சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநாகேச்சுரம் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=DFxah8nE4aY   Add audio link Add Audio

பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.

1

சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில்
உற வார்கணை உய்த்தவனே! உயரும்
நறவு ஆர் பொழில் நாகேச்சுரநகருள்
அறவா! என, வல்வினை ஆசு அறுமே.

2

கல்லால்நிழல் மேயவனே! கரும்பின்
வில்லான் எழில் வேவ, விழித்தவனே!
நல்லார் தொழும் நாகேச்சுரநகரில்
செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே.

3

நகு வான்மதியோடு அரவும் புனலும்
தகு வார்சடையின் முடியாய்! தளவம்
நகு வார் பொழில் நாகேச்சுரநகருள்
பகவா! என, வல்வினை பற்றுஅறுமே.

4

கலைமான்மறியும் கனலும் மழுவும்
நிலைஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுரநகருள்
தலைவா! என, வல்வினைதான் அறுமே.

5
Go to top

குரை ஆர் கழல் ஆட நடம் குலவி,
வரையான்மகள் காண, மகிழ்ந்தவனே!
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே! என, நீங்கும், அருந்துயரே.

6

முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில்
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே!
நடை ஆர்தரு நாகேச்சுரநகருள்
சடையா! என, வல்வினைதான் அறுமே.

7

ஓயாத அரக்கன் ஒடிந்து அலற,
நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே!
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத்
தாயே! என, வல்வினைதான் அறுமே.

8

நெடியானொடு நான்முகன் நேடல் உற,
சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே!
நடு மா வயல் நாகேச்சுரநகரே
இடமா உறைவாய்! என, இன்புஉறுமே.

9

மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம்பாவியர் கட்டுரை விட்டு, உலகில்
நலம் பாவிய நாகேச்சுரநகருள்
சிலம்பா! என, தீவினை தேய்ந்து அறுமே.

10
Go to top

கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச்
சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாகேச்சுரம்
2.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
Tune - இந்தளம்   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
2.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,
Tune - செவ்வழி   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group