சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர் பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி நட்டனை, தொழ, நம் வினை நாசமே.
|
1
|
உயர்ந்தவனை , சிவனை , செழுஞ்சோதி வடிவானவனை , எட்டு மூர்த்தியை , கல்லாலநிழற்கீழ் அமரும் ஆசாரியனை , திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனைத் தொழுதால் நம்வினை நாசமாம் | |
பிரமன் மால் அறியாத பெருமையன், தருமம் ஆகிய தத்துவன், எம்பிரான், பரமனார், உறை பாண்டிக்கொடுமுடி கருமம் ஆகத் தொழு, மட நெஞ்சமே!
|
2
|
அறிவற்ற நெஞ்சமே ! பிரமனும் மாலும் அறியாத பெருமையனும் , தருமவடிவாகிய தத்துவ வடிவினனும் , எம்பிரானும் , பரமனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருப்பாண்டிக் கொடு முடியைத் தொழுவதே கருமமாகக் கொண்டு பணிவாயாக . | |
ஊசலாள் அல்லள்; ஒண்
|
3
|
ஒரு பெண் ஊசல் விளையாட்டும் கொண்டிலள் ; ஒள்ளிய கழல் அணிவாளுமல்லள் ; தேசமாம் திருப்பாண்டிக் கொடு முடி ஈசனே என்னும் இத்தனையேயல்லது வேறு பேசுமாறு ஒன்றும் அறியாதவள் ஆயினள் . | |
தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்; காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு; பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக் காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.
|
4
|
தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன் ; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன் . | |
நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர் இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக் கருக் கெடும்(ம்); இது கைகண்ட யோகமே.
|
5
|
புகழை உடைய வானவர், ஒருவர் முடியோடு மற்றொருவர் முடி நெருக்கும் கூட்டமாக நின்று, இருக்கு வேதம் உரைத்து, பணிந்து ஏத்த இருந்தவனுடைய ஊர், `திருக்கொடுமுடி` என்றலும் தீவினையின் கருக் கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும் . | |
| Go to top |