![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
பண் - குறிஞ்சி (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் கற்றாங்கு எரியோம்பி ஆடினாய் நறுநெய் என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார்.
நல்ல இசைக் குழு அமைய
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே. | [1] |
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும் சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய பிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை, மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே. | [2] |
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக் கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள், பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச் செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே. | [3] |
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப் பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச் சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே. | [4] |
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற, செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே. | [5] |
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம் பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே. | [6] |
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம் மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச் சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத் தலையால் வணங்குவார் தலை ஆனார்களே. | [7] |
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து, சீராலே மல்கு சிற்றம்பலம் மேய நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே. | [8] |
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும் காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான், சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த, மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே. | [9] |
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே, சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே. | [10] |
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத்தால் பாட வல்லார் நல்லாரே. | [11] |
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி
11.006  
பொன்வண்ணத்தந்தாதி
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே. | [1] |
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்சடையோன் வாவெனைப் புல்லவென்றான்இமை விண்டன வாட்கண்களே. | [2] |
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண் கொன்றையந் தார்உருவப் பெண்களங் கம் இவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம் பண்களங் கம்இசை பாடநின் றாடும் பரமனையே. | [3] |
பரமனை யே பலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர் பிரமனை யே சிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம் சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம் வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே. | [4] |
தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்தவெல்லாம் சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சம்உண்ட பவனே எனச்சொல்லு வாரும் பெறுவரிப் பாரிடமே. | [5] |
இடம்மால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பாலொண்கொன்றை வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான் இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர் குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே. | [6] |
கூத்துக் கொலாமிவர் ஆடித் திரிவது கோல்வளைகள் பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளங்கொலாம் ஏத்துக் கொலாமிவர் ஆதரிக் கின்ற திமையவர்தம் ஓத்துக் கொலாமிவர் கண்ட திண் டைச்சடை உத்தமரே. | [7] |
உத்தம ராயடி யாருல காளத் தமக்குரிய மத்தம் அராமதி மாடம் பதிநலஞ் சீர்மைகுன்றா எத்தம ராயும் பணிகொள வல்ல இறைவர்வந்தென் சித்தம ராயக லாதுடன் ஆடித் திரிதவரே. | [8] |
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளுந் திரிதரினும் அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய் கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம் பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே. | [9] |
பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால் அணிபதங் கன்பற் கொள்அப்பனை அத்தவற் கேயடிமை துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீயென் தனிநெஞ்சமே. | [10] |
நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர அஞ்செங் கரதலங் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான் வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே. | [11] |
வானகம் ஆண்டு மந் தாகினி ஆடிநந் தாவனஞ்சூழ் தேனக மாமலர் சூடிச்செல் வோருஞ் சிதவல்சுற்றிக் கானகந் தேயத் திரிந்திரப் போருங் கனகவண்ணப் பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே. | [12] |
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச்சென் றிடறா தொழிதும் எழு நெஞ்ச மேயெரி ஆடியெம்மான் கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய் உடல்தான் உளபயன் ஆவசொன் னேனிவ் வுலகினுள்ளே. | [13] |
உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம் பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர் நலகா மலரால் அருச்சிமின் நாள்நர கத்துநிற்கும் அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே. | [14] |
அலையார் புனலனல் ஞாயி றவனி மதியம்விண்கால் தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கனென்னே கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே. | [15] |
காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன் தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவார்யார் போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார் ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே. | [16] |
இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும் வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள் பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான் திருந்திய போதவன் றானே களையுநம் தீவினையே. | [17] |
தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவின வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும் ஒவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந்தடைந்தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே. | [18] |
பாதம் புவனி சுடர்நய னம்பவ னமுயிர்ப் போங் கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேயுடம்பு வேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதமென்ன போதம் இவற்கோர் மணிநிறந் தோற்பது பூங்கொடியே. | [19] |
கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தின் நீறும்ஐ வாய்அரவும் முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப் போதும் வருகின்றவே. | [20] |
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல் பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன் அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம் வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே. | [21] |
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும் சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான் நீதியென் றான் செல்வம் ஆவதென் றேன் மேல் நினைப்பு வண்டேர் ஒதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே. | [22] |
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் அறுபகை ஒங்கிற்றுள்ளம் இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும் தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே. | [23] |
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன் ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்உரைத் தாருரைத்த கள்ளிய புக்காற் கவிகளொட் டார் கடல் நஞ்சயின்றாய் கொள்ளிய வல்லகண் டாய் புன்சொல் ஆயினுங் கொண்டருளே. | [24] |
அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம் பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன் இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே. | [25] |
விரிகின்ற ஞாயிறு போன்ற மேனியஞ் ஞாயிறுசூழ்ந் தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக்கீழ்ச் சரிகின்ற காரிருள் போன்றது கண்டம் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள தாலெந்தை ஒண்பொடியே. | [26] |
பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம் குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே. | [27] |
உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும் விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல் திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தம் செறியச்செய்த கரைவளர் வொத்துள தால்சிர மாலையெம் கண்டனுக்கே. | [28] |
கண்டங் கரியன் கரிஈர் உரியன் விரிதருசீர் அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான் பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரமரிந்த புண்தங் கயிலன் பயிலார மார்பனெம் புண்ணியனே. | [29] |
புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சனங்கக் கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் காரியங்கும் விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொளவுமையாள் பண்ணியன் பண்ணியல் பாடல நாடற் பசுபதியே. | [30] |
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர் கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு கொதியார் மழுவுண்டு கொக்கரை உண் டிறை கூத்துமுண்டு மதியார் சடையுள மாலுள தீவது மங்கையர்க்கே. | [31] |
மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி அங்கமெங் குந்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான் கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்ணர வங்கள்பொங்கிப் பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே. | [32] |
பண்டங்கன் வந்து பலிதாவென் றான்பக லோற்கிடென்றேன் அண்டங் கடந்தவன் அன்னமென் றான்அயன் ஊர்தியென்றேன் கொண்டிங் குன்னையம்பெய் என்றான் கொடித்தேர் அனங்கனென்றேன் உண்டிற் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே. | [33] |
உற்றடி யாருல காளவோர் ஊணும் உறக்குமின்றிப் பெற்றம தாவதென் றேறும் பிரான் பெரு வேல்நெடுங்கண் சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும் இற்றிடை யாம்படி யாகவென் னுக்கு மெலிக்கின்றதே. | [34] |
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு தலிக்கின்ற காமங் கரதலம் மெல்லி துறக்கம்வெங்கூற் றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே. | [35] |
பல்லுயிர் பாகம் உடல் தலை தோல்பக லோன்மறல்பெண் வில்லியோர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப் புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான்புகழே சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே. | [36] |
துயருந் தொழுமழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப் பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந் தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்குமந்தோ இங்ஙனே மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே. | [37] |
வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால் நாணுதற் கெண்ணாள் பலிகொடு சென்று நகும்நயந்து பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க்கரிய தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே. | [38] |
தாழுஞ் சடைசடை மேலது கங்கைஅக் கங்கைநங்கை வாழுஞ் சடைசடை மேலது திங்களத் திங்கட்பிள்ளை போழுஞ் சடை சடை மேலது பொங்கர வவ்வரவம் வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே. | [39] |
முனியே முருகலர் கொன்றையி னாயென்னை மூப்பொழித்த கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன் இனியேல் இருந்தவஞ் செய்யேன் திருந்தவஞ் சேநினைந்து தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே. | [40] |
சாற்றுவன் கோயில் தலையும் மனமுந் தவம்இவற்றால் ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றியஞ் சொல்மலரால் ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தானென் றெழுந்தலரே தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே. | [41] |
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண் திணிந்த கல்லாம் நினையா மனம் வணங் காத்தலை யும்பொறையும் அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே. | [42] |
தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால் மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும் புனக்கொன்றை யானரு ளாற்புழு வாகிப் பிறந்திடினும் எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே. | [43] |
எண்ணம் இறையே பிழைக்குங் கொலாமிமை யோரிறைஞ்சும் தண்ணம் பிறைசடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென் உண்ணன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான் கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே. | [44] |
காமனை முன்செற்ற தென்றாள் அவளிவள் காலனென்னும் தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள் நாம்முனஞ் செற்றதன் றாரையென் றேற்கிரு வர்க்குமஞ்சி ஆமெனக் கிற்றிலர் அற்றெனக் கிற்றிலர் அந்தணரே. | [45] |
அந்தண ராமிவர் ஆரூ ருறைவதென் றேனதுவே சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன் பந்தணை கையாய் அதுவுமுண் டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமினென் றேன்துடி கொட்டினரே. | [46] |
கொட்டும் சிலபல சூழநின் ரார்க்கும்குப் புற்றெழுந்து நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும் வட்டம் வருமருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும் புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டான் பூதங்களே. | [47] |
பூதப் படையுடைப் புண்ணிய ரேபுறஞ்சொற்கள் நும்மேல் ஏதப் படவெழு கின்றன வாலிளை யாளொடும்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே. | [48] |
செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான் மைப்புரை கண்ணுக்கு வார்புனற் கங்கைவைத் தான்மனத்துக் கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத் தமும்அமைத்தான் அப்பனை அம்மனை நீயென் பெறாதுநின் றார்க்கின்றதே. | [49] |
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும்ஐ வாயரவும் ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவுமெல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே. | [50] |
கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கச்சரவார் சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும் நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்து அலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே. | [51] |
அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால் இழிகின்ற சங்கம் இருந்த முலைமேற் கிடந்தனபீர் பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார் மொழிகின்ற தென்னினி நான்மறை முக்கண் முறைவனுக்கே. | [52] |
முறைவனை மூப்புக்கும் நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந் துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந் தம்பால் உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே. | [53] |
ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன் போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று மாதவ மாகிடு மாதவ மாளவர் புன்சடையான் யாதவன் சொன்னான் அதுகொண் டொழியினி ஆரணங்கே. | [54] |
ஆரணங் கின்முகம் ஐங்கணை யானகம் அவ்வகத்தில் தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த பூரண கும்பம் முலையிவை காணப் புரிசடையெம் காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே. | [55] |
கருதிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள் ஒருதின மும்உள ளாகவொட் டாதொடுங் காரொடுங்கப் பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றையின்னே தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழிருளே. | [56] |
இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமரையால் பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால் தெருளார் மதிவிசும் பால்பௌவந் தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மாஅரன் ஆயினனே. | [57] |
ஆயின அந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள் போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல் ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டவெம் ஆயிழைக்கே. | [58] |
இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்றதுஇற்றால் பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம் கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள் குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே. | [59] |
கூடிய தன்னிடத் தானுமை யாளிடத் தானைஐயா றீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின் பாடிய நான்மறை பாய்ந்து கூற்றைப் படர்புரஞ்சுட் டாடிய நீறுசெஞ் சாந்திவை யாமெம் அயனெனவே. | [60] |
அயமே பலியிங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப் பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால் புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லா நயமே மொழியினும் நக்காம மாவும்மை நாணுதுமே. | [61] |
நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாமெழுக ஏணார் இருந்தமி ழார்மற வேனுந் நினைமினென்றும் பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால் காணா விடேன்கண் டிரவா தொழியேன் கடிமலரே. | [62] |
கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரலொட்டேன் முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன் அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க் கழ கல்லவென்பேன் தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே. | [63] |
தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்குமன்றிக் கிடங்கின்றி பட்ட கராவனை யார்பல கேவலரே. | [64] |
வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே கலந்தான் வலம்நீ றிடம்சாந்து எரிவலம் பந்திடமென்பு அலர்ந்தார் வலமிடம் ஆடகம் வேல்வலம் ஆழியிடம் சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழலிடம் சங்கரற்கே. | [65] |
சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின் தொண் டீர்நமனார் கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே இங்கரம் ஆயிரம் ஈரவென் நெஞ்சம் எரிகின்றதே. | [66] |
எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற் சரிகின்ற திங்களோர் தோணியொக் கின்றகத் தோணியுய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்றுள தாலத் திறலரவே. | [67] |
அரவம் உயிர்ப்ப அழலும் அங்கங்கை வளாய்க்குளிரும் குரவங் குழலுமை ஊடற்கு நைந்துரு கும்அடைந்தார் பரவும் புகழண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும் விரவும் இடரின்பம் எம்மிறை சூடிய வெண்பிறையே. | [68] |
பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும் நீறும் மருவலுற்றோ கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாயர வாடலுற்றோ குறைக்கொண் டிவளரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே. | [69] |
கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெரியா ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே. | [70] |
இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய் அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமக ளாயணைந்தே எமையா ளுடையான் தலை மகளாவங் கிருப்பவென்னே உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே. | [71] |
உறைகின் றனரைவர் ஒன்பது வாயிலோர் மூன்றுளவால் மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரம்மச்சை பறைகின்ற தோல்போர் குரம்பை பயனில்லை போயடைமின் அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே. | [72] |
அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய் வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைக் கடிக்கண்ணி யாயெமக்கோரூர் இரண்டகங் காட்டினையால் கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே. | [73] |
குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற அன்றடர்த் தற்றுகச் செற்றவன் அற்றவர்க் கற்றசிவன் மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய் ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே. | [74] |
குழிகண் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடையூன் உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த் தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற் கழுதுக் குறைவிடம் போல் கண்டன் ஆடும் கடியரங்கே. | [75] |
அரம்கா மணியன்றில் தென்றலோர் கூற்றம் மதியம்அந்தீச் சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள் தளர்ந்தாள் இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம் சிரம்கா முறுவான் எலும்புகொள் வானென்றன் தேமொழிக்கே. | [76] |
மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச்சங்கம் அழியக்கண் டானன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்னுயிர்மேற் கழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும் கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே. | [77] |
கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம் உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல் வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக் கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே. | [78] |
குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோளிழைத்தீர் வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல் உறைக்கொன்றை யோவுடைத் தோலோ பொடியோ உடைகலனோ கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே. | [79] |
கடவிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள் மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தாற் கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட்கவ லங்கொடுத்தான் தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே. | [80] |
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லுஞ்சடைமேற் செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும் பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாமென்று பாவிப்பனே. | [81] |
பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கமெங்கும் காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக் கண்ணில் தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல் லோதிக்குச் சந்தித்தவே. | [82] |
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம் சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம் வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற அந்திக்கண் ஆடியி னானடி யார்களுக் காவனவே. | [83] |
ஆவன யாரே அழிக்கவல் லாரமை யாவுலகில் போவன யாரே பொதியகிற் புராபுரம் மூன்றெரித்த தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினை யேனிழந் தேன்கலை யோடு செறிவளையே. | [84] |
செறிவளை யாய்நீ வரையல் குலநலம் கல்விமெய்யாம் இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோருமேத்தும் நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால் கறைவளர் கண்டனைக் காணப் பெரிதுங் கலங்கியதே. | [85] |
கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண் மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய் இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்அவிந்தார் அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே. | [86] |
எம்மிறை வன்னிமை யோர்தலை வன்உமை யாள்கணவன் மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற் கெம்முறை யாளிவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான் இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே. | [87] |
கலைதலைச் சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி சிலையிவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொல்செய்கை நிலைபிழை யாதுகுற் றேவல்செய் தார்நின்ற மேருவென்னும் மலைபிழை யாரென்ப ராலறிந் தோர் இந்த மாநிலத்தே. | [88] |
மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையவத் தேவரெல்லாம் ஆநலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார் பாநலத் தாற்கவி யாமெங்ங னேயினிப் பாடுவதே. | [89] |
பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறலொத்த தாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே கூடிய கோப்பொத்த தாலுமை பாகமெம் கொற்றவற்கே. | [90] |
கொற்றவ னேயென்றுங் கோவணத் தாயென்றும் ஆவணத்தால் நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி யென்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக னேயென்றும் மன்மதனைச் செற்றவ னேயென்றும் நாளும் பரவுமென் சிந்தனையே. | [91] |
சிந்தனை செய்ய மனமமைத் தேன்செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத் தேன்கை தொழவமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன் வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே. | [92] |
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை குங்குமக் குன்றனைய பதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய மதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே. | [93] |
வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத் துஞ்சும் பொழுதும் உறத்தொழு தேன்சொரி மாலருவி அஞ்சன மால்வரை வெண்பிறை கவ்வியண் ணாந்தனைய வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே. | [94] |
வீரன் அயனரி, வெற்பலர் நீரெரி பொன்னெழிலார் காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை பேரொண் பதிநிறம் தாரிவர் ஊர்திவெவ் வேறென்பரால் ஆரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே. | [95] |
பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க் குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனவடியார்க் கரியான் இவனென்று காட்டுவன் என்றென் றிவையிவையே பிரியா துறையுஞ் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே. | [96] |
பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதைநல்லாள் காய்சின வேட்கை அரன்பா லதுவறு காற்பறவை மூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப் பூசின சாந்தம் தொழுமால் இவையொன்றும் பொய்யலவே. | [97] |
பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங் குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பவென்று நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர் மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே. | [98] |
வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகவவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப் பாண்டின அச்சம் வெகுளி அவா வழுக் காறிங்ஙனே மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே. | [99] |
மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின ஆனை வளரும் கனக மலையருகே போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே. | [100] |
அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல் வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலைஅரன்முன் சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான் மன்றிடை ஓதுபொன் வண்ணத் தந்தாதி வழங்கிதுவே. | [101] |
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை
11.026  
கோயில் நான்மணிமாலை
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் பாமேவும் ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே கூத்துகந்தான் கொற்றக் குடை. | [1] |
குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப் படைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற்கொன்றைத் தொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்து கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே. | [2] |
களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம் கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால் விரிசடையும் வெண்ணீறும் செவ்வான மென்ன ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும் உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால் எளிவந் தினிப்பிறர்பாற் சென்றவர்க்குப் பொய்கொண் டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே. | [3] |
உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப் பட்ட எல்லையும் கடந்து தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம் ஆடும் அம்பல வாணா நீடு குன்றக் கோமான் தன்திருப் பாவையை நீல மேனி மால்திருத் தங்கையைத் திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின் தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில் வீர வெள்விடைக் கொடியும் போரில் தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித் தெய்வக் கங்கை ஆறும்பொய்நீர் விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின் வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் வைதிகப் புரவியும் வான நாடும் மையறு கனக மேருமால் வரையும் செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும் உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள் ஆணை வைப்பிற் காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டும் கானில்வால் நுளம்பும் கருடனா தலினே. | [4] |
ஆதரித்த மாலும் அறிந்திலனென் றஃதறிந்தே காதலித்த நாயேற்குங் காட்டுமே போதகத்தோற் கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர் அம்பலத்தான் செம்பொன் அடி. | [5] |
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப் பொடியொன்று தோளெட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின் செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே. | [6] |
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட நாயகரே நான்மறையோர் தங்க ளோடும் திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட செல்வரே உமதருமை தேரா விட்டீர் இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால் என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர் தஞ்சுண்டா யங்கருநீர் நஞ்சுண்டீரே. | [7] |
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம் தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த தேரையை வவ்வி யாங்கி யான்முன் கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய் அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங் கருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி அயர்த்தனன் இருந்த போதும் பெயர்த்துநின்று எண்டோள் வீசிக் கண்டோர் உருகத் தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே. | [8] |
இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம் கலவி கடைக்கணித்தும் காணேன் இலகுமொளி ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும் நாடகங்கண் டன்பான நான். | [9] |
நானே பிறந்த பயன்படைத் தேன் அயன் நாரணனெம் கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாமறுத்துத் தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே. 1 | [10] |
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு சங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு பந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிரையொடு பண்பு தவிர அனங்கன் அவனொடு நண்பு பெருக விளைந்த இனையன நந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள் நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதி அந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில் அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதல் எதிர்இன்று வரையுமே. | [11] |
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித் திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க் கமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள் கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅ தஞ்சேல் என்று செஞ்சே லாகித்தன் தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில் பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ டுலகு குழைத் தொரு நாள் உண்டதும் உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன் ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில் உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே இனைய னாகிய தனிமுதல் வானவன் கேழல் திருவுரு ஆகி ஆழத் தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும் காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக் கண்டி லாதநின் கதிர்நெடு முடியும் ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச் சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி ஏவருங் காண ஆடுதி அதுவெனக் கதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம் விளையாதும் ஒழிந்த தெந்தை வளையாது கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப வான்பொய் அச்சம் மாயா ஆசை மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில் ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து மண்மகன் திகிரியில் எண்மடங்கு கழற்ற ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் செய்ய வாயும் மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் எடுத்த பாதமும் தடுத்தசெங்கையும் புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப கூடும் வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும் ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது பெரியதிற் பெரியை என்றும் அன்றே சிறியதிற் சிறியை என்றும் அன்றே நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த மறையவர் தில்லை மன்றுகிழ வோனே | [12] |
கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத் துழவரும்போய் ஒயுமா கண்டோம் மொழிதெரிய வாயினால் இப்போதே மன்றில் நடமாடும் நாயனார் என்றுரைப்போம் நாம். | [13] |
நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர் தாமத்தி னாலுன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான் வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய் சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே. | [14] |
நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள் நிலவினும் வெளிது நகையென்பர்கள் நிறம்வரு கலசம் முலையென்பர்கள் அறிகுவ திரிதிவ் விடையென்பர்கள் அடியிணை கமல மலரென்பர்கள் அவயவம் இனைய மடமங்கையர் அழகியர் அமையும் அவரென்செய மறிமழு வுடைய கரனென்கிலர் மறலியை முனியும் அரனென்கிலர் மதிபொதி சடில தரனென்கிலர் மலைமகள் மருவு புயனென்கிலர் செறிபொழில் நிலவு திலையென்கிலர் திருநடம் நவிலும் இறையென்கிலர் சிவகதி அருளும் அரசென்கிலர் சிலர்நர குறுவர் அறிவின்றியே. | [15] |
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும் இனையன பலசரக் கேற்றி வினையெனும் தொல்மீ காமன் உய்ப்ப அந்நிலைக் கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும் துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து நிறையெனும் கூம்பு முரிந்து குறையா உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம் அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையர வணிந்த தெய்வ நாயக தொல்லெயில் உடுத்த தில்லை காவல வம்பலர் தும்பை அம்பல வாண நின் அருளெனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்துதமா செய்யே. | [16] |
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென் தையல் வளைகொடுத்தல் சாலுமே ஐயன்தேர் சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே தாயே நமதுகையில் சங்கு. | [17] |
சங்கிடத் தானிடத் தான்தன தாகம் சமைந்தொருத்தி அங்கிடத் தாள் தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல் கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாயெங்கை நீயுமொரு பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேலுன் பசப்பொழியே. | [18] |
ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில் ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள் விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர் போலியார் சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்றவர் நடக்கநொந் தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர் சிந்தை யாயொழிவ தல்லவே. | [19] |
அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக் கைத்தேர் உழந்து கார்வரும் என்று வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும் கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் அருளா வயவர் அம்பிடை நடந்தும் இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த் துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும் ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும் தாள்உழந் தோடியும் வாளுழந் துண்டும் அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும் சொற்பல புனைந்தும் கற்றன கழறியும் குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில் பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும் கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல் உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும் நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும் தெய்வ வேதியர் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த பாதப் போதும் பாய்புலிப் பட்டும் மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும் சேயுயர் அகலத் தாயிரங் குடுமி மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும் அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் கங்கை வழங்கும் திங்கள் வேணியும் கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி ஆங் குள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன் நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான் உறுதற் கரியதும் உண்டோ பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே. | [20] |
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள் சுற்றோட ஓடித் தொழாநிற்கும் ஒற்றைக்கைம் மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம் கோமறுகிற் பேதை குழாம். | [21] |
பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத் தாதை தன் தாதையென் றேத்தும் பிரான்தண் புலிசைப்பிரான் கோதையந் தாமத்தண் கொன்றை கொடான் நின்று கொல்லவெண்ணி ஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவி யவே. | [22] |
உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாவென நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி யொருவர் ஆழிய புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர் புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர் கலவ மயில னார்கருள் கரிய குழலி னார்குயில் கருதுமொழியி னார்கடை நெடிய விழியி னாரிதழ் இலவின் அழகி யாரிடை கொடியின் விடிவி னார்வடி வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே. | [23] |
ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின் தாளின் ஏவல் தலையின் இயற்றி வழிவழி வந்த மரபினம் மொழிவதுன் ஐந்தெழுத் தவையெம் சிந்தையிற் கிடத்தி நனவே போல நாடொறும் பழகிக் கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக் கேட்பதும் நின்பெருங் கீர்த்தி மீட்பது நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன் ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில் கைகொடு குயிற்றுவ தைய நின்னது கோயில் பல்பணி குறித்தே ஒயாது உருகி நின்னினைந் தருவி சோரக் கண்ணிற் காண்பதெவ் வுலகினும்காண்பனவெல்லாம் நீயே யாகி நின்றதோர் நிலயை நாயேன் தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால் அலைகடல் பிறழினும் அடாதே அதனால் பொய்த்தவ வேடம் கைத்தகப் படுத்தற்கு வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச் சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின் மானுட மாக்களை வலியப் புகுத்தும் ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்தும் வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடல் பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி இருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய் வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய் நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச் செம்பொன் தில்லை மூதூர் அம்பலத் தாடும் உம்பர்நா யகனே. | [24] |
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத் தாயனைய னாயருளும் தம்பிரான் தூயவிரை மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை மன்றுளே ஆடும் மணி. | [25] |
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அம் மன்றுக்கெல்லாம் அணிவாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப் பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப் பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணமென்னவே. | [26] |
என்நாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய் வண்டுகள் மலர்கிண்டித் தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணிதாமம் தன்னா லல்லது தீரா தென்னிடர் தகையா துயிர்கரு முகிலேறி மின்னா நின்றது துளிவா டையும்வர வீசா நின்றது பேசாயே. | [27] |
பேசு வாழி பேசு வாழி ஆசையொடு மயங்கி மாசுறு மனமே பேசு வாழி பேசு வாழி கண்டன மறையும் உண்டன மலமாம் பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும் ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும் செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர் கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர் எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர் பேரும் நின்றில போலுந் தேரின் நீயுமஃ தறிதி யன்றே மாயப் பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக் கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத் தன்மயர் இழிவு சார்ந்தனை நீயும் நன்மையில் திரிந்த புன்மையை யாதலின் அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி விளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும் பன்மீன் போலவும் மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் ஆசையாம் பரிசத் தியானை போலவும் ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும் வீசிய மணத்தின் வண்டு போலவும் உறுவ துணராது செறுவுழிச் சேர்ந்தனை நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும் அறிவில் கீடத்து நுந்தழி போல ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது குடர்கெவு சிறையறைக் குறங்குபு கிடத்தி கறவை நினைந்த கன்றென இரங்கி மறவா மனத்து மாசறும் அடியார்க் கருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை மறையவர் தில்லை மன்று ளாடும் இறையவன் என்கிலை என்நினைந் தனையே. | [28] |
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப் புனைவார்க்குக் கொன்றை பொதுவோ அனைவீரும் மெச்சியே காண வியன்தில்லை யானருளென் பிச்சியே நாளைப் பெறும். | [29] |
பெறுகின்ற எண்ணிலித் தாயரும் பேறுறும் யானுமென்னை உறுகின்ற துன்பங்க ளாயிர கோடியும் ஒய்வொடுஞ்சென் றிறுகின்ற நாள்களு மாகிக் கிடந்த இடுக்கணெல்லாம்அறுகின் றனதில்லை யாளுடை யான்செம்பொன் னம்பலத்தே. | [30] |
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக் கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென் கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக் கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே. | [31] |
அருளு வாழி அருளு வாழி புரிசடைக் கடவுள் அருளு வாழி தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும் புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி அதனினுங் கடிதே கதுமென மரணம் வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி நாணாள் பயின்ற நல்காக் கூற்றும் இனைய தன்மைய திதுவே யிதனை எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன சிலவே யவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே ஒன்றினும் பாடதன சிலவே யென்றிவை கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும் கணக்கில் கோடித் தொகுதி அவைதாம் ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும் ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்று தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே அறியை சாலவெம் பெரும தெரிவுறில் உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே கண்டனை அவைநினைக் காணா அதுதான் நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை மாயாய் மன்னினை நீயே வாழி மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை மறைப்பினும் அதுவும் நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று நினைப்பருங் காட்சி நின்னிலை யிதுவே நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும் நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின் நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் நீயே அருளல் வேண்டும் வேய்முதிர் கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக இம்ப ருய்ய அம்பலம் பொலியத் திருவளர் தில்லை மூதூர் அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே. | [32] |
வானோர் பணிய மணியா சனத்திருக்கும் ஆனாத செல்வத் தரசன்றே மாநாகம் பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே வந்திப்பார் வேண்டாத வாழ்வு. | [33] |
வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாயுன்னை அன்றியொன்றைத் தாழ்வார் அறியார் சடிலநஞ் சுண்டிலை யாகிலன்றே மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே. | [34] |
வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல் மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ டுணங்கியிவள் தானுமெலியப் பெறும் இடர்க்கே ஊதையெரி தூவியுல வப்பெறும் அடுத்தே பிணங்கியர வோடுசடை ஆடநடமாடும் பித்தெரென வும்மிதயம் இத்தனையும் ஒரீர் அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும் மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே. | [35] |
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக் குதிகொள் கங்கை மதியின்மீ தசைய வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ ஒருபால் தோடும் ஒருபால் குழையும் இருபாற் பட்ட மேனி எந்தை ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் இமையா நாட்டத் தொருபெருங் கடவுள் வானவர் வணங்கும் தாதை யானே மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய தெய்வ மண்டபத் தைவகை அமளிச் சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர் இமையா நாட்டத் தமையா நோக்கம் தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் ஆனாச் செல்வத்து வானோர் இன்பம் அதுவே எய்தினும் எய்துக கதுமெனத் தெறுசொ லாளர் உறுசினந் திருகி எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும் செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும் புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப் பன்னெடுங் காலம் அழுந்தி இன்னா வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் நிரயஞ் சேரினுஞ் சேர்க உரையிடை ஏனோர் என்னை ஆனாது விரும்பி நல்லன் எனினும் என்க அவரே அல்லன் எனினும் என்க நில்லாத் திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத் துன்பந் துதையினும் துதைக முன்பின் இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது என்றும் இருக்கினும் இருக்கவன்றி இன்றே இறக்கினும் இறக்க வொன்றினும் வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே ஆண்டகைக் குரிசில் நின் அடியரொடு குழுமித் தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும் அடையவும் அணுகவும் பெற்ற கிடையாச் செல்வங் கிடைத்த லானே. | [36] |
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே வானோங்கு வாமாண் பொழிற்றில்லை மன்றைப் பொலிவித்த கோமானை இத்தெருவே கொண்டு. | [37] |
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் இந்திரன் கோமகுடத் தண்டர்மிண் டித்தொழும் அம்பலக் கூத்தனுக் கன்பு செய்யா மிண்டர்மிண் டித்திரி வாரெனக் கென்னினி நானவன்றன் தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே. | [38] |
தொடர நரைத்தங்க முன்புள்ள வாயின தொழில்கள் மறுத்தொன்று மொன்றி யிடாதொரு களிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழு கக்கண்டு சிந்தனை ஒய்வொடு நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாதொரு நடலை நமக்கென்று வந்தன பேசிட நலியிரு மற்கஞ்சி உண்டி வேறாவிழு நரக உடற்கன்பு கொண்டலை வேனினி மிடலொடி யப்பண் டிலங்கையர் கோனொரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே. | [39] |
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள் ஆழி கொடுத்த பேரருள் போற்றி முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத் தளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய செல்வங் கொடுத்த செல்வம் போற்றி தாள்நிழல் அடைந்த மாணிக் காக நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துட் பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க உதைத்துயிர் அளித்த உதவி போற்றி குலைகுலை குலைந்த நிலையாத் தேவர் படுபேர் அவலம் இடையின்று விலக்கிக் கடல்விடம் அருந்தன கருணை போற்றி தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில் ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட வில்லொன்று வளைத்த வீரம் போற்றி பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக் காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக் கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக் கொண்டு நடந்த கோலம் போற்றி விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் சலந்தரற் றடிந்த தண்டம் போற்றி தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த தொண்டர் மனையில் உண்டல் போற்றி வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த தாவுபல் எலிக்கு மூவுல காள நொய்தினில் அளித்த கைவளம் போற்றி பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச் சிங்கங் கொன்ற சேவகம் போற்றி வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய் உரகம் பூண்ட ஒப்பனை போற்றி கங்கையுங் கடுக்கையுங் கலந்துழி ஒரு பால் திங்கள் சூடிய செஞ்சடை போற்றி கடவுளர் இருவர் அடியும் முடியும் காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி நீண்டு நின்ற நீளம் போற்றி ஆலம் பில்குநின் சூலம் போற்றி கூறுதற் கரியநின் ஏறு போற்றி ஏகல் வெற்பன் மகிழும் மகட்கிடப் பாகங் கொடுத்த பண்பு போற்றி தில்லை மாநகர் போற்றி தில்லையுட் செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத் தாடும் நாடகம் என்றாங் கென்றும் போற்றினும் என்தனக் கிறைவ ஆற்றல் இல்லை ஆயினும் போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே. | [40] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
11.032  
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி லேன்அன்று வானருய்ய நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற அஞ்செம் பவளவண் ணா வருட் கியானினி யாரென்பனே. | [1] |
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேயெழுந்த அன்பின் வழிவந்த வாரமிர் தேயடி யேனுரைத்த வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள் மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. | [2] |
அவநெறிக் கேவிழப் புக்கவிந் தியான்அழுந் தாமைவாங்கித் தவநெறிக் கேயிட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம் சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய் பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே. | [3] |
பயல்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார் முயல்கின் றிலேன்நின் திருவடிக் கேயப்ப முன்னுதில்லை இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துளெந் தாய்இங்ஙனே அயர்கின்ற நானெங்ங னேபெறு மாறுநின் னாரருளே. | [4] |
அருதிக்கு விம்ம நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு பருதிக் குழவி யுமிழ்கின்றதே யொக்கும் பற்றுவிட்டோர் கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும் மெய்த்த சுருதிப் பதமுழங் குந்தில்லை மேய சுடரிருட்கே. | [5] |
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தவென்பும் மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும் அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை விடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே. | [6] |
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள் நாத னவனெச்சன் நற்றலை யும் தக்க னார்தலையுங் காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழ்ந்துநின்று மாதவ ரென்னோ மறைமொழி யாலே வழுத்துவதே. | [7] |
வழுத்திய சீர்த்திரு மாலுல குண்டுவன் பாம்புதன்னின் கழுத்தரு கேதுயின் றான்உட்கப் பாந்தளைக் கங்கணமாச் செழுந்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கையிட அழுத்திய கல்லொத் தன்ஆய னாகிய மாயவனே. | [8] |
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ் சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழலெவர்க்குந் தாயவன் தன்பொற் கழலென் தலைமறை நன்னிழலே. | [9] |
நிழல்படு பூண்நெடு மாலயன் காணாமை நீண்டவரே தழல்படு பொன்னக லேந்தித் தமருகம் தாடித்தமைத் தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை யம்பலத்தே குழல்படு சொல்வழி யாடுவர் யாவர்க்குங் கூத்தினையே. | [10] |
கூத்தனென் றுந்தில்லை வாணனென் றுங்குழு மிட்டிமையோர் ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே யிடுதுணங்கை மூத்தவன் பெண்டிர் குணலையிட் டாலும் முகில்நிறத்த சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே. | [11] |
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம் பலந்தன்னின் மன்னிநின்ற விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் னுடல்முழுதும் கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள் கற் றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோவெனக் கிப்பிறப்பே. | [12] |
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர் நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடக மாடுகின்ற துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர் உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே. | [13] |
உண்டேன் அவரரு ளாரமிர் தத்தினை வுண்டலுமே கண்டேன் எடுத்த கழலுங் கனலுங் கவித்தகையும் ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கு மொளிநகையும் வண்டேன் மலர்த்தில்லை யம்பலத் தாடும் மணியினையே. | [14] |
மண்யொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத் தணியொப் பனவவன் தன்முடி மேலடி யேனிடர்க்குத் துணியச் சமைத்தநல் ஈர்வா ளனையன சூழ்பொழில்கள் திணியத் திகழ்தில்லை யம்பலத் தான்தன் திருந்தடியே. | [15] |
அடியிட்ட கண்ணினுக் கோஅவ னன்பினுக் கோ அவுணர் செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோ தில்லை யம்பலத்து முடியிட்ட கொன்றை நன் முக்கட் பிரான்அன்று மூவுலகும் அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே. | [16] |
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல் விடைபடு கேதுக விண்ணப்பங் கேளென் விதிவசத்தால் கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளூகண்டாய் புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதமென் னுள்புகவே. | [17] |
புகவிகிர் வாளெயிற் றானிலங் கீண்டு பொறிகலங்கி மிகவுகும் மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள் நகவு குலாமதிக் கண்ணியற் கங்கண னென்றனன்றும் தகவு கொலாம்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே. | [18] |
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன் செங்கோல விந்திரன் தோள்தலை யூர்வேள்வி சீருடலம் அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால் எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே. | [19] |
ஏவுசெய் மேருத் தடக்கை யெழில்தில்லை யம்பலத்து மேவுசெய் மேனிப் பிரானன்றி யங்கணர் மிக்குளரே காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத் தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே. | [20] |
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை யன்றளித்த கோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதிலிட்ட தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை யம்பலத் தாடுகின்ற சேடனென் றாள்மங்கை யங்கைச் சரிவளை சிந்தினவே. | [21] |
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள் வந்திக் கவும்மனம் வாய்கர மென்னும் வழிகள்பெற்றுஞ் சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை யம்பலத்துள் அந்திக் கமர்திரு மேனியெம் மான்ற னருள்பெறவே. | [22] |
அருள்தரு சீர்த்தில்லை யம்பலத் தான்தன் அருளினன்றிப் பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம் சுருள்தரு செஞ்சடை யோனரு ளேல்துற விக்குநன்றாம் இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே. | [23] |
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற் றம்பலத்துப் பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற மிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம் உரைப்புள வோவயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே. | [24] |
அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக் கூத்த அடியமிட்ட முகிழ்சூ ழிலையும் முகைகளு மேயுங்கொல் கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப் புகழ்சூ ழிமையவர் போற்றித் தொழுநின் பூங்கழற்கே. | [25] |
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிதுணிமேல் ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச் சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே. | [26] |
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர் பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான் வேகம் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல் மோகங் கலந்தன் றுலந்ததன் றோவிந்த மூவுலகே. | [27] |
மூவுலக கத்தவ ரேத்தித் தொழுதில்லை முக்கட்பிராற் கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த் தாவு தொழிற்பட் டெடுத்தனன் மாலயன் சாரதியா மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே. | [28] |
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை யம்பலத்து மேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப் போதகப் போர்வைப் பொறிவா ளரவரைப் பொங்குசினச் சாதகப் பெண்பிளை தன்ஐயன் தந்த தலைமகனே. | [29] |
தலையவன் பின்னவன் தாய்தந்தை யிந்தத் தராதலத்து நிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்அடு வாகிநின்ற கொலையவன் சூலப் படையவன் ஆலத் தெழுகொழுந்தின் இலையவன் காண்டற் கருந்தில்லை யம்பலத் துள்ளிறையே. | [30] |
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை யம்பலத்துள் அறையும் புனல்சென்னி யோனரு ளாலன் றடுகரிமேல் நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்ப்பரிமேல் நறையும் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே. | [31] |
நல்வழி நின்றார் பகைநன்று நொய்ய ருறவிலென்னும் சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை யம்பலத்து வில்வழி தானவ ரூரெரித் தோன்வியன் சாக்கியனார் கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே. | [32] |
கதியே யடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த நிதியே நிமிர்புன் சடையமிர் தேநின்னை யென்னுள்வைத்த மதியே வளர்தில்லை யம்பலத் தாய்மகிழ் மாமலையாள் பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே. | [33] |
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில் நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே புழையார் கரியுரித் தோய் தில்லை நாத பொறுத்தருளே. | [34] |
பொறுத்தில னேனும்பல் நஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச் செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரானத் திரிபுரங்கள் கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே. | [35] |
அடுக்கிய சீலைய ராய்அக லேந்தித் தசையெலும்பில் ஒடுக்கிய மேனியோ டூணிரப் பாரொள் ளிரணியனை நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல இடுக்கிய பாதன்றன் தில்லை தொழாவிட்ட ஏழையரே. | [36] |
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய் மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை யம்பலத்துப் போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே. | [37] |
புண்ணிய னேயென்று போற்றி செயாது புலன்வழியே நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல் என்னுள் வந்திட் டண்ணிய னேதில்லை யம்பல வாஅலர் திங்கள் வைத்த கண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே. | [38] |
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை செறுத்தசிந் தாமணி யேதில்லை யாயென்னைத் தீவினைகள் ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ பிறர்என் னுறுதுயரை அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ வருஞ்சொ லரும்பழியே. | [39] |
பழித்தக் கவுமிக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும் அழித்திட் டிறைச்சி கலைய னளித்த விருக்குழங்கன் மொழித்தக்க சீரதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும் இழித்தக்க வென்னா தமிர்துசெய் தானென் றியம்புவரே. | [40] |
வரந்தரு மாறிதன் மேலுமுண் டோவயல் தில்லைதன்னுள் புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே நிரந்தர மாய்நின்ற வென்னையும் மெய்ம்மையின் தன்னடியார் தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மையிதே. | [41] |
தன்தாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழிதருவான் குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடையுடையோன் மன்றா டவும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கியங்கே ஒன்றார் இரண்டில் விழுவரந் தோசில வூமர்களே. | [42] |
களைக கணிலாமையுந் தன்பொற் கழல்துணை யாந்தன்மையும் துளைக ணிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையாம் தளைக ணிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரனென்றேன் வளைக ணிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே. | [43] |
வரித்தடந் திண்சிலை மன்மத னாதலும் ஆழிவட்டம் தரித்தவன் தன்மக னென்பதோர் பொற்புந் தவநெறிகள் தெரித்தவன் தில்லையுட் சிற்றம் பலவன் திருப்புருவம் நெரித்தலும் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே. | [44] |
நின்றில வேவிச யன்னொடுஞ் சிந்தை களிப்புறநீள் தென்தில்லை மாநட மாடும் பிரான்தன் திருமலைமேல் தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர் கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே. | [45] |
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன் விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன் இருப்புரு வச்சிந்தை யென்னைவந் தாண்டது மெவ்வணமோ பொருப்புரு வப்புரி சைத்தில்லை யாடல் புரிந்தவனே. | [46] |
புரிந்தஅன் பின்றியும் பொய்மையி லேயும் திசைவழியே விரிந்தகங் கைம்மலர் சென்னியில் கூப்பின் வியன்நமனார் பரிந்தவ னூர்புக லில்லை பதிமூன் றெரியவம்பு தெரிந்தவெங் கோன்தன் திரையார் புனல்வயற் சேண்தில்லையே. | [47] |
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டுமன்பு பூண்டிலை நின்னை மறந்திலை யாங்கவன் பூங்கழற்கே மாண்டிலை யின்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான் மீண்டனை யென்னையென் செய்திட வோசிந்தை நீவிளம்பே. | [48] |