சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.001  
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே ! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே. | [1] |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.002  
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
உயர்கொடி யாடை மிடைபட லத்தின் ஓமதூ மப்பட லத்தின் பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச் சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்தசிற் றம்பலக் கூத்தா ! மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே வடிகள்என் மனத்துவைத் தருளே. | [1] |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.003  
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
உறவா கியயோ கமும்போ கமுமாய் உயிராளீ என்னும்என் பொன்னொருநாள் சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற மறவா என்னும் மணிநீர் அருவி மகேந்திர மாமலைமேல் உறையும் குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. | [1] |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.004  
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
இணங்கிலா ஈசன் நேசத்(து) இருந்தசித் தத்தி னேற்கு மணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக் குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப் பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. | [1] |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.005  
சேந்தனார் - திருவீழிமிழலை
Tune - (Location: திருவீழிமிழலை God: Goddess: )
ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் யோகநா யகனை அன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே. | [1] |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.006  
சேந்தனார் - திருவாவடுதுறை
Tune - (Location: திருவாவடுதுறை God: Goddess: )
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேய ஐயா ! திருவா வடுதுறை அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால் மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று) அருளாது ஒழிவது மாதிமையே. | [1] |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.007  
சேந்தனார் - திருவிடைக்கழி
Tune - (Location: திருவிடைக்கழி God: Goddess: )
மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளும் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.008  
கருவூர்த் தேவர் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணல் கட்செவிப் பகுவாய்ப் பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப் பாம்பணி பரமர்தம் கோயில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில் மழைதவழ் வளரிளம் கமுகம் திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.009  
கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம்
Tune - (Location: திருக்களந்தை ஆதித்தேச்சரம் God: Goddess: )
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத்(து) அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.010  
கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
Tune - (Location: திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் God: Goddess: )
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச் சடைவிரித்(து) அலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித் திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக் கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.011  
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை
Tune - (Location: திருமுகத்தலை God: Goddess: )
புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே பூரணா ! ஆரணம் பொழியும் பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும் பசுபதீ ! பன்னகா பரணா ! அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.012  
கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்
Tune - (Location: பொது -திரைலோக்கிய சுந்தரம் God: Goddess: )
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றே ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று) ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.013  
கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்
Tune - (Location: கங்கைகொண்ட சோழீசுவரர் God: Goddess: )
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன் முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள் கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.014  
கருவூர்த் தேவர் - திருப்பூவணம்
Tune - (Location: திருப்பூவணம் God: Goddess: )
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்(கு) இனியது காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின் பெருமையிற் பெரியதொன் றுளதே மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி வரைவளங் கவர்ந்திழி வைகைப் பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.015  
கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி
Tune - (Location: திருச்சாட்டியக்குடி God: Goddess: )
பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் கரியவா தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா சாட்டியக் குடியார் இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.016  
கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்
Tune - (Location: தஞ்சை இராசராசேச்சரம் God: Goddess: )
உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி ஒன்றுநூ றாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ஙனே அழகிதோ, அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள் இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்(து) இவர்க்கே. | [1] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.017  
கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
Tune - (Location: திருவிடைமருதூர் God: Goddess: )
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று மையசெங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே. | [1] |
Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.018  
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune - (Location: திருவாரூர் God: Goddess: )
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்திலோர் தனிவடங் கட்டி முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன் முரிவதோர் முரிவுமை அளவும் தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ தம்மொருப் பாடுல கதன்மேல் மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே. | [1] |
Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.019  
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல் தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. | [1] |
Back to Top
கண்டராதித்தர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.020  
கண்டராதித்தர் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப் பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள் என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே. | [1] |
Back to Top
வேணாட்டடிகள் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.021  
வேணாட்டடிகள் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார் கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! | [1] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.022  
திருவாலியமுதனார் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம் கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான் ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான் செய்ய பாதம் வந்தென் சிந்தையுள்ளிடம் கொண்டனவே. திருவடிகள் | [1] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.023  
திருவாலியமுதனார் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்திரு நடம்புரி கின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. | [1] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.024  
திருவாலியமுதனார் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க் கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச் செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே. | [1] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.025  
திருவாலியமுதனார் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர் பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச் சேலுக ளும்வயல்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்(து) ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே. | [1] |
Back to Top
புருடோத்தம நம்பி திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.026  
புருடோத்தம நம்பி - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
வாரணி நறுமலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலைமாலை வாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்து வந்திவைநம்மை மயக்குமாலோ சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான் ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார் ஆவியின் பரம்என்றன் ஆதரவே. | [1] |
Back to Top
புருடோத்தம நம்பி திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.027  
புருடோத்தம நம்பி - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம் ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ தேனல்வரி வண்டறையும் தில்லைச்சிற்றம்பலவர் நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே. | [1] |
Back to Top
சேதிராயர் திருவிசைப்பா
9 - Thirumurai
Pathigam 9.028  
சேதிராயர் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை நாய னாரை நயந்துரை செய்தன தூய வாறுரைப் பார்துறக் கத்திடை ஆய இன்பம்எய் தியிருப்பரே. | [1] |
Back to Top
சேந்தனார் திருப்பல்லாண்டு
9 - Thirumurai
Pathigam 9.029  
சேந்தனார் - கோயில்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. | [1] |