சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
7.031
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் பண் - கொல்லி (திருவிடையாறு ) Audio: https://www.youtube.com/watch?v=BfEZ3QzwUjA |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.031  
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்
பண் - கொல்லி (திருத்தலம் திருவிடையாறு ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம், சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர், பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே. | [1] |
சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர் ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப் பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர் எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [2] |
கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம், விடங்களூர், திரு வெண்ணி, அண்ணாமலை, வெய்ய படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான், பரஞ்சோதி, இடம் கொள் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [3] |
கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம், பிச்சை ஊர் திரிவான்-கடவூர், வடபேறூர், கச்சி ஊர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை, இச்சை ஊர் எமது அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [4] |
நிறையனூர், நின்றியூர், கொடுங்குன்றம், அமர்ந்த பிறையனூர், பெருமூர், பெரும்பற்றப் புலியூர், மறையனூர், மறைக்காடு, வலஞ்சுழி, வாய்த்த இறையனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [5] |
திங்களூர், திரு ஆதிரையான் பட்டினம் ஊர், நங்களூர், நறையூர், நனி நால் இசை நாலூர், தங்களூர், தமிழான் என்று பாவிக்க வல்ல எங்களூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [6] |
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன், தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல் எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி, இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [7] |
தேசனூர், வினை தேய நின்றான்-திரு ஆக்கூர், பாசனூர், பரமேட்டி, பவித்திர பாவ- நாசன்-ஊர் நனிபள்ளி, நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [8] |
பேறனூர், பிறைச் சென்னியினான்-பெருவேளூர், தேறனூர், திருமாமகள் கோன் திருமால் ஓர்- கூறன்-ஊர் குரங்காடு துறை, திருக்கோவல், ஏறனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. | [9] |
ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன் தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக் கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே. | [10] |