நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றே ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று) ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! |
1
|
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! |
2
|
அம்பளிங்கு பகலோன்பால் அடைப்பற்றாய் இவள்மனத்தில் முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால் வம்பளிந்த கனியே ! என் மருந்தே ! நல் வளர்முக்கண் செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! |
3
|
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராது இஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார் மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
4
|
நீவாரா(து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்; ஆவா !என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும் தேவா !தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
5
|
Go to top |
முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும் பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம் அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
6
|
தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய் உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய் துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய் செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
7
|
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல் நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ் நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
8
|
ஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டு வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம் தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
9
|
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) இரங்காய்எம் பெருமானே ! முரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும் திருந்துவிழ(வு) அணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
10
|
Go to top |
ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும் காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம் சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. |
11
|