வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக் கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம் ஆனிற்பொலி யைந்தும்அமர்ந் தாடியுல கேத்தத் தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.
|
1
|
மயில்புல்குதண் பெடையோடுட னாடும்வளர் சாரல் குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம் அயில்வேன்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.
|
2
|
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக் குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம் கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல் வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.
|
3
|
பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல் குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம் பொருமாவெயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த பெருமானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.
|
4
|
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும் கூகைக்குல மோடித்திரி சாரற்கொடுங் குன்றம் நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை பாகத்தவ னிமையோர்தொழ மேவும்பழ நகரே.
|
5
|
Go to top |
கைம்மாமத கரியின்னின மிடியின்குர லதிரக் கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம் அம்மானென வுள்கித்தொழு வார்கட்கருள் செய்யும் பெம்மானவ னிமையோர்தொழ மேவும்பெரு நகரே.
|
6
|
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம் அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே.
|
7
|
முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம் ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே பிட்டானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.
|
8
|
அறையும்மரி குரலோசையை யஞ்சியடு மானை குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம் மறையும்மவை யுடையானென நெடியானென விவர்கள் இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.
|
9
|
மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக் குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம் புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப் பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.
|
10
|
Go to top |
கூனற்பிறை சடைமேன்மிக வுடையான்கொடுங் குன்றைக் கானற்கழு மலமாநகர் தலைவன்னல கவுணி ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார் ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.
|
11
|