மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக் காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.
|
1
|
மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவர் யாரெனின் முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றேதம் பாடறி வீரே.
|
2
|
முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர் பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.
|
3
|
புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன் புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம் புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.
|
4
|
பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன் வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும் நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.
|
5
|
Go to top |
நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள் ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.
|
6
|
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம் வானோர் உலகம் வழிபட மீண்டவன் தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
|
7
|
வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள் இந்திர னாதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது அந்தர வானத்தின் அப்புற மாமே.
|
8
|
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள் எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார் உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத் தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.
|
9
|
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.
|
10
|
Go to top |
அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம் சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.
|
11
|
வள்ளல் தலைவனை வானநன் னாடனை வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று) உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.
|
12
|
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.
|
13
|
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவனடி புண்ணிய லோகம் திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும் வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.
|
14
|
வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில் தானகம் இல்லாத் தனியாகும் போதகன் கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும் பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.
|
15
|
Go to top |
விதியது மேலை யமரர் உறையும் பதியது பாய்புனற் கங்கையும் உண்டு துதியது தொல்வினைப் பற்றறு விக்கும் மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.
|
16
|
மேலது வானவர் கீழது மாதவர் தானிடர் மானுடர் கீழது மாதனம் கானது கூவிள மாலை கமழ்சடை ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.
|
17
|
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி ஆழும் சுனையும் அடவியும் அங்குளன் வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.
|
18
|
உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும் நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல் செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.
|
19
|
பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன் பரிசறித் தங்குளன் மாருதத் தீசன் பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப் பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.
|
20
|
Go to top |
அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும் பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள் தந்த உலகெங்குந் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
|
21
|
முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும் அத்தன் உருவம் உலகே ழெனப்படும் அத்தன்பா தாள அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.
|
22
|
ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச் சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும் ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன் ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.
|
23
|
அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன் பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன் கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும் தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.
|
24
|
உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன் பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.
|
25
|
Go to top |
பராபர னாகிப்பல் லூழிகள் தோறும் பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே.
|
26
|
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம் காற்றது ஈசன் கலந்துநின் றானே.
|
27
|
திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின் மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும் முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.
|
28
|
அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனு மாகி நவின்றா உலகுறு நம்பனு மாமே.
|
29
|
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.
|
30
|
Go to top |
படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.
|
31
|
ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும் வாச மலர்போல் மருவிநின் றானே.
|
32
|
இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.
|
33
|
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும் கூறுதல் செய்து குரைகழல் நாடுவர் ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும் வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.
|
34
|
விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன் கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.
|
35
|
Go to top |
உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல் நித்திலச் சோதியன் நீலக் கருமையன் எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.
|
36
|
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே.
|
37
|
இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன் பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய் எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.
|
38
|
உணர்வது வாயுமே உத்தம மாயும் உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.
|
39
|
தன்வலி யால்உல கேழும் தரித்தவன் தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன் தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன் தன்வலி யாலே தடங்கட லாமே.
|
40
|
Go to top |
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.
|
41
|
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது
உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள்பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே. |
42
|
முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும் திதமுறு கொம்பு செவி துதிக் கை கால் மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.
|
43
|
ஆறு சமயம் முதலாம் சமயங்கள் ஊற தெனவும் உணர்க உணர்பவர் வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.
|
44
|
ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின் முத்தி விளைக்கும் முதல்வனு மாமே. 29,
|
45
|
Go to top |