சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.031   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை

திருநாரையூர்
Add audio link Add Audio
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.


1


முகத்தாற் கரியனென் றாலும்
தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை
உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்தரு நாரையூர்
அம்மான் பயந்தவெம்மான்
உகத்தா னவன்தன் னுடலம்
பிளந்த ஒருகொம்பனே.


2


கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.


3


பேசத் தகாதெனப் பேயெரு
தும்பெருச் சாளியுமென்
றேசத் தகும்படி ஏறுவ
தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும்
நுந்தையும் நீயுமிந்தத்
தேசத் தவர்தொழும் நாரைப்
பதியுட் சிவக்களிறே.


4


களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.


5


Go to top
மகத்தினில் வானவர் பல்கண்
சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப்
பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது
மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது
போலும் அடுமருப்பே.


6


மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை
வருந்தவெண்ணு கின்ற மலம்.


7


மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேபுன்னை வாழ்த்துவனே.


8


வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.


9


நாரணன் முன்பணிந் தேத்தநின்
றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர்
மன்னு சிவன்மகனே
காரண னேயெம் கணபதி
யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென்
பவர்க்கில்லை அல்லல்களே.


10


Go to top
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.


11


கோவிற் கொடிய நமன்தமர்
கூடா வகைவிடுவன்
காவில் திகழ்தரு நாரைப்
பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத்
தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள்
தான்பெற்ற யானையையே.


12


யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.


13


ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழும் நாரைப்
பதியுள் விநாயகனே.


14


கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.


15


Go to top
வானிற் பிறந்த மதிதவ
ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு
நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி
தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென்
றுரைப்பரிவ் வையகத்தே.


16


வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்கத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தையமர் வான்.


17


அமரா அமரர் தொழுஞ்சரண்
நாரைப் பதியமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ
னேகொடித் தேரவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத்
தோன்றின னேயெனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர
கத்தில் அழுந்துவரே.


18


அவம்தியா துள்ளமே அல்லற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.


19


நாந்தன மாமனம் ஏத்துகண்
டாயென்றும் நாண்மலரால்
தாந்தனமாக இருந்தனன்
நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேயைந்து செங்கைய
னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேயென்னை ஆண்ட
னேயெனக் கென்னையனே.


20


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாரையூர்
2.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரையினில் வந்த பாவம், உணர்
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.102   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காம்பினை வென்ற மென்தோளி பாகம்
Tune - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கடல் இடை வெங்கடு நஞ்சம்
Tune - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
5.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வீறு தான் உடை வெற்பன்
Tune - திருக்குறுந்தொகை   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
6.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
Tune - திருத்தாண்டகம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
11.031   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
Tune -   (திருநாரையூர் )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song lang tamil pathigam no 11.031