தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு) ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.
|
1
|
ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.
|
2
|
ஒளியாம் பரமும் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகும் சமயக் களியார் பரமும் கருத்துறை அந்தத் தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
|
3
|
ஆன நடமைந்(து) அகள சகளத்தன் ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம் ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.
|
4
|
பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம் மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து) ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.
|
5
|
Go to top |
வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக் கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப் பூதங்க ளாடப் புவனம் முழுதாட நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.
|
6
|
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில் ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.
|
7
|
தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சாத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே. 12,
|
8
|