ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந் தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு) ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.
|
1
|
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
|
2
|
உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.
|
3
|
பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து) அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.
|
4
|
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து அணியென லாய்நின்ற ஆறது போலத் தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.
|
5
|
Go to top |
கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல் நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம் சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து) அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.
|
6
|
உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்த இடந்தரு வாசலை மேல்திற வீரே. 25,
|
7
|