கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.
|
1
|
கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர். | |
மந்தம் ஆய் இழி மதக்களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி,
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும்
இயல்பினாரே.
|
2
|
சிறு அளவில் மதம் சொரியும் யானைக் கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன் தரக்கூடிய மரங்களையும் விழும்படி மோதி, அலைகளால் அடித்து வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது எழும் தன்மையர். | |
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி,
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே.
|
3
|
முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும் சந்தனமரம் இவற்றை வாரி, தள்ளி மோதும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பெருமை மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள் சிவகதி பெறுவது உறுதி. | |
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி,
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மறி உலாம் கையினர் மலர் அடி தொழுது எழ மருவும் உள்ளக்
குறியினார் அவர் மிகக் கூடுவார், நீடுவான் உலகின் ஊடே.
|
4
|
உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும் கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர். | |
கோடு இடைச் சொரிந்த தேன் அதனொடும் கொண்டல்
வாய்விண்ட முன்நீா
காடு உடைப் பீலியும் கடறு உடைப் பண்டமும் கலந்து நுந்தி,
ஓடு உடைக் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
பீடு உடைச் சடைமுடி அடிகளார் இடம் எனப் பேணினாரே.
|
5
|
மரக்கிளைகளில் சொரிந்த தேனோடு, மேகம் பெய்த முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில் விளையும் பண்டங்களும் உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை, பெருமையுடைய சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டுள்ளார். | |
| Go to top |
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மாமணி மிடற்று அடிகளை, நினைய, வல்வினைகள் வீடே.
|
6
|
அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைந்து போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும். | |
நீல மாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
ஏலமோடு, இலை இலவங்கமே, இஞ்சியே, மஞ்சள், உந்தி,
ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே.
|
8
|
போர்செய்யும் தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து வியப்படையும்படி செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல் அழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப் பொருட்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான், பிரமனும், திருமாலும் தம்மைத் தேடித் துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி ஒளிர்ந்த தலைவராவார். | |
பொரும் திறல் பெருங்கைமா உரித்து, உமை அஞ்சவே,
ஒருங்கி நோக்கி,
பெருந் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும்
பெருமைபோலும்
வருந் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
அருந்திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய
அடிகளாரே!
|
9
|
கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான கட்டுப் பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும். | |
கட்டு அமண் தேரரும், கடுக்கள் தின் கழுக்களும், கசிவு ஒன்று இல்லாப்
பிட்டர் தம் அற உரை கொள்ளலும்! பெரு வரைப் பண்டம் உந்தி
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைச்
சிட்டனார் அடி தொழ, சிவகதி பெறுவது திண்ணம் ஆமே.
|
10
|
பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர். | |
| Go to top |
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை,
காழியான்-அருமறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின்
ஊடே.
|
11
|