பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள் ஆங்கெனை யாண்டு கொண் டாடும் பிரானடித் தாமரைக்கே பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால் ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே.
|
1
|
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே.
|
2
|
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள் ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே.
|
3
|
உளமாம் வகைநம்மை யுய்யவந் தாண்டுசென் றும்பருய்யக் களமாம் விடமமிர் தாக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல் இளமான் விழித்ததென் றோஇன்றெம் மண்ண லிரங்கியதே.
|
4
|
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும் பூணிற் பொலிகொங்கை யாவியை யோவியப் பொற்கொழுந்தைக் காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே.
|
5
|
Go to top |
விலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க் கலங்கலைச் சென்றஅன் றுங்கலங் காய்கமழ் கொன்றைதுன்றும் அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானரு ளில்லவர்போல் துலங்கலைச் சென்றிதென் னோவள்ள லுள்ளந் துயர்கின்றதே.
|
6
|
தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று மலைத்தறி வாரில்லை யாரையுந் தேற்றுவ னெத்துணையுங் கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே.
|
7
|
நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற் கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன்சொல்லவில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித் தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே.
|
8
|
ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்தில்லை யம்பலம்போற் கோலத்தி னாள் பொருட் டாக வமிர்தங் குணங்கெடினுங் காலத்தி னான்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற் சீலத்தை நீயும் நினையா தொழிவதென் தீவினையே.
|
9
|
நின்னுடை நீர்மையும் நீயு மிவ்வாறு நினைத்தெருட்டும் என்னுடை நீர்மையி தென்னென்ப தேதில்லை யேர்கொண்முக்கண் மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே.
|
10
|
Go to top |
விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று மொழியாற் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே.
|
11
|
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய் மயிலைச் சிலம்பகண்டி யான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே.
|
12
|
கொடுங்கால் குலவரை யேழேழ் பொழிலெழில் குன்றுமன்று நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ லாந்தில்லை யீசன்வெற்பில் தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலந் தண்புனத்தே.
|
13
|
வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும் இடையிது வாய்பவளந் துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் றொடர்ந்துவிடா அடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போற் படிச்சந் தமுமிது வேயிவ ளேஅப் பணிமொழியே.
|
14
|
குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற்கமலத் தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின் இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்துணை யும்பகர்ந்த கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே.
|
15
|
Go to top |
பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப் புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய் நிணந்தாழ் சுடரிலை வேலகண் டேனொன்று நின்றதுவே.
|
16
|
கயலுள வேகம லத்தலர் மீது கனிபவளத் தயலுள வேமுத்த மொத்த நிரையரன் அம்பலத்தின் இயலுள வேயிணைச் செப்புவெற் பாநின தீர்ங்கொடிமேற் புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே.
|
17
|
எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக் குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத் தயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனநடக்கும் மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே.
|
18
|
ஆவியன் னாய்கவ லேல்அக லேமென் றளித்தொளித்த ஆவியன் னார்மிக்க வாவின ராய்க்கெழு மற்கழிவுற் றாவியன் னார்மன்னி யாடிடஞ் சேர்வர்கொ லம்பலத்தெம் ஆவியன் னான்பயி லுங்கயி லாயத் தருவரையே.
|
19
|
காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால் வாம்பிணை யால்வல்லி யொல்குத லால்மன்னு மம்பலவன் பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமுந் தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே.
|
20
|
Go to top |
நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய் ஆயத்த தாயமிழ் தாயணங் காயர னம்பலம்போல் தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே.
|
21
|
தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று சோதி வரிப்பந் தடியார் சுனைப்புன லாடல்செய்யார் போதிவர் கற்பக நாடுபுல் லென்னத்தம் பொன்னடிப்பாய் யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை யெய்துதற்கே.
|
22
|
காவிநின் றேர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத் தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென் ஆவியன் றேயமிழ் தேயணங் கேயின் றழிகின்றதே.
|
23
|
அகலிடந் தாவிய வானோ னறிந்திறைஞ் சம்பலத்தின் இகலிடந் தாவிடை யீசற்றொ ழாரினின் னற்கிடமாய் உகலிடந் தான்சென் றெனதுயிர் நையா வகையொ துங்கப் புகலிடந் தாபொழில் வாயெழில் வாய்தரு பூங்கொடியே.
|
24
|
தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர் சூழச்செய் தானம் பலங்கை தொழாரினுள் ளந்துளங்கப் போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேயென்னைநீ வாழச்செய் தாய்சுற்று முற்றும் புதைநின்னை வாணுதலே.
|
25
|
Go to top |
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர்போல் வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன் றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த அருநா ணளிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே.
|
26
|
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத் தனகொங்கை தேற்றகி லேஞ்சிவன் தில்லையன்னாள் நுலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையாற் சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே.
|
27
|
நீங்கரும் பொற்கழற் சிற்றம் பலவர் நெடுவிசும்பும் வாங்கிருந் தெண்கடல் வையமு மெய்தினும் யான்மறவேன் தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்புங் கோங்கரும் புந்தொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கைகளே.
|
28
|
சூளா மணியும்பர்க் காயவன் சூழ்பொழிற் றில்லையன்னாய்க் காளா யொழிந்ததென் னாருயிர் ஆரமிழ் தேயணங்கே தோளா மணியே பிணையே பலசொல்லி யென்னை துன்னும் நாளார் மலர்ப்பொழில் வாயெழி லாயம் நணுகுகவே.
|
29
|
பொய்யுடை யார்க்கரன் போலக லும்மகன் றாற்புணரின் மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும் மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான் பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே.
|
30
|
Go to top |
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|