சுந்தரியாம் பார்வதியின் மேன்மையான மைந்தனே, கந்தனே, உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி உள்ளத்தில் நினைக்காமல், கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி, உலகிலே வீணாக அலைந்து திரியும் அடியேனை அஞ்சாதே எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும். அறிவு மனத்திலே பெருகி வளரவும், துன்பங்களெல்லாம் தொலையவும், நின்னருளால் பெறக் கூடிய ஞான இன்பத்தை தந்தருள்வாயாக. வெண்ணெயையும் திருடி, உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி, ரகுராமனாம் திருமால் மனமகிழும் மருமகனே, நவகண்ட பூமியில் யாவரும் கைதொழுது வணங்கும் உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே, நலம் தரும் மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும் தலைவனே, தேவயானை, அழகிய குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே, நிறைவான திறல் வாய்ந்த வீரனே, மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே, திருவாவினன்குடியில் எழுந்தருளிய மன்மதனே, அழகனே, உலகில் உண்மைப் பொருளைக் கண்டு தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)
சிவனார் மனங்குளிர ... சிவபிரானது மனம் குளிரும்படியாகஉபதேச மந்த்ரம் ... ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தைஇருசெவிமீதி லும்பகர்செய் ... அவரது இரு செவிகளிலும் சொன்னகுருநாதா ... குருநாதனே,சிவகாம சுந்தரிதன் ... சிவகாம சுந்தரியாம் பார்வதியின்வரபால கந்த ... மேன்மையான மைந்தனே, கந்தனே,நினசெயலேவி ரும்பி ... உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பிஉளம் நினையாமல் ... உள்ளத்தில் நினைக்காமல்,அவமாயை கொண்டு ... கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி,உலகில் விருதாவ லைந்துழலும் ... உலகிலே வீணாக அலைந்து திரியும்அடியேனை அஞ்சலென வரவேணும் ... அடியேனை அஞ்சாதே எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும்.அறிவாக மும்பெருக ... அறிவு மனத்திலே பெருகி வளரவும்,இடரான துந்தொலைய ... துன்பங்களெல்லாம் தொலையவும்,அருள்ஞான இன்பமது ... நின்னருளால் பெறக் கூடிய ஞான இன்பத்தைபுரிவாயே ... தந்தருள்வாயாக.நவநீத முந்திருடி ... வெண்ணெயையும் திருடி,உரலோடெ யொன்றுமரி ... உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி,ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே ... ரகுராமனாம் திருமால் மனமகிழும் மருமகனே,நவலோக முங்கைதொழு ... நவகண்ட பூமியில் யாவரும் கைதொழுது வணங்கும்நிசதேவ லங்கிருத ... உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே,நலமான விஞ்சைகரு விளைகோவே ... நலம் தரும் மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும் தலைவனே,தெவயானை யங்குறமின் மணவாள ... தேவயானை, அழகிய குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே,சம்ப்ரமுறு திறல்வீர ... நிறைவான திறல் வாய்ந்த வீரனே,மிஞ்சுகதிர் வடிவேலா ... மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே,திருவாவி னன்குடியில் வருவேள் ... திருவாவினன்குடியில் எழுந்தருளிய மன்மதனே,சவுந்தரிக ... அழகனே,செகமேல்மெய் கண்ட ... உலகில் உண்மைப் பொருளைக் கண்டு தெரிவித்தவிறல் பெருமாளே. ... திறம் வாய்ந்த பெருமாளே.
Similar songs: 156 - சிவனார் மனங்குளிர (பழநி)
தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்ததன ...... தனதான
Songs from this thalam பழநி
104 - அகல்வினை
105 - அணிபட்டு அணுகி
106 - அதல விதல
107 - அபகார நிந்தை
108 - அரிசன வாடை
109 - அருத்தி வாழ்வொடு
110 - அவனிதனிலே
111 - அறமிலா நிலை
112 - ஆதாளிகள் புரி
113 - ஆலகாலம் என
114 - ஆறுமுகம் ஆறுமுகம்
115 - இத் தாரணிக்குள்
116 - இரவி என
117 - இருகனக மாமேரு
118 - இரு செப்பென
119 - இலகிய களப
120 - இலகுகனி மிஞ்சு
121 - உயிர்க் கூடு
122 - உலகபசு பாச
123 - ஒருபொழுதும் இருசரண
124 - ஒருவரை ஒருவர்
125 - ஓடி ஓடி
126 - கடலைச் சிறை
127 - கடலை பொரியவரை
128 - கதியை விலக்கு
129 - கரிய பெரிய
130 - கரிய மேகமதோ
131 - கரியிணை கோடென
132 - கருகி அகன்று
133 - கருப்புவிலில்
134 - கருவின் உருவாகி
135 - கலக வாள்விழி
136 - கலகக் கயல்விழி
137 - கலவியி லிச்சி
138 - கலை கொடு
139 - களப முலையை
140 - கறுத்த குழலணி
141 - கனக கும்பம்
142 - கனத்திறுகி
143 - கனமாய் எழுந்து
144 - கார் அணிந்த
145 - குரம்பை மலசலம்
146 - குருதி மலசலம்
147 - குழல் அடவி
148 - குழல்கள் சரிய
149 - குறித்தமணி
150 - குன்றுங் குன்றும்
151 - கொந்துத் தரு
152 - கோல குங்கும
153 - கோல மதிவதனம்
154 - சகடத்திற் குழை
155 - சிந்துர கூரம
156 - சிவனார் மனங்குளிர
157 - சிறு பறையும்
158 - சீ உதிரம் எங்கும்
159 - சீறல் அசடன்
160 - சுருதி முடி மோனம்
161 - சுருளளக பார
162 - ஞானங்கொள்
163 - தகர நறுமலர்
164 - தகைமைத் தனியில்
165 - தமரும் அமரும்
166 - தலைவலி மருத்தீடு
167 - திடமிலி சற்குணமிலி
168 - திமிர உததி
169 - தோகைமயிலே கமல
170 - நாத விந்து
171 - நிகமம் எனில்
172 - நெற்றி வெயர்த்துளி
173 - பகர்தற்கு அரிதான
174 - பஞ்ச பாதகன்
175 - பாரியான கொடை
176 - புடவிக்கு அணி
177 - புடைசெப் பென
178 - பெரியதோர் கரி
179 - போதகம் தரு
180 - மந்தரமதெனவே
181 - மருமலரினன்
182 - மனக்கவலை ஏதும்
183 - மலரணி கொண்டை
184 - முகிலளகத்தில்
185 - முகை முளரி
186 - முதிரவுழையை
187 - முத்துக்கு
188 - மூலம் கிளர் ஓர்
189 - மூல மந்திரம்
190 - முருகுசெறி குழலவிழ
191 - முருகு செறிகுழல் முகில்
192 - வசனமிக ஏற்றி
193 - வஞ்சனை மிஞ்சி
194 - வரதா மணி நீ
195 - வனிதை உடல்
196 - வாதம் பித்தம்
197 - வாரணந் தனை
198 - விதம் இசைந்து
199 - விரை மருவு
200 - வேய் இசைந்து
1338 - சிவணிதா வியமனது
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000