சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
விநாயகர் கவசம்- காசிப முனிவர் அருளியது
தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க:
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க
தடவிழிகள் பால சந்திரனார் காக்க !!
உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க:
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க
அவிர்நகை துன்முகர் காக்க
வளர் எழில் செஞ் செவி பாச பாணி காக்க
தவிர்தலுறாது இளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க !!
முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்க:
காமுரு பூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க
களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த
பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசர் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகத்தினைத் துலங்கு ஏரம்பர் காக்க !!
பக்கங்கள், தொண்டை காக்க:
பக்கம் இரண்டையுந் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க
விளங்கிலிங்கம் வியாள பூடணர் தாம் காக்க
தக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபர் காக்க
ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க
முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்க:
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்குவார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அந்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!
திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க:
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென் திசைகாக்க
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கினவர்த்தனர் மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கச கர்ணர் காக்க
திகழ்உதீசி தக்கநிதி பர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க !!
பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க:
ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்துகாக்க !!
மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க:
மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!
படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்:
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரியாதி எல்லாம் விகடர் காக்க
என்று இவ்வாறிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்று உறா முனிவர் அவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும் !!
Back to Top
விநாயகர் கவசத்தில் வரும் விநாயகப் பெருமானின் பெயர்கள்
1 விநாயகர் - தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர்.
2 மகோற்கடர் - பெருவயிறு படைத்தவர்
3 காசிபர் - கச்யப முனிவர்க்கு மைந்தராக ஒருகால் அவதாரம் செய்தவர்
4 மகோதரர் - பெருவயிற்றோன்
5 பாலசந்திரனார் - நெற்றியின் உச்சியில் சந்திரனைத் தரித்தவர் (முன் தலை நெற்றியின் உச்சிப்பகுதி, வகிடு)
6 கஜமுகர் - யானை முகத்தோன்
7 கணக்கிரீடர் - (அகராதி - க்ஷகாராந்த) எழுத்துக்களோடு விளையாடுபவர்
8 கிரிசைசுதர் - பார்வதி புத்ரர் (கிரிசை - கிரிஜா, மலைமகள், பார்வது, சுதர் - மைந்தர்)
9 துன்முகர் - தீயோரால் காண இயலாதவர்.
10 பாசபாணி - பாசக் கயிற்றைக் கையில் கொண்டவர்
11 சிந்திதார்த்தர் - நினைத்தப் பொருளை அளிப்பவர்
12 குணேசர் - குணங்களுக்கு ஈசன்
13 கணேசர் - பக்த கணங்களுக்கு ஈசன்
14 கந்த பூர்வஜர் - கந்தனுக்கு முன் பிறந்தவர்
15 விக்கின விநாசர் - தடைகளை அகற்றுபவர்
16 கணநாதர் - ஸாரூப கணங்களுக்குத் தலைவர் (இறை வழிபாட்டினால் ஆன்மாக்கள் அடையக்கூடிய நான்கு நிலைகளான, ஸாலோக்ய பதவி (இறைவரது உலகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாமீப்ய பதவி (இறைவரது அருகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாரூப்ய நிலை (இறைவரைப் போன்றே உருவம் பெற்று வாழ்தல்), ஸாயுஜ்ய பதவி (இறைவரோடு இரண்டறக் கலந்து முக்தியடைதல்).)
17 ஏரம்பர் - ஹேரம்பர், பராக்ரமசாலி
18 தராதரர் - பூமியைத் தாங்கி நிற்பவர் (தரா- பூமி)
19 விக்கினகரர் - விக்கினஹரர், தடைகளைப் போக்குபவர்.
20 வியாளபூடணர் - பாம்பை ஆபரணமாகக் கொண்டவர் (வியாளம் - அரவம், பாம்பு)
21 வக்கிரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்.
22 கணபர் - கணப, கணபதி, பக்த கணங்களுக்குத் தலைவர்
23 மங்கள மூர்த்தி - மங்கள உருவினர்
24 மகாபுத்தி - சிறந்த அறிவுடையவர்
25 ஏகதந்தர் - ஒற்றைக் கொம்பர்
26 க்ஷிப்ரப்ரசாதனர் - உடனே அருள் புரிபவர்
27 ஆசாபூரகர் - ஆசைகளைப் பூர்த்தி செய்ப்வர்
28 பதும அந்தர் - தாமரை மலர்க்கையினர்
29 புத்தீசர் - (சித்தி) புத்திக்கு ஈசனார்
30 சித்தீசர் - சித்திக்கு ஈசனார்
31 உமாபுத்திரர் - உமை மைந்தர்
32 கணேசுரர் - யுத்த கணங்களுக்கு ஈசுவரர்
33 விக்கினவர்த்தனர் - (தன்னை மறந்தோர் வாழ்வில்) தடைகளை அதிகரிப்பவர்
34 கஜகன்னர் - கஜகர்ணகர், யானைக் காதுடையவர்.
35 தக்க நிதிபர் - சிவனின் செல்வர் (தக்கன் - சிவபிரான்)
36 ஈசநந்தனர் - ஈசனின் மைந்தர்
37 விக்கினகிருது - (தன்னைப் போற்றாதாரின் செயல்கட்குத்) தடைகளை உண்டாக்குபவர்
38 பாசாங்குசர் - பாசத்தையும் அங்குசத்தையும் தரித்தவர்
39 சர்வாயுதர் - அனைத்து ஆயுதங்களையும் உடையவர்.
40 மயூரேசர் - மயிலுக்கு ஈசன், மயிலேறி அருள வரும் இறைவர்.
41 கபிலர் - சிவந்த பழுப்பு நிறம் அல்லது சாம்பல் நிறத்தில் தோன்றுபவர்
42 விகடர் - வேடிக்கையாக நின்று அருளுபவர், அச்சம் தரும் தோற்றம் கொள்ளக்கூடியவர், பரந்த (பெரிய) திருமேனி கொண்டவர், பெருமிதமானவர், அழகானவர், மாறுபட்ட தோற்றம் கொண்டவர், எதனாலும் மறைக்கப்படாதவர்.
Back to Top
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000