நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப் பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்க்கக் கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.
|
1
|
துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி, அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி, கேசரி உண்மை பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.
|
2
|
சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம் ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை; ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி; நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.
|
3
|
தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்; ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால் ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
|
4
|
வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்; வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்; வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.
|
5
|
Go to top |
யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்; ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் ஆகத் தகுவேத கேசரி சாம்பவி; யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.
|
6
|
யோகிஎண் சித்தி அருளொளி வாதனை; போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி; ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை; யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.
|
7
|
துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்; அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும் தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே.
|
8
|
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை; ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை; தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை; காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.
|
9
|
தூநெறி கண்ட சுவடு நடுஎழும் பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்; மேனெறி கண்டது வெண்மதி மேதினி, நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே. 18,
|
10
|
Go to top |