அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்)
ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்
அலைகடல் உலகில் அலம் வரு கலக
ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி
இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு
எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர
எனது அற நினது கழல் பெற மவுன
எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே
வட மணி முலையும் அழகிய முகமும்
வள்ளை என தயங்கும் இரு காதும்
மரகத வடிவும் மடல் இடை எழுதி
வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர்
வெள்ளி மலை சயம்பு குருநாதா
விகசிதம் கமல பரிபுர முளரி
வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே.
வலிமை வாய்ந்த திருமாலின் பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்) குடிலாகிய உடலுடன் நாள்தோறும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, வருத்தங்களுக்கு ஆளான அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் உலகத்தில் ஈடுபடுதலில் இருந்து விடுபடவும், மயக்கம் தீரவும், எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மோன வரம்பைக் குறிப்பதாகிய ஓர் உபதேசத்தை அருள்புரிவாயாக. (வள்ளியின்) மணி வடம் அணிந்த மார்பும், அழகான முகமும், வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும், படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே, விஷத்தைக் கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில் தரித்தவர், பரிசுத்தமானவர், வெள்ளி மலையாகிய கயிலையில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே, மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே, வெள்ளிகரம் என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே.
அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்) ... வலிமை வாய்ந்த திருமாலின் பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் ... சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்) குடிலாகிய உடலுடன் நாள்தோறும் அலைகடல் உலகில் அலம் வரு கலக ... அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி ... ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு ... வருத்தங்களுக்கு ஆளான அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர ... உலகத்தில் ஈடுபடுதலில் இருந்து விடுபடவும், மயக்கம் தீரவும், எனது அற நினது கழல் பெற ... எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே ... மோன வரம்பைக் குறிப்பதாகிய ஓர் உபதேசத்தை அருள்புரிவாயாக. வட மணி முலையும் அழகிய முகமும் ... (வள்ளியின்) மணி வடம் அணிந்த மார்பும், அழகான முகமும், வள்ளை என தயங்கும் இரு காதும் மரகத வடிவும் ... வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும், மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா ... படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே, விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் ... விஷத்தைக் கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில் தரித்தவர், பரிசுத்தமானவர், வெள்ளி மலை சயம்பு குருநாதா ... வெள்ளி மலையாகிய கயிலையில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே, விகசிதம் கமல பரிபுர முளரி ... மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே, வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே. ... வெள்ளிகரம் என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 656 thalam %E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D thiru name %E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81